வாட்ஸ்ஆப்பில் 'வாய்ஸ் மெசேஜ்' அனுப்புவோருக்கு ஒரு குட் நியூஸ்.!

அதிலும் கடந்த 2 வாரங்களில் பல புதிய அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

|

உலகின் மிகப்பிரபலமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளமான வாட்ஸ்ஆப், அதன் 1.5 பில்லியன் பயனர்களுக்கு மிகவும் எளிதான அம்சங்களை வழங்குவதில் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறது. அதிலும் கடந்த 2 வாரங்களில் பல புதிய அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

வாட்ஸ்ஆப்பில் 'வாய்ஸ் மெசேஜ்' அனுப்புவோருக்கு ஒரு குட் நியூஸ்.!

அதில் மிகவும் குறிப்பிட்டு கூறவேண்டிய அம்சங்கள் என்று பார்த்தால், ஸ்மார்ட்போனின் சேமிப்பகத்தில் இருந்து டெலிட் செய்த பின்பும் கூட, இரண்டாம் முறை மீடியா பைல்களை டவுன்லோட் செய்யக்கூடிய திறன் மற்றும் 'டிஸ்மிஸ் ஏஸ் அட்மின்' ஆகியவைகளை கூறலாம்.

இறுதியாக ஆண்ட்ராய்டு தளத்தில்.!

இறுதியாக ஆண்ட்ராய்டு தளத்தில்.!

அதனை தொடர்ந்து தற்போது பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்ஆப் அதன் 'சேவ்டு வாய்ஸ் மெசேஜஸ்' என்கிற அம்சத்தை உருட்டியுள்ளது. இந்த புதிய அம்சம் தற்போது 'கூகிள் ப்ளே பீட்டா வெர்ஷனில்' அணுக கிடைக்கிறது மற்றும் அந்த பதிப்பு 2.18.123 ஆகும். ஐஓஎஸ் பதிப்பில் வாய்ஸ் மெஸேஜை இழக்க முடியாத அம்சத்தை செயல்படுத்திய பிறகு, வாட்ஸ்ஆப் இறுதியாக, அந்த அம்சத்தை ஆண்ட்ராய்டு தளத்தில் இணைக்க தொடங்கியுள்ளது.

சேவ்டு வாய்ஸ் மெசேஜஸ் அம்சம் எப்படி வேலை செய்கிறது.?

சேவ்டு வாய்ஸ் மெசேஜஸ் அம்சம் எப்படி வேலை செய்கிறது.?

முன்னதாக, ஒரு பயனர் வாய்ஸ் மெசேஜை ரெக்கார்ட் அம்சத்தை பயன்படுத்தும் போது அவர் குறிப்பிட்ட சாட்டை விட்டு வெளியேற முடியாது. ஆனால் இனி ஒரு வாய்ஸ் மெசேஜை பதிவு செய்யும், அதே நேரத்தில் அழைப்புகள் அல்லது பேட்டரி தீர போகிறது அல்லது வேற ஆப்பிற்குள் நுழைய வேண்டும் என்றால், தாராளமாக வாட்ஸ்ஆப் சாட்டை விட்டு வெளியேறலாம்.

சரியாக உள்ளதா என்பதை பரிசோதிக்க விரும்பினால்.?

சரியாக உள்ளதா என்பதை பரிசோதிக்க விரும்பினால்.?

நீங்கள் பதிவு செய்த வரையிலான வாய்ஸ் மெசேஜ் ஆனது வாட்ஸ்ஆப்பில் சேமிக்கப்பட்டு இருக்கும். எனவே நீங்கள் மீண்டும் மற்றொரு முறை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. இப்படி சேவ்டு வாய்ஸ் மெசேஜஸ் அம்சம் வேலை செய்யும். பாதியில் விட்டுச்சென்ற வாய்ஸ் மெசேஜ் ஆனது சரியாக உள்ளதா என்பதை பரிசோதிக்க விரும்பினால், அதற்கும் ஒரு வழி இருக்கிறது. வெறுமனே ஹோம் ஸ்க்ரீன் செல்வதின் வழியாக வாய்ஸ் மெசேஜை கேட்க முடியும் என்று வெளியான WaBetaInfo அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கைகளை மேம்படுத்தல்.!

சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கைகளை மேம்படுத்தல்.!

வாட்ஸ்ஆப் பீட்டாவில், இந்த அம்சம் முன்னிருப்பாக ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு விட்டதால், வாட்ஸ்ஆப் பீட்டா பயனர்கள், உள்நுழையவும் இதை உடனடியாக பயன்படுத்தத் தொடங்கலாம். இதற்கிடையில், மே 25 அன்று ஐரோப்பாவில் பொது தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறையின் கீழ், வாட்ஸ்ஆப் அதன் சேவை விதிமுறைகளையும் தனியுரிமைக் கொள்கைகளையும் மேம்படுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் உள்ள எல்லா பயனர்களுக்கும்.!

உலகம் முழுவதும் உள்ள எல்லா பயனர்களுக்கும்.!

நடைமுறைக்கு வரும் புதிய கொள்கைகளோடு சேர்த்து, Request Account info என்கிற ஒரு அம்சமும் இடம் பெற உள்ளது. வாட்ஸ்ஆப் பயன்பாட்டின் அடுத்த பதிப்பானது, மே 25-ல் வெளியானால், இந்த அம்சத்தினை அனைவராலும் பார்க்க முடியும். இந்த அம்சமானது வாட்ஸ்ஆப் மூலம் சேகரிக்கப்படும், பயனர் ஒருவரின் சிறிய அளவிலான டேட்டாவை டவுன்லோட் செய்ய உதவும். இந்த அம்சமானது, உலகம் முழுவதும் உள்ள எல்லா பயனர்களுக்கும் உருட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு முறை ரெக்வஸ்ட் செய்த பின்னர்.!

ஒரு முறை ரெக்வஸ்ட் செய்த பின்னர்.!

"ரெக்வஸ்ட் அக்கவுண்ட் இன்ஃபோ" என்கிற இந்த புதிய அம்சமானது, வாட்ஸ்ஆப்பின் செட்டிங்ஸ்-ல் காணப்படும். அதை கிளிக் செய்து பின்னர் 'அக்கவுண்ட்' என்கிற விருப்பத்தை கிளிக் செய்ய "ரெக்வஸ்ட் அனுப்பட்டது" என்கிற நோட்டிபிகேஷன் கிடைக்கும். கோரிக்கை நிகழ்த்தப்பட்ட தேதியிலிருந்து அடுத்த மூன்று நாட்களுக்குள் வந்து சேரும். ஒரு முறை ரெக்வஸ்ட் செய்த பின்னர் நடுவில் ரத்து செய்ய முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அக்கவுண்ட்டை டெலிட் செய்ய வேண்டும்.!

அக்கவுண்ட்டை டெலிட் செய்ய வேண்டும்.!

ஒருவேளை கண்டிப்பாக அனுப்பிய ரெக்வஸ்ட்டை கேன்சல் செய்ய வேண்டும் என்றால், ஒன்று உங்களின் வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்டை டெலிட் செய்ய வேண்டும் அல்லது, வாட்ஸ்ஆப் நம்பரை மாற்ற வேண்டும். இந்த இரண்டில் ஒன்றை செய்வதின் விளைவாக, அனுப்பட்ட கோரிக்கையை ரத்து செய்யலாம். உங்கள் அக்கவுண்ட் சார்ந்த விவரங்கள் டவுன்லோட் செய்ய திறந்து விடப்பட்டுள்ளது என்கிற தகவலை வாட்ஸ்ஆப் உங்களுக்கு அனுப்பி வைக்கும். அந்த அறிவிப்பு கிடைத்த அடுத்த சில வாரங்களுக்குள் அதை நீங்கள் டவுன்லோட் செய்ய வேண்டும். இல்லையெனில் அது வாட்ஸ்ஆப் சேவையகங்ளில் இருந்து குறிப்பிட்ட தகவல்கள் நீக்கப்படும்.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
சுவாரசியம் என்னவெனில்.!

சுவாரசியம் என்னவெனில்.!

மேற்குறிப்பிட்ட அதே வழிமுறைகளை பின்பற்ற இறுதியாக "டவுன்லோட் ரிப்போர்ட்" என்கிற ஒரு விருப்பம் உங்களுக்கு கிடைக்கும். அதை டாப் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும். டவுன்லோட் செய்யப்பட்ட டேட்டா ஆனது ஸிப் பைல் வடிவத்தில் அணுக கிடைக்கும் என்பது குறிப்பிடத் தக்கது. சுவாரசியம் என்னவெனில், டவுன்லோட் செய்த ரிப்போர்ட்டை நிரந்தரமாக டெலிட் செய்யும் ஒரு அம்சத்தையும் வாட்ஸ்ஆப் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
WhatsApp launches another feature – See how it works and benefits users. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X