தொழிலதிபர்களுக்காக புதிய வடிவில் வாட்ஸ் அப் செயலி

By Siva
|

உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தலமான ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ் அப் செயலி பொதுவான வாடிக்கையாளர்களுக்கு நல்ல பொழுதுபோக்காக இருந்து வரும் நிலையில் தற்போது தொழிலதிபர்களுக்கும் உதவும் வகையில் புதுவித செயலியாக மாறவுள்ளது.

தொழிலதிபர்களுக்காக புதிய வடிவில் வாட்ஸ் அப் செயலி

ஏற்கனவே பல தொழிலதிபர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை வாட்ஸ் அப் உதவியுடன் தொடர்பு கொண்டு வரும் நிலையில் தற்போதைய புதிய வசதி தொழிலதிபர்களுக்கு மேலும் உதவும் வகையில் மாறவுள்ளது

வாட்ஸ் அப் குறித்த குறிப்புகளில் தற்போது வெரிபைட் தொழிலதிபர்கள் மற்றும் வெரிபைட் இல்லாத தொழிலதிபர்களை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம்

நீங்கள் வாட்ஸ் அப் மூலம் ஒரு தொழிலதிபரிடம் சேட்டிங் செய்யும்போது அவர்களுடைய புரொபைலை பார்த்து அதில் க்ரீன் மார்க் இருந்தால் அவர் வெரிபைட் தொழிலதிபர் என்பதை கண்டு கொள்ளலாம்

ஆசியாவில் உள்ள சரியான தொழிலதிபர்களை இனம் கண்டு வாட்ஸ் அப் நிறுவனம் க்ரீன் டிக் மார்க் கொடுத்துள்ளதால் வணிகத்தை தொடங்குவதற்கு முன்னர் அந்த தொழிலதிபர் நம்பகத்தன்மை உடையவர் என்பதை இதன்மூலம் உறுதி செய்து கொள்ளலாம். அதே நேரத்தில் கிரே கலருடன் கூடிய கேள்விகுறி இருந்தால் அந்த பிசினஸ்மேன் வாட்ஸ் அப் பயனாளியாக இருந்தாலும் அவர் இன்னும் வெரிபைட் செய்யப்படாதவர் என்பதை குறிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இதற்காகத்தான் சரியான தொழிலதிபர்களை இனம் கண்டுகொள்ள வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ள புதிய வசதி வாட்ஸ் அப் பிசினஸ் என்ற புதிய வகை செயலி

வாட்ஸ் அப் பிசினஸ் செயலிக்கான சோதனைப் அம்சமாக உங்களுடன் நாங்கள் உருவாக்கிய புதிய அம்சங்களை நீங்கள் ஆரம்பத்தில் அணுகியுள்ளீர்கள்.

இந்த புதிய பயன்பாட்டை வழங்குவதில் நீங்கள் பரிசோதிக்கும்போது, உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதனால் நாங்கள் தயாரிப்பு மேம்படுத்த முடியும் என்று கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த செயலி குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது

ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேவினுள் கைரேகை ஸ்கேனர் கொண்டுவர விவோ திட்டம்.!ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேவினுள் கைரேகை ஸ்கேனர் கொண்டுவர விவோ திட்டம்.!

வாட்ஸ் அப் வணிகம் வழக்கமான வாட்ஸ் அப் செயலியில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. இந்த செய்லியின் லோகோ வழக்கமான போன் என்ற லோகோவுக்கு பதிலாக B என்ற புதிய பப்பிள் போன்று மாற்றப்பட்டுள்ளது. எனினும், டவுன்லோடு செய்த பிறகு, பயன்பாட்டை வாட்ஸ் அப் பிசினஸ் என்றே குறிப்பிடப்பட்டிருக்கும்

இந்த புதிய செயலியில் சில சுவாரஸ்யமான விவரங்கள் உள்ளன. இதில் ஆட்டோ ரெஸ்பான்ஸ் , ஒரு தொழிலதிபரின் புரபைலை உருவாக்குவது, சேட்டிங் மற்றும் அனாலிட்டிக்ஸ் ஆகியவை உண்டு. மேலும் உங்களது அனுபவங்களை இதில் பதிவு செய்யும் வசதியும், உங்கள் அக்கவுண்டை நீங்கள் எந்த நேரமும் பிளாக் செய்யும் வ்சதியும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது

வாட்ஸ் அப் பிசினஸ் செயலியை டவுன்லோடு செய்வதற்கு முன்னர் முதலில் அந்த செயலி ஒரிஜினல் தானா? என்பதை உறுதி செய்து கொண்டு பின்னர் டவுன்லோடு செய்யவும். ஏனெனில் சமீபத்தில் கூகுள் ப்ளே ஸ்டோரில் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் ஆகிய செயலிகளின் போலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
The business app is currently being tested by a private group of testers and the company will introduce it as WhatsApp Business-a standalone app.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X