சத்தமின்றி வாட்ஸ்அப்-ல் வரப்போகும் புத்தம் புதிய அம்சம்.! என்ன தெரியுமா?

|

வாட்ஸ்அப் செயலி ஆனது உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர் என்றுதான் கூறவேண்டும், குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் புதிய புதிய வசதிகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

நிறுவனத்திற்கு சொந்தமான

அதன்படி பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் செயலியில் அவ்வப்போது பயனர்களின் வசதிக்காக புதிய அம்சங்கள் இணைக்கப்படும். சமீபத்தில் ஞசு கோடு மூலம் புதியவர்களை உள்ளே இணைக்கும் அம்சம் கொண்டுவரப்பட்டது. பின்பு அனைவரும் எதிர்பார்க்கப்படும் பணப்பறிமாற்றம் செய்யும் வசதியும் விரைவில் கொண்டுவரப்பட இருக்கிறது

8 மணிநேரம், ஒரு வாரம் மற்றும் ஓராண்டுக்கு

இந்நிலையில் தேவையற்ற அல்லது முக்கியத்துவம் இல்லாத சாட்களை நிரந்தரமாக மியூட் செய்து வைக்கும் அம்சம் புதிதாக இணைக்கப்பட உள்ளது. இந்த வசதி மூலம் 8 மணிநேரம், ஒரு வாரம் மற்றும் ஓராண்டுக்கு ஒரு சாட்-ஐ மியூட் செய்து வைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

டிபிகேஷன் காட்டாது.

குறிப்பாக இந்த வசதியைக் கொண்டு நீங்கள் மியூட் செய்வதால் அந்த சாட்டில் புதிய மெசேஜ் வரும் போது, கண்டிப்பாக நோடிபிகேஷன் காட்டாது. மேலும் சாட்டிங்கிற்கும் இந்த மியூட் வசதி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அழகான தோற்றத்துடன் மிரட்டலான அம்சங்களுடன் Oppo Watch அறிமுகம்! விலை என்ன தெரியுமா?அழகான தோற்றத்துடன் மிரட்டலான அம்சங்களுடன் Oppo Watch அறிமுகம்! விலை என்ன தெரியுமா?

என்பதற்கு பதிலாக

தற்சமயம் ஓராண்டு என்பதற்கு பதிலாக நிரந்தரமாக என்று புதிய அம்சம் சேர்க்கப்பட உள்ளது, பின்பு இந்த அம்சம் தற்சமயம் பீட்டா வெர்சன் பீட்டா வெர்சன் பரிசோதனையில் உள்ளது. மேலும் இதற்கான அப்டேட், விரைவில் ஆண்ட்ராய்டு மறறும் ஐஒஎஸ் பயனர்களுக்கு வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

செய்து வருகிற

முன்னதாகபல சாதனங்களில் ஒரே வாட்ஸ்அப் கணக்கைப் பயன்படுத்துவதற்கான சாத்தியம் குறித்து வாட்ஸ்அப் நிறுவனம் பல காலமாக யோசனை செய்து வருகிறது. குறிப்பாகப் பயனர்களின் பாதுகாப்பிற்குப் பாதிப்பு இல்லாமல் இந்த அம்சத்தை எப்படிக் கையாளுவது என்பதைத் தான் வாட்ஸ்அப் அதிகம் யோசித்து வந்தது. தற்பொழுது ஒருவழியாக இவர்களின் யோசனை செயலில் களமிறங்கியுள்ளது.

 WABetaInfo அறிக்கையில், வாட்ஸ்அப் நிறுவனம் தற்பொழுது அதன் பயன்பாட்டை மல்டிபிள் டிவை

வாட்ஸ்அப் நிறுவனத்தின் WABetaInfo அறிக்கையில், வாட்ஸ்அப் நிறுவனம் தற்பொழுது அதன் பயன்பாட்டை மல்டிபிள் டிவைஸ் உடன் இணைக்க தயாராகிவிட்டது. WABetaInfo அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது போல், இனி வாட்ஸ்அப் பயனர்கள் 4 சாதனங்களுடன் இணைத்துக்கொள்ளும் ஒரு புதிய அம்சத்தைச் சாத்தியமாக்கியுள்ளது. இந்த அம்சம் தற்பொழுது இன்னும் வளர்ச்சியில் உள்ளது.

Realme 6i ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று முதல் துவக்கம்! விலை மற்றும் சலுகை விபரம்!Realme 6i ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று முதல் துவக்கம்! விலை மற்றும் சலுகை விபரம்!

 அனைத்து இணைக்கப்பட்ட

இதற்கிடையில், அனைத்து இணைக்கப்பட்ட சாதனங்களையும் நிர்வகிக்க ஒரு பிரத்தியேகமான UI பயன்முறையை உருவாக்க வாட்ஸ்அப் முயன்று வருகிறது. பீட்டா பயனர்களுக்கு இந்த செயல் இயக்கப்பட்டிருக்கும் போது, இணைக்கப்பட்ட சாதனங்கள் பிரிவு தோன்றும். இந்த பிரிவு பயனருக்கு புதிய சாதனத்தைச் சேர்க்க உதவும், மேலும் தற்போதைய வாட்ஸ்அப் வெப் / டெஸ்க்டாப் பிரிவைப் போலவே, இது இணைக்கப்பட்ட எல்லா சாதனங்களையும் உங்கள் வாட்ஸ்அப் கணக்கில் காண்பிக்கும்.

வாட்ஸ்அப் மற்றொரு அம்சத்தையும்

அதேபோல், வாட்ஸ்அப் மற்றொரு அம்சத்தையும் தீவிரமாகச் சோதனை செய்து வருகிறது. வாட்ஸ்அப் இல் நீங்கள் தேடும் சில விவரங்களை மேம்பட்ட தேடல் முறை தேட அட்வான்ஸ்டு சர்ச் மோடு என்ற அம்சத்தை வாட்ஸ்அப் தனது 2.20.117 அண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் சோதனை செய்து வருகிறது. இந்த 2.20.196 பீட்டா புதுப்பிப்புகளில், அம்சத்திற்கான UI ஐ மேம்படுத்த வாட்ஸ்அப் செயல்பட்டு வருகிறது, இந்த அம்சம் ஒரு குறிப்பிட்ட செய்தி வகையைத் தேட அனுமதிக்கும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Whatsapp Is Working On Brand New Mute Always Option For Future Update: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X