Home
Apps

சந்தோஷம் தாங்க முடியலயே: 2 முக்கியமான அம்சங்களை கொண்டுவரும் WhatsApp.!

கடந்த ஆண்டு வாட்ஸ்அப் நிறுவனம் எக்கச்சக்கமான புதிய அம்சங்களைக் கொண்டுவந்தது. அதேபோல் இந்த ஆண்டு பல அசத்தலான புதிய அம்சங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது வாட்ஸ்அப். குறிப்பாக வாட்ஸ்அப் செயலியில் வரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

இந்நிலையில் வாட்ஸ்அப் செயலியில் விரைவில் இரண்டு புதிய அம்சங்கள் வர உள்ளதாகத் தகவல் தெரிக்கப்பட்டுள்ளது. அதாவது வாட்ஸ்அப் கால்களை செடியூல் (நேரத்தைத் திட்டமிடும்) செய்யும் அம்சம், வாய்ஸ் மெசேஜ்களை எழுத்துக்களாக மாற்றும் அம்சம் போன்றவற்றை விரைவில் கொண்டுவர உள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்.

சந்தோஷம் தாங்க முடியலயே: 2 முக்கியமான அம்சங்களை கொண்டுவரும் WhatsApp.!

கால் செடியூல் அம்சம்

மேலும் இது தொடர்பாக WaBetaInfo தளத்தில் ஸ்கிரீன்ஷாட்டுகளும், சில விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இப்போது அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது செடியூல் செய்யும் வசதி எப்படி என்றால், நீங்கள் ஒருவருக்குக் கால் செய்யும் போது, ஒரு அட்டவணை ஆப்ஷன் காட்டப்படும். அதை கிளிக் செய்யும் போது நீங்கள் எப்போது கால் செய்ய வேண்டும் என்பதை திட்டமிடலாம். பின்பு இதில் தலைப்பு, தேதி, நேரம் போன்ற ஆப்ஷன்களை பயன்படுத்தி கால் செய்யும் விவரத்தைக் குறித்து வைத்துக் கொள்ளலாம்.

அலுவலக வேலை பார்பவர்களுக்கு கால் செடியூல் அம்சம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம். பின்பு மீட்டிங்கில் பங்கேற்பவர்களுக்கு வாட்ஸ்அப் ஒரு ரிமைன்டர் அனுப்பும். குறிப்பாக கால் தொடங்கும் போது பயனர்களுக்கு அறிவிக்கப்படும். ஒருவேளை யாராவது கால் செய்ய மறந்துவிட்டால் கூட, இந்த அம்சம் அவர்களுக்கு ஞாபகப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தோஷம் தாங்க முடியலயே: 2 முக்கியமான அம்சங்களை கொண்டுவரும் WhatsApp.!

வாய்ஸ் மெசேஜ்களை எழுத்துக்களாக மாற்றும் அம்சம்

அதேபோல் வாட்ஸ்அப் நிறுவனம் இன்னொரு அட்டகாசமான அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மெசேஜ்களை அப்படியே எழுத்துக்களாக மாற்றிப் படிக்க முடியும். இருந்தபோதிலும் இந்த அம்சம் முதலில் ஆங்கில மொழிக்கு மட்டும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைக்கு வேறு மொழியில் வாய்ஸ் மெசேஜ் வந்தால் அது வேலை செய்யாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அம்சம் வாட்ஸ்அப் செயலியின் ஐஓஎஸ் பீட்டா பதிப்பில் காணப்பட்டது. குறிப்பாக கால் செடியூல் அம்சம் மற்றும் வாய்ஸ் மெசேஜ்களை எழுத்துக்களாக மாற்றும் அம்சம் தற்போது சோதனை முயற்சியில் உள்ளது. விரைவில் இந்த புதிய அம்சங்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

சந்தோஷம் தாங்க முடியலயே: 2 முக்கியமான அம்சங்களை கொண்டுவரும் WhatsApp.!

டெக்ஸ்ட் எடிட்டர்

இதுதவிர வாட்ஸ்அப் நிறுவனம் டெக்ஸ்ட் எடிட்டர் என்ற அம்சத்தையும் அதனுடன் வரைதல் கருவி (Drawing tool) என்ற அம்சங்களையும் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. புதிய வகையில் டெக்ஸ்ட் மெசேஜ்கள் அனுப்பலாம். கீபோர்ட் இன் மேலே உள்ள ஃபான்ட் ஐகானை கிளிக் செய்வதன் மூலம் வெவ்வேறு வகையில் டெக்ஸ்ட் மெசேஜ்களை அனுப்பும் விருப்பங்கள் கொண்டு வரப்பட இருக்கிறது. அதே போல் டைப் செய்த எழுத்துக்களை இடது, மையம், வலது என்ற பகுதியில் சீரமைத்து (Alignment) செய்து கொள்ளலாம். மேலும் டெக்ஸ்ட் பேக் கிரவுண்ட் கலர்களையும் மாற்றிக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

கூடுதலாக புதிய எழுத்து முறைகள் (New Fonts) அம்சத்தையும் நிறுவனம் கொண்டு வர இருக்கிறது. அதன்படி நீங்கள் உங்கள் மெசேஜ்களை புதிய வடிவமைப்பில் வரும் காலங்களில் அனுப்பலாம். மேலும் பயனர்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் GIF களில் உங்களுக்கு விருப்பமான டெக்ஸ்ட்களை இணைத்துக் கொள்ளலாம். குறிப்பாக இந்த அம்சம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம்.

சந்தோஷம் தாங்க முடியலயே: 2 முக்கியமான அம்சங்களை கொண்டுவரும் WhatsApp.!

மேலும் டெலிகிராம் செயலிக்குப் போட்டியாக வாட்ஸ்அப் செயலி தொடர்ந்து பல அசத்தலான அம்சத்தை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது. பின்பு பயனர்களின் பாதுகாப்பு அம்சங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது வாட்ஸ்அப் நிறுவனம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
WhatsApp is rolling out new features that will allow you to schedule calls and write voice messages: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X