வாட்ஸ்ஆப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் இணைப்பு; ஆண்ட்ராய்டு வாசிகள் நிம்மதி.!

"டிஸ்மிஸ் அஸ் அட்மின்" என்கிற பெயரை கொண்டுள்ள அந்த அம்சமானது, ஒரு வாட்ஸ்ஆப் க்ரூப்பில் உள்ள சக அட்மினை டிஸ்மிஸ் செய்யும் உரிமையை அட்மின்களுக்கு வழங்கும்.

|

சில தினங்களுக்கு முன்னர் தான், ஒருமுறை டவுன்லோட் செய்யப்பட்டு ஸ்மார்ட்போனின் சேமிப்பகத்தில் இருந்து டெலிட் செய்யப்பட்ட மீடியா பைல்களை, மீண்டும் டவுன்லோட் செய்யும் புதிய அம்சத்தினை வாட்ஸ்ஆப் அறிமுகம் செய்த்தது. அதற்கு அடுத்தபடியாக வாட்ஸ்ஆப் பீட்டா பதிப்பில் 'ரெக்வெஸ்ட் மணி' என்கிற அம்சம் காணப்பட்டது.

வாட்ஸ்ஆப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் இணைப்பு.!

ஒரு பயனர் தங்கள் நண்பர்களிடமிருந்தும், மொபைல் தொடர்புகளிலிருந்தும் பணம் அனுப்பமாறு கோரிக்கைகளை நிகழ்த்த அனுமதிக்கும் 'ரெக்வெஸ்ட் மணி' அம்சமானது எப்போது பொது பயனர்களுக்கு உருட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலைப்பாட்டில், வாட்ஸ்ஆப் நிறுவனம், சத்தமின்றி அதன் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பதிப்புகளில் "டிஸ்மிஸ்" அம்சத்தினை இணைத்துள்ளது.

"டிஸ்மிஸ் அஸ் அட்மின்.!

வாட்ஸ்ஆப்பின் ஐஓஎஸ் 2.18.41 வெர்ஷன் மற்றும் ஆண்ட்ராய்டின் 2.18.116 வெர்ஷனில் ஒரு புதிய அம்சம் காணப்பட்டுள்ளது. "டிஸ்மிஸ் அஸ் அட்மின்" என்கிற பெயரை கொண்டுள்ள அந்த அம்சமானது, ஒரு வாட்ஸ்ஆப் க்ரூப்பில் உள்ள சக அட்மினை டிஸ்மிஸ் செய்யும் உரிமையை அட்மின்களுக்கு வழங்கும்.

மிகவும் தாமதமாகவே கிடைத்துள்ளது.!

மிகவும் தாமதமாகவே கிடைத்துள்ளது.!

முன்னரே எதிர்பார்க்கப்பட்ட இந்த அம்சமானது மிகவும் தாமதமாகவே கிடைத்துள்ளது என்பதும், கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதமே, இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக பரிசோதிக்கப்படும் என்று என்று கூறப்பட்டு இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வெறுமனே டாப் செய்தால் போதும்.!

வெறுமனே டாப் செய்தால் போதும்.!

இந்த அம்சத்தின் பிரதான நோக்கமே - சக அட்மின்களை நீக்குவதற்கான வழிமுறையை எளிமை ஆக்குவதே ஆகும். நேற்றுவரை ஒரு மெம்பரை, அட்மின் பதவியை நீக்க வேண்டும் எனில், அவரை க்ரூப்பை விட்டு ரிமூவ் செய்து பின்னர் மீண்டும் ஆட் செய்ய வேண்டியதாக இருக்கும். இனி அந்த நீளமான செயலமுறைக்கு அவசியம் இருக்காது. வெறுமனே "டிஸ்மிஸ் அஸ் அட்மின்" அம்சத்தினை டாப் செய்தால் போதும்.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
டிஸ்மிஸ் செய்வது எப்படி.?

டிஸ்மிஸ் செய்வது எப்படி.?

இந்த அம்சத்தை சோதிக்க, க்ரூப் இன்ஃபோ சென்று > மெம்பரின் ப்ரொபைல் விவரத்தை டாப் செய்யவும். பின்னர் பட்டியலிடப்படும் விருப்பங்களில் "டிஸ்மிஸ் அஸ் அட்மின்" விருப்பமும் காட்சிப்படும். அந்த விருப்பத்தை டாப் செய்ய குறிப்பிட்ட மெம்பரின் அட்மின் பதவி திரும்பப் பெறப்படும்.

Best Mobiles in India

English summary
WhatsApp is Finally Rolling Out the Dismiss as Admin Feature. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X