Home
Apps

வாட்ஸ்அப் குரூப்: இனி அந்த சிக்கல் இருக்காது.! வரப்போகிறது புதிய அப்டேட்.!

வாட்ஸ்அப் செயலியில் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு புதிய அப்டேட்-ஐ வெளியிட உள்ளது.

 புதிய அப்டேட் உதவியுடன் நீங்கள்

குறிப்பாக இந்த புதிய அப்டேட் உதவியுடன் நீங்கள் யாருக்கும் தெரிவிக்காமல் குரூப்-ல் இருந்து சத்தமில்லாமல் வெளியேறலாம். அதன்படி வாட்ஸ்அப் குரூப்-ல் இருந்து வெளியேறும் பட்சத்தில் அந்த நபர் மட்டுமின்றி சம்மந்தப்பட்ட குரூப் அட்மினுக்கு மட்டுமே அதற்கான நோட்டிபிகேஷன் செல்லும்.

ல் ஒருவர் க்ரூப்-ல் இருந்து வெளியேற

அதேபோல் ஒருவர் குரூப்-ல் இருந்து வெளியேறி இருப்பது குரூப்-ல் உள்ள மற்றவர்களால் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதன் மூலம் பயனர்கள் தேவையற்ற குரூப்களில் இருந்து வெளியேறுவது எளிதாக்கப்படும்.

ஒரு குழுவில் இருந்து உறுப்பினர்

முன்பு ஒரு குரூப்-ல் இருந்து உறுப்பினர் வெளியேறும்போது, வாட்ஸ்அப் தானாக உருவாக்கிய அறிவிப்பை காட்டுகிறது. பின்பு இந்த தகவல் குரூப்-ல்உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தும். ஆனால் இனிமேல் இந்த சிக்கல் இருக்காது.

ப் நிறுவனமானது இன்னொரு

அதேபோல் வாட்ஸ்அப் நிறுவனமானது இன்னொரு புதிய அம்சத்தில் செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. WABetaInfo வெளியிட்ட தகவலின்படி, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களுக்கு எமோஜி மூலம் ரிப்ளை செய்யும் வசதி சோதனை இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. எனவே இந்த புதிய அம்சம் விரைவில் பயனர்களுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த Quick Reactions வசதி மூலம்

மேலும் இந்த Quick Reactions வசதி மூலம் இனிமேல் வாட்அப்பில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஸ்டேட்டஸ் அப்டேட்களுக்கு உடனடியாக எமோஜி அனுப்பலாம். அதுவும் மடித்த கைகள், கைதட்டல் கைகள், பார்ட்டி பாப்பர், சிரித்த முகம், கண்ணீருடன் முகம் போன்ற எமோஜிகள் ஆப்ஷனாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலின்படி ஸ்டேட்டஸ்களுக்கு ரிப்ளை

வெளிவந்த தகவலின்படி ஸ்டேட்டஸ்களுக்கு ரிப்ளை செய்ய 8 எமோஜிகள் ஆப்ஷனாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த எமோஜிகள் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
WhatsApp is bring a silent exit update from the group: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X