WhatsApp-இல் குரூப் சாட் செய்வீங்களா? இனிமேல் 1 இல்ல, 2 இல்ல.. மொத்தமாக 4 புது பீச்சர்கள் ரெடியாச்சு!
உலகின் முன்னணி மெசேஜிங் பிளாட்பார்மான வாட்ஸ்அப் (WhatsApp) தனது குரூப் சாட் (Group Chat) யூசர்களுக்கு 4 புதிய பீச்சர்களை (Features) அதிகாரப்பூர்வமாக களமிறக்கி இருக்கிறது. இதில் மெசேஜ் பின்னிங் (Message Pinning), மெசேஜ் ஹிஸ்டரி ஷேரிங் (Message History Sharing), குரூப் ஸ்டேட்டஸ் (Group Status) மற்றும் அன்ரீட் சாட் ஃபில்டர்ஸ் (Unread Chat Filters) ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இந்த புதிய அப்டேட் (Update) மூலம் குரூப்பில் உள்ள முக்கியமான தகவல்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும், கவனம் செலுத்த வேண்டிய மெசேஜ்களை எளிதாக கண்டறியவும் முடியும். முதலாவதாக, பெர்மனென்ட் மெசேஜ் பின் (Permanent Message Pin) பீச்சர் மூலம், முக்கியமான மெசேஜ்களை குரூப்பில் நிரந்தரமாக பின் (Pin) செய்து வைத்துக் கொள்ள முடியும்.

இரண்டாவதாக, குரூப்பில் புதிய நபர்களை சேர்க்கும்போது முந்தைய மெசேஜ்களைப் பகிரும் டாகிள் (Toggle) ஆப்ஷனை வாட்ஸ்அப் நிறுவனம் ஏற்கனவே அறிமுகப்படுத்தியிருந்தது. இப்போது, ஒருவர் குரூப்பில் இணைந்த பிறகும் கூட, சாட்டில் (Chat) உள்ள அவரது பெயரை டேப் (Tap) செய்வதன் மூலம் முந்தைய சாட்டிங்கை அவருக்கு தனியாகப் பகிரும் ரெட்ரோஆக்டிவ் ஷேரிங் (Retroactive Sharing) வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.
இவ்வாறு பகிரப்படும் பழைய மெசேஜ்களும் வழக்கமான பர்சனல் சாட்கள் (Personal Chats) போலவே முழுமையான எண்ட்-டூ-எண்ட் என்கிரிப்ஷன் (End-to-End Encryption) செய்யப்பட்டு பாதுகாப்புடன் இருக்கும். மூன்றாவதாக, குரூப் ஸ்டேட்டஸ் வசதியின் மூலம் ஃபேமிலி குரூப் அல்லது ரன்னிங் கிளப் (Running Club) போன்ற குறிப்பிட்ட குரூப்களுக்கு மட்டும் பிரத்யேகமாக ஸ்டேட்டஸ் அப்டேட்களை (Status Updates) யூசர்கள் வைத்து கொள்ள முடியும்.
அந்த குரூப்பில் உள்ள அனைத்து மெம்பர்களுக்கும் இந்த ஸ்டேட்டஸ்களை பார்க்கவும், ரியாக்ட் (React) செய்யவும், தங்களது சொந்த ஸ்டேட்டஸாக சேர்க்கவும் முடியும். வழக்கமான ஸ்டேட்டஸ் போலவே இதுவும் 24 மணி நேரத்தில் மறைந்துவிடும். நான்காவதாக, மென்ஷன்ஸ் (Mentions) மற்றும் டைரக்ட் ரிப்ளை (Direct Reply) அடிப்படையில் படிக்காத மெசேஜ்களை தனியாக பிரித்து பார்க்கும் புதிய சாட் ஃபில்டர் வந்திருக்கிறது.
இந்த ஃபில்டரில் அட் ஆல் (@all) மெசேஜ்களும் காண்பிக்கப்படும் என்பதால், உங்களை தொடர்புபடுத்தி பேசப்பட்ட குரூப் சாட்டிங்கை தவறவிடாமல் உடனுக்குடன் படித்து தெரிந்துகொள்ளலாம். இதுதவிர, குரூப்பில் உள்ள ஒருவருக்கு மட்டும் தனியாக பதிலளிக்கும் பிரைவேட் ரிப்ளை (Private Reply) மற்றும் போல்ஸ் (Polls) வசதியில் அலோவ் மல்டிபிள் ஆன்சர்ஸ் (Allow Multiple Answers) ஆப்ஷனை ஆஃப் செய்யும் வசதியும் கொடுக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் ஒரு போலிங்கில் ஒரேயொரு பதிலை மட்டுமே தேர்வு செய்யுமாறு கட்டுப்படுத்த முடியும். மேலும், குரூப்பில் உள்ள உறுப்பினர்களின் பொறுப்புகள் அல்லது உறவுமுறைகளை எளிதாக அடையாளம் காண உதவும் மெம்பர் டேக்ஸ் (Member Tags) வசதியும் உள்ளது. இதில் டிரஷரர் (Treasurer) அல்லது சாமின் அப்பா (Sam's Dad) என்பது போன்ற அடையாள பெயர்களை யூசர்கள் தங்களுக்குள் வைத்து கொள்ளலாம்.
வாட்ஸ்அப்பின் இந்தப் புதிய குரூப் சாட் பீச்சர்கள் அனைத்தும் புதிய ஆப் அப்டேட் (App Update) வழியாக யூசர்களுக்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த அப்டேட் எப்போது அனைத்துப் யூசர்களுக்கும் முழுமையாக வந்து சேரும் என்ற அதிகாரப்பூர்வ ரோல்அவுட் டைம்லைன் (Rollout Timeline) விவரங்களை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.


Click it and Unblock the Notifications
