அட்றா சக்கை.! வாட்ஸ்ஆப்பில் வரிசைக்கட்டும் 5 புதிய அம்சங்கள்.! என்ஜாய்.!

வெளியான தகவலின்படி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களின் சமீபத்திய வாய்ஸ்ஆப் பீட்டா பதிப்புகளின் சோதனை தளங்களில் பல புதிய அம்சங்கள் காணப்படுகின்றன.

|

வணிக பயன்பாட்டிற்கான தனிப்பட்ட வாட்ஸ்ஆப் அறிமுகத்தை தொடர்ந்து வாட்ஸ்ஆப் நிறுவனம் மேலும் பல புதிய அம்சங்களை உருட்ட திட்டமிட்டுள்ளது. அதை நிரூபிக்கும் பொருட்டு வாட்ஸ்ஆப் அதன் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பின் கீழ் பல புதிய அம்சங்களை சோதனை செய்து வருவதாக தகவலொன்று வெளியாகியுள்ளது.

வெளியான தகவலின்படி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களின் சமீபத்திய வாய்ஸ்ஆப் பீட்டா பதிப்புகளின் சோதனை தளங்களில் பல புதிய அம்சங்கள் காணப்படுகின்றன. இரண்டு தளங்களிலும் சேர்த்து மொத்தம் 6 புதிய அம்சங்கள் காணப்பட்டுள்ளது. அடுத்த வாட்ஸ்ஆப் அப்டேட்டில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள புதிய அம்சங்கள் என்னென்ன.? அதன் நன்மைகள் என்னென்ன என்பதை விரிவாக காண்போம்

ஆட் க்ரூப் டிஸ்க்ரிப்ஷன் (க்ரூப் விவரம்).!

ஆட் க்ரூப் டிஸ்க்ரிப்ஷன் (க்ரூப் விவரம்).!

ஒரு வாட்ஸ்ஆப் க்ரூப்பிற்கான அட்மின்களை அந்த க்ரூப்பின் விளக்கத்தை (டிஸ்க்ரிப்ஷன்) சேர்க்க அனுமதிக்குமொரு அம்சத்தை வாட்ஸ்ஆப் பரிசோதிக்கிறது. அதாவது அடுத்த அப்டேட்டில் க்ரூப்பிற்கான ஒரு புதிய "எங்களைப் பற்றி" (About us) பிரிவு இருக்கும். அதை க்ரூப்பின் அனைத்து உறுப்பினர்களாலும் காணமுடியும்.

க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ சாட்.!

க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ சாட்.!

வாட்ஸ்ஆப் ஆனது தற்போது வரையிலாக ஒரு நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட நபர்களுடன் குரல் மற்றும் வீடியோ அழைப்புகளை நிகழ்த்தும் திறனை ஆதரவு அளிக்கவில்லை. ஆனால் அடுத்த அப்டேட்டில் இடம்பெறுமொரு புதிய க்ரூப் வாய்ஸ் அம்சமானது அதை சாத்தியப்படுத்தலாம்.

நபர்களின் எண்ணிக்கை.?

நபர்களின் எண்ணிக்கை.?

இந்த அம்சமானது ஏற்கனவே பீட்டா பதிப்பு 2.18.39-ல் காணப்பட்டுள்ளது. இது க்ரூப்பிற்குள் தொடர்புகளை நிகழ்த்தும் கால் மற்றும் வீடியோ பொத்தானைச் சேர்க்கிறது. இதன்கீழ் க்ரூப் வீடியோ அழைப்பையும் நிகழ்த்தலாம். இருப்பினும் ஒரு க்ரூப் அழைப்பில் சேர்க்கப்படக்கூடிய நபர்களின் எண்ணிக்கை பற்றி எந்த தகவலும் இல்லை.

வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு இடையில் மாறுதல்.!

வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு இடையில் மாறுதல்.!

வாய்ஸ் கால் அம்சத்தில் ஒரு புதிய "சுவிட்ச்" பொத்தானை வாட்ஸ்ஆப் உருவாக்குகிறது. இந்த விருப்பமானது பயனர்களை குரல் அழைப்பில் இருந்து வீடியோ அழைப்புகளுக்கு மாற அனுமதிக்கும்.

வெறுமனே டாப் செய்தால் போதும்.!

வெறுமனே டாப் செய்தால் போதும்.!

இதை நிகழ்த்த குறிப்பிட்ட பொத்தானை வெறுமனே 'டாப்' செய்தால் போதும். மறுபக்கத்தில் இருக்கும் நபர் உங்களின் அழைப்பை ஏற்றுக்கொண்டவுடன், குரல் அழைப்பு வீடியோ அழைப்பாக மாற்றப்படும். இந்த அம்சம் முதலில் வாட்ஸ்ஆப் பீட்டா பதிப்பு 2.180-ல் கவனிக்கப்பட்டது. இந்த அம்சம் ஏற்கனவே பல பயனர்களுக்கு உருட்டப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் வாட்ஸ்ஆப் பே அம்சம்.!

அனைவருக்கும் வாட்ஸ்ஆப் பே அம்சம்.!

சமீபத்தில் வாட்ஸ்ஆப் அதன் பயனர்களுக்கு வாட்ஸ்ஆப் பேமெண்ட்ஸ் வசதியை பரப்பியது. இருப்பினும், இந்த அம்சமானது முதல் கட்டத்தில் ஒரு மில்லியன் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்குமென்றும், அனைத்து சோதனைகளுக்குப் பின்னர் தான் நாட்டின் 200 மில்லியன் பயனாளர்களையும் சென்றடையுமென்றும் கூறப்பட்டுள்ளது. ஆக அடுத்த வாட்ஸ்ஆப் அப்டேட்டில் இந்த அம்சம் அனைவரு கும் கிடைக்க அதிக வாய்ப்புண்டு.

வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்கள்

வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்கள்

இது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வாட்ஸ்ஆப் அம்சங்களில் ஒன்றாகும். இது சார்ந்த பணிகள் தீவீரமாக நடக்கிறது. புதிய வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்கள் ஆனது ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ் போன் ஆகிய தளங்களில் மிக விரைவில் அறிமுகமாகலாம். அதாவது அடுத்துவரும் எந்தவொரு அப்டேட்டிலும் இது கிடைக்கும் என்று அர்த்தம்.

ஐபாட்டிற்க்கான வாட்ஸ்ஆப்

ஐபாட்டிற்க்கான வாட்ஸ்ஆப்

இறுதியாக, ஐந்தாண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் ஐபாட் பயனர்களுக்காக வாட்ஸ்ஆப் ஆப்பிள் ஐபாட்டிற்கான ஒரு முழுமையான பயன்பாடு சார்ந்த வேலைகளில் ஈடுபட்டுள்ளது. எனினும், இது ஒரு முழு நீள பயன்பாடாக இல்லாமல் ஒரு வாட்ஸ்ஆப் வெப் கிளைண்ட் (WhatsApp Web client) ஆக இருக்கும்.

How to check PF Balance in online (TAMIL)
மிக விரைவில்

மிக விரைவில்

மேற்கூறப்பட்டுள்ள பெரும்பாலான புதிய வாட்ஸ்ஆப் அம்சங்களானது ஏற்கனவே ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்புகளில் கிடைக்கின்றன. மேலும் அவைகள் மிக விரைவில் பயன்பாட்டின் நிலையான பதிப்பிற்கு உருட்டப்படலாம் என்றும், பின்னர் எல்லா பயனர்களுக்கும் கிடைக்குமென்றும் எதிர்பார்க்கிறோம். மேலும் பல வாட்ஸ்ஆப் சார்ந்த அப்டேட்ஸ் தகவல்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
WhatsApp to Introduce Group Video Calling and Several Other New Features in the Next Update. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X