வாட்ஸ்அப் அதிரடி: 20 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்: காரணம் என்ன?

|

பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவம் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த வாட்ஸ்அப் செயலியில் நாம் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் இருக்கிறது என்றே கூறலாம். அதேபோல் வாட்ஸ்அப் செயலியில் புதிய புதிய அம்சங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இவை அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

 20 லட்சம் இந்தியர்களின்

இந்நிலையில் 20 லட்சம் இந்தியர்களின் கணக்குகளை வாட்ஸ்அப் நிறுவனம் முடக்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இதுசார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பு புதிய தகவல் தொழில்நுட்ப
விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

சமூக வலைத்தளங்கள் அனைத்தும்

அதன்படி சமூக வலைத்தளங்கள் அனைத்தும் இந்த புதிய விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என மத்திய அரசு உத்திரவிட்டது. எனவே இந்த தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு உட்பட்டு, மே மாதம் 15-ம் தேதி முதல் ஜூன் மாதம் 15-ம் தேதிக்குள் வாட்ஸ்அப் பயனர்களின் இருபது லட்சம் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கியுள்ளது.

அடுத்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்: உயர்தர அம்சத்தோடு ரியல்மி சி21 ஒய் ஸ்மார்ட்போன்!அடுத்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்: உயர்தர அம்சத்தோடு ரியல்மி சி21 ஒய் ஸ்மார்ட்போன்!

வாட்ஸ்அப் நிறுவனம்

பின்பு இதுகுறித்து வாட்ஸ்அப் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில் தவறுகள் நடக்கும் முன்பாக அதை கவனம் செலுத்துவதாகவும், ஒருவரின் கணக்கில் மூன்று கட்டங்களாக ஆராய்ந்து, அதாவது பதிவு செய்தல், தகவலை அனுப்புதல் மற்றும் அதற்கான எதிர்மறையாக கருத்துகளை பெறும்போது துல்லியமாக கண்காணிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் வதிகளை மீறும் வாடிக்கையாளர்களின் கணக்கு முடக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.

Kodak CA தொடர் ஸ்மார்ட் டிவிகளுடன் ரூ.14,999 மதிப்புள்ள 'இந்த' சாதனம் இலவசம்.. குறுகிய காலத்திற்கு மட்டுமே..Kodak CA தொடர் ஸ்மார்ட் டிவிகளுடன் ரூ.14,999 மதிப்புள்ள 'இந்த' சாதனம் இலவசம்.. குறுகிய காலத்திற்கு மட்டுமே..

யே 20 லட்சம் பதிவுகளை

மேலும் பேஸ்புக் நிறுவனமும் தவறான 3 கோடியே 20 லட்சம் பதிவுகளை நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக தங்கள் குழு இதுபோன்ற செயல்களை ஆராய்ந்து மேற்கொள்ளும் முடிவுகள், தங்களது செயல்திறனை மேம்படுத்த வழிசெய்யும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை அதிகரிப்பு: ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன் விலை என்ன தெரியுமா?விலை அதிகரிப்பு: ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன் விலை என்ன தெரியுமா?

வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அம்சம்

அதேபோல் வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அம்சம் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது வாட்ஸ்அப் செயலியில் புகைப்படங்களை அனுப்பும் அம்சத்தில் மாற்றம் செய்யப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் இன்னும் முழுமை பெறாத
நிலையில், இந்த அம்சம் தற்போது முதற்கட்டமாக பீட்டா பதிப்பில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வாட்ஸ்அப் கால் பிரிவில் எதிர்பார்த்திடாத புதிய மாற்றங்கள்.. இந்த மாற்றம் பயனளிக்குமா?வாட்ஸ்அப் கால் பிரிவில் எதிர்பார்த்திடாத புதிய மாற்றங்கள்.. இந்த மாற்றம் பயனளிக்குமா?

அம்சம் வாட்ஸ்அப் செயலியில்

குறிப்பாக இந்த அம்சம் வாட்ஸ்அப் செயலியில் புகைப்படங்களை அனுப்பும் போது மூன்று ஆப்ஷன்களை வழங்கும் என்று கூறப்படுகிறது. அதாவதுஇதுவரை வாட்ஸ்அப் செயலியில் நாம் புகைப்படங்களை அனுப்பும்போது தரம் தானாக குறைக்கப்பட்டு விடும். ஆனால் இனிமேல் அந்த நிலை இருக்காது. அதன்படி நீங்கள் Photo Upload Quality ஆப்ஷன்களை க்ளிக் செய்ததும், ஆட்டோ, பெஸ்ட் குவாலிட்டி, டேட்டா சேவர் என்ற மூன்று தரங்களில் புகைப்படங்களை அனுப்ப முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
WhatsApp has disabled the accounts of 20 lakh Indians: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X