Home
Apps

வாட்ஸ்ஆப்-க்கு சரியான போட்டி: பதஞ்சலியின் ‘கிம்போ’ அறிமுகம்.!

இந்த கிம்போ என்ற மெசேஜிங் செயலி ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்தியாவில் கிம்போ மெசேஜிங் செயலி மிகப் பெரிய வெற்றியைப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது

By Prakash S

தொடர்ந்து பாபா ராம்தேவ் பதஞ்சலி என்ற பிராண்ட் மூலம் பல பொருட்களை விற்பனை செய்து வந்தார், இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பதஞ்சலி மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்கள் இணைந்து சுதேசி சம்ரித்தி என்ற பெயரில் சிம்கார்டு விற்பனை துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்ஆப்-க்கு சரியான போட்டி: பதஞ்சலியின்  ‘கிம்போ’ அறிமுகம்.!

தற்சமயம் வாட்ஸ்ஆப் செயலிக்கு போட்டியாக பாபா ராம்தேவின் பதஞ்சலி குழுமம் கிம்போ என்ற புதிய செயலியை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாட்ஸ்ஆப் பொறுத்தவரை இந்தியாவில் சுமார் 20கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர்.

 கிம்போ:

கிம்போ:

பதஞ்சலி சிம் அறிமுகமான சில நாட்களுக்குள்ளாகவே தொடர்ந்து தொலைத்தொடர்பில் கால்பதிக்கும் முயற்சியில் கிம்போ என்ற மெசேஜிங் செயலியை வெளியிட்டுள்ளது அந்நிறுவனம். மேலும் வாட்ஸஆப்-க்கு கடும் போட்டியாக இருக்கும் என்று கூறிக்கொண்டு அறிமுகமாகியுள்ளது
இந்த கிம்போ செயலி.

 பிளே ஸ்டோர்:

பிளே ஸ்டோர்:

இந்த கிம்போ என்ற மெசேஜிங் செயலி ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும்
இந்தியாவில் கிம்போ மெசேஜிங் செயலி மிகப் பெரிய வெற்றியைப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5லட்சம்:

5லட்சம்:

பதஞ்சலி மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்கள் அறிவத்துள்ள இந்த சுதேசி சம்ரித்தி சிம் கார்டுகள் நாடு முழுவதும் 5லட்சம் கடைகள் மற்றும் நேரடி
பதஞ்சலி கடைகளிலும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிம் கார்டு பாபா ராம்தேவ் வெளியிட்டார் என்பது
குறிப்பிடத்தக்கது.

 ரூ.144/-திட்டம்:

ரூ.144/-திட்டம்:

சுதேசி சம்ரித்தி சிம் கார்டு வாங்கி ரூ.144/- ரீசார்ஜ் செய்தால் 2ஜிபி டேட்டா மற்றும் 100எஸ்எம்எஸ் பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,
மேலும் அதற்காக ஒப்பந்த பணிகள் நடைபெற்று வருகிறது என பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ காப்பீடு:

மருத்துவ காப்பீடு:

சுதேசி சம்ரித்தி கார்டு வாங்கி பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 2.5 லட்சம் மதிப்பில் மருத்துவ காப்பீடு மற்றும் 5லட்சம்
மதிப்புடைய மருத்துவ காப்பீடு கிடைக்கும் என பதஞ்சலி மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவன ஊழியர்கள்:

நிறுவன ஊழியர்கள்:

இந்த சிம் கார்டுகள் முதல் கட்டமாக பதஞ்சலி நிறுவன ஊழியர்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது,விரைவில் விற்பனைக்கு
வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சுதேசி சம்ரித்தி சிம் கார்டு வெளிவரும் போது வாடிக்கையாளர்கள் பதஞ்சலி பொருட்களை
வாங்கினார் 10சதவீதம் சலுகை கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
"WhatsApp Has Competition": Ramdev's Patanjali Launches Messaging App: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X