பயனர்களிடம் கட்டணம் வசூல்; க்ரூப் வீடியோ காலிங் உட்பட வாட்ஸ்ஆப் போடும் மாஸ்டர் பிளான்.!

  கடந்த 2011 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் ஆன ஸ்னாப்சாட் (Snapchat) நிறுவனமானது, ஆரம்பத்தில் சர்வதேச சந்தைகளை புறக்கணித்தது. அதன் வழியாக வளர்ச்சி பெறும் வாய்ப்பை தவறவிட்டது. ஆனால் அந்த தவறை, வாட்ஸ்ஆப் செய்வதாய் இல்லை.

  உலகின் மிகவும் பிரபலமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளமான வாட்ஸ்ஆப், எப்படி உலகளாவிய முறையில் பரவி கிடைக்கிறதோ, அது போன்றே அவ்வப்போது அறிமுகப்படுத்தப்படும் வாட்ஸ்ஆப்பின் புதிய அம்சங்களும் உலகெங்கிலும் கிடைக்கின்றன.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  காப்பி அடிக்கப்பட்ட வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் கூட.!

  குறிப்பிட்ட அம்சங்கள், குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டுமே என்கிற கட்டுப்பாடுகளை கொண்டிருக்காத காரணத்தினால் தான் வாட்ஸ்ஆப் இந்த அளவிலான பிரபலத்தன்மையை கொண்டுள்ளது. அவ்வளவு ஏன்.? ஸ்னாப்சாட்டை பார்த்து காப்பி அடிக்கப்பட்ட வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் அம்சத்தினை, தற்போது சுமார் 450 மில்லியன் ஆக்டிவ் யூசர்களால் பயன்படுத்தப்படுகிறது. இதுதான் வாட்ஸ்ஆப்பின் மகத்தான வெற்றி.

  பேஸ்புக் எப்8 2018 மாநாட்டில் வெளிப்படுத்தப்பட்டது.!

  இதுபோன்ற பல அம்சங்களை பொதுவான பயன்பாட்டிற்கு உருட்ட வாட்ஸ்ஆப் திட்டமிட்டுள்ளது. அது சார்ந்த விவரங்கள் பேஸ்புக் எப்8 2018 மாநாட்டில் வெளிப்படுத்தப்பட்டது. ஒப்பிடுகையில், ஸ்னாப்சாட் ஸ்டோரீஸ் வெறும் 191 மில்லியன் ஆக்டிவ் யூசர்களை மட்டுமே கொண்டுள்ளது. மறுகையில் உள்ள வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆனது கடந்த நவம்பரில் மட்டுமே 300 மில்லியன் ஆக்டிவ் யூசர்களை கொண்டுருந்தது குறிப்பிடத்தக்கது.

  ஒரே நேரத்தில் நான்கு பயனர்களுக்கு மத்தியிலான க்ரூப் வீடியோ.!

  புள்ளி விவரங்களை தவிர்த்து, மாநாட்டில் பேசப்பட்ட புதிய அம்சங்களை பொறுத்தவரை, பயனர்கள் வாட்ஸ்ஆப் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளில் தினமும் 2 பில்லியன் நிமிடங்களை செலவிடுகின்றனவாம், அதை மனதில் கொண்டு வாட்ஸ்ஆப் க்ரூப் வீடியோ காலிங் அம்சம் உருட்டப்படவுள்ளது. கூறப்படும் வாட்ஸ்ஆப் க்ரூப் வீடியோ காலிங் ஆனது, ஒரே நேரத்தில் நான்கு பயனர்களுக்கு மத்தியிலான க்ரூப் வீடியோ சாட்டை நிகழ்த்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  மூன்றாம் தரப்பு ஸ்டிக்கர்களுக்கான ஆதரவு.!

  க்ரூப் வீடியோ காலிங் மட்டுமின்றி, பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்ஆப்பில், மிக விரைவில் மூன்றாம் தரப்பு ஸ்டிக்கர்களுக்கான ஆதரவு கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சமானது, டெவலப்பர்கள் தங்களின் இல்லுஷன்களை வெளிப்படுத்த உதவும், மறுகையில், பயனர்களின் சாட்டிங்கை இன்னும் சுவாரஸ்யமாக்குவதற்கும் அனுமதிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

  நாணயமாக்குதலுக்குள் கொண்டு செல்லும்.!

  எப்8 மாநாட்டில் வெளியிடப்பட்டுள்ள விவரத்தின் படி, 3 மில்லியன்களுக்கும் மேலான நிறுவனங்கள், வாட்ஸ்ஆப் பிஸ்னஸை பயன்படுத்தி வருகிறது. தற்போது வரையிலாக, வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் ஆப் ஆனது இலவசமாக பயன்படுத்தப்படுகிறது, ஆனால் நிறுவனம் விரைவில் அதை நாணயமாக்குதலுக்குள் கொண்டு செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வங்கிகள், மொபைல் கேரியர்கள் மற்றும் ஏர்லைன்ஸ் போன்ற பெரிய பிராண்டுகளிடம் கட்டணம் வசூலிக்கவும், அதன் வழியாக வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் சேவைகளை வழங்குவதற்கு உதவவும் வாட்ஸ்ஆப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

  'சேவ்டு வாய்ஸ் மெசேஜஸ்'.!

  முன்னதாக, ஸ்மார்ட்போனின் சேமிப்பகத்தில் இருந்து டெலிட் செய்த பின்பும் கூட, இரண்டாம் முறை மீடியா பைல்களை டவுன்லோட் செய்யக்கூடிய திறன் மற்றும் 'டிஸ்மிஸ் ஏஸ் அட்மின்' ஆகியவைகளை அறிமுகம் செய்த வாட்ஸ்ஆப் சமீபத்தில், அதன் 'சேவ்டு வாய்ஸ் மெசேஜஸ்' என்கிற அம்சத்தையும் உருட்டியது. இந்த புதிய அம்சம் தற்போது 'கூகிள் ப்ளே பீட்டா வெர்ஷனில்' அணுக கிடைக்கிறது மற்றும் அந்த பதிப்பு 2.18.123 ஆகும். ஐஓஎஸ் பதிப்பில் வாய்ஸ் மெஸேஜை இழக்க முடியாத அம்சத்தை செயல்படுத்திய பிறகு, வாட்ஸ்ஆப் இறுதியாக, அந்த அம்சத்தை ஆண்ட்ராய்டு தளத்தில் இணைக்க தொடங்கியுள்ளது.

  சேவ்டு வாய்ஸ் மெசேஜஸ் அம்சம் எப்படி வேலை செய்கிறது.?

  முன்னதாக, ஒரு பயனர் வாய்ஸ் மெசேஜை ரெக்கார்ட் அம்சத்தை பயன்படுத்தும் போது அவர் குறிப்பிட்ட சாட்டை விட்டு வெளியேற முடியாது. ஆனால் இனி ஒரு வாய்ஸ் மெசேஜை பதிவு செய்யும், அதே நேரத்தில் அழைப்புகள் அல்லது பேட்டரி தீர போகிறது அல்லது வேற ஆப்பிற்குள் நுழைய வேண்டும் என்றால், தாராளமாக வாட்ஸ்ஆப் சாட்டை விட்டு வெளியேறலாம்.

  சரியாக உள்ளதா என்பதை பரிசோதிக்க விரும்பினால்.?

  நீங்கள் பதிவு செய்த வரையிலான வாய்ஸ் மெசேஜ் ஆனது வாட்ஸ்ஆப்பில் சேமிக்கப்பட்டு இருக்கும். எனவே நீங்கள் மீண்டும் மற்றொரு முறை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. இப்படி சேவ்டு வாய்ஸ் மெசேஜஸ் அம்சம் வேலை செய்யும். பாதியில் விட்டுச்சென்ற வாய்ஸ் மெசேஜ் ஆனது சரியாக உள்ளதா என்பதை பரிசோதிக்க விரும்பினால், அதற்கும் ஒரு வழி இருக்கிறது. வெறுமனே ஹோம் ஸ்க்ரீன் செல்வதின் வழியாக வாய்ஸ் மெசேஜை கேட்க முடியும் என்று வெளியான WaBetaInfo அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கைகளை மேம்படுத்தல்.!

  வாட்ஸ்ஆப் பீட்டாவில், இந்த அம்சம் முன்னிருப்பாக ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு விட்டதால், வாட்ஸ்ஆப் பீட்டா பயனர்கள், உள்நுழையவும் இதை உடனடியாக பயன்படுத்தத் தொடங்கலாம். இதற்கிடையில், மே 25 அன்று ஐரோப்பாவில் பொது தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறையின் கீழ், வாட்ஸ்ஆப் அதன் சேவை விதிமுறைகளையும் தனியுரிமைக் கொள்கைகளையும் மேம்படுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  உலகம் முழுவதும் உள்ள எல்லா பயனர்களுக்கும்.!

  நடைமுறைக்கு வரும் புதிய கொள்கைகளோடு சேர்த்து, Request Account info என்கிற ஒரு அம்சமும் இடம் பெற உள்ளது. வாட்ஸ்ஆப் பயன்பாட்டின் அடுத்த பதிப்பானது, மே 25-ல் வெளியானால், இந்த அம்சத்தினை அனைவராலும் பார்க்க முடியும். இந்த அம்சமானது வாட்ஸ்ஆப் மூலம் சேகரிக்கப்படும், பயனர் ஒருவரின் சிறிய அளவிலான டேட்டாவை டவுன்லோட் செய்ய உதவும். இந்த அம்சமானது, உலகம் முழுவதும் உள்ள எல்லா பயனர்களுக்கும் உருட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

  ஒரு முறை ரெக்வஸ்ட் செய்த பின்னர்.!

  "ரெக்வஸ்ட் அக்கவுண்ட் இன்ஃபோ" என்கிற இந்த புதிய அம்சமானது, வாட்ஸ்ஆப்பின் செட்டிங்ஸ்-ல் காணப்படும். அதை கிளிக் செய்து பின்னர் 'அக்கவுண்ட்' என்கிற விருப்பத்தை கிளிக் செய்ய "ரெக்வஸ்ட் அனுப்பட்டது" என்கிற நோட்டிபிகேஷன் கிடைக்கும். கோரிக்கை நிகழ்த்தப்பட்ட தேதியிலிருந்து அடுத்த மூன்று நாட்களுக்குள் வந்து சேரும். ஒரு முறை ரெக்வஸ்ட் செய்த பின்னர் நடுவில் ரத்து செய்ய முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  அக்கவுண்ட்டை டெலிட் செய்ய வேண்டும்.!

  ஒருவேளை கண்டிப்பாக அனுப்பிய ரெக்வஸ்ட்டை கேன்சல் செய்ய வேண்டும் என்றால், ஒன்று உங்களின் வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்டை டெலிட் செய்ய வேண்டும் அல்லது, வாட்ஸ்ஆப் நம்பரை மாற்ற வேண்டும். இந்த இரண்டில் ஒன்றை செய்வதின் விளைவாக, அனுப்பட்ட கோரிக்கையை ரத்து செய்யலாம். உங்கள் அக்கவுண்ட் சார்ந்த விவரங்கள் டவுன்லோட் செய்ய திறந்து விடப்பட்டுள்ளது என்கிற தகவலை வாட்ஸ்ஆப் உங்களுக்கு அனுப்பி வைக்கும். அந்த அறிவிப்பு கிடைத்த அடுத்த சில வாரங்களுக்குள் அதை நீங்கள் டவுன்லோட் செய்ய வேண்டும். இல்லையெனில் அது வாட்ஸ்ஆப் சேவையகங்ளில் இருந்து குறிப்பிட்ட தகவல்கள் நீக்கப்படும்.

  சுவாரசியம் என்னவெனில்.!

  மேற்குறிப்பிட்ட அதே வழிமுறைகளை பின்பற்ற இறுதியாக "டவுன்லோட் ரிப்போர்ட்" என்கிற ஒரு விருப்பம் உங்களுக்கு கிடைக்கும். அதை டாப் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும். டவுன்லோட் செய்யப்பட்ட டேட்டா ஆனது ஸிப் பைல் வடிவத்தில் அணுக கிடைக்கும் என்பது குறிப்பிடத் தக்கது. சுவாரசியம் என்னவெனில், டவுன்லோட் செய்த ரிப்போர்ட்டை நிரந்தரமாக டெலிட் செய்யும் ஒரு அம்சத்தையும் வாட்ஸ்ஆப் வழங்குகிறது.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  WhatsApp Group Video calling, stickers support coming soon. Read more about this in Tamil GizBot.
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more