வாட்ஸ்அப் புதிய அப்டேட்: இனி அந்த நோபடி ஆப்ஷன் கிடையாது!

|

தேவையில்லாத வாட்ஸ் ஆப் குரூப்களில் உங்கள் நண்பர்கள் உங்களை சேர்கிறார்களா? கவலை வேண்டாம் உங்கள் அனுமதி இல்லாமல் உங்களை யாரும் எந்த புதிய குரூபிலும் சேர்க்க முடியாது. இதற்கான சேவையை வாட்ஸ் ஆப் அறிமுகம் செய்தது, தற்பொழுது இதை அப்டேட் செய்துள்ளது.

குரூப் இன்விடேஷன் தொல்லை

குரூப் இன்விடேஷன் தொல்லை

உங்கள் எண் தெரிந்த உங்கள் நண்பர்கள், உங்களுக்குச் சற்றும் சம்பந்தமில்லாத குரூப்களில் உங்களைச் சேர்த்துவிடுகின்றனர். இதனால் தேவையில்லாதா மெசேஜ்கள் வந்து உங்களைக் கடுப்பேற்றும், இதனால் அந்த குரூப்பிலிருந்து வெளியேற வேண்டியதும் இருக்கும்.

இனிமேல் நோபடி ஆப்ஷன் இல்லை

இனிமேல் நோபடி ஆப்ஷன் இல்லை

இதற்காக வாட்ஸ் ஆப் புதிய குரூப் பிரைவசி சேவையை அறிமுகம் செய்தது, தற்பொழுது இந்த சேவையில் உள்ள நோபடி(Nobody) ஆப்ஷனை நீக்கிவிட்டு மை காண்டாக்ட்ஸ் எக்ஸ்செப்ட் (My Contacts Except) என்ற புதிய ஆப்ஷனை தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது.

425நாட்கள் வேலிடிட்டி: சூப்பர் சலுகையை அறிவித்தது பிஎஸ்என்எல்.!425நாட்கள் வேலிடிட்டி: சூப்பர் சலுகையை அறிவித்தது பிஎஸ்என்எல்.!

சமீபத்திய அப்டேட்டை உடனே டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்திய அப்டேட்டை உடனே டவுன்லோட் செய்யுங்கள்

இந்த புதிய சேவையை உங்கள் வாட்ஸ் ஆப்பில் ஆக்டிவேட் செய்ய முதலில், உங்கள் வாட்ஸ் அப் செயலி சமீபத்திய அப்டேட்டை பெற்றிருக்க வேண்டும். உங்கள் வாட்ஸ் ஆப் அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கீழ் வரும் செயல்முறைகளைப் பின்பற்றுங்கள்.

செயல்முறை

செயல்முறை

 • உங்கள் போனில் வாட்ஸ் ஆப் ஓபன் செய்துகொள்ளுங்கள்.
 • வாட்ஸ் ஆப்பில், வாட்ஸ் ஆப் செட்டிங்ஸ்(Settings) கிளிக் செய்யுங்கள்.
 • அக்கௌன்ட்(Accounts ) ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
 • பிரைவசி(privacy) ஆப்ஷனை கிளிக் செய்துகொள்ளுங்கள்.
 • இப்பொழுது குரூப்ஸ்(Groups) என்ற புதிய ஆப்ஷன் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும், அதை கிளிக் செய்யுங்கள்.
 • அதற்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள மூன்று ஆப்ஷன்களில்(Everyone, My Contacts, My Contacts Except) ஒன்றை தேர்வு செய்துகொள்ளுங்கள்.
 • 108எம்பி கேமரா கொண்ட மெர்சலான சியோமி ஸமார்ட்போன் அறிமுகம்.! வியக்கவைக்கும் விலை.!108எம்பி கேமரா கொண்ட மெர்சலான சியோமி ஸமார்ட்போன் அறிமுகம்.! வியக்கவைக்கும் விலை.!

  Everyone, My Contacts, My Contacts Except என்ன செய்யும்?

  Everyone, My Contacts, My Contacts Except என்ன செய்யும்?

  நீங்கள் Everyone கிளிக் செய்தால் யார் வேண்டுமானாலும் உங்களை புதிய குரூப்பில் சேர்க்க முடியும்.
  நீங்கள் My Contacts கிளிக் செய்தால் உங்கள் நண்பர்கள் மட்டுமே உங்களை புதிய குரூப்பில் சேர்க்க முடியும். நீங்கள் My Contacts Except கிளிக் செய்தால் சிலரை மட்டும் பிளாக் செய்து மற்றவர்களுக்கு அனுமதி வழங்கும்.

Best Mobiles in India

English summary
WhatsApp Group Privacy Setting New Update Rolled Out For Both Android And iOS Phones : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X