Home
Apps

வாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.!

இந்த முறை மூலம் நமக்கு விருப்பம் இல்லாத குரூப்பில் கூட நாம் இடம்பெற வேண்டி இருக்கும். இந்நிலையில் இப்போது இருக்கும் முறையில் மாற்றம் கொண்டுவர வாட்ஸ்ஆப் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

வாட்ஸ்ஆப் நிறுவனம் பல்வேறு புதிய அம்சங்களை சேர்த்த வண்ணம் உள்ளது, மேலும் இந்தியாவில் அதிக மக்கள் பேஸ்புக்-ஐ விட வாட்ஸ்ஆப் செயலியை தான் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர், குறிப்பாக உலகம் முழுவதிலும் 1.3 பில்லியனுக்கும்
அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

வாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.!

பேஸ்புக் நிறுவனம் இந்த வாட்ஸ்ஆப் செயலியை கடந்த 2014-ம் ஆண்டு விலைக்கு வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த செயலியில் மக்களுக்கு தேவைப்படும் பல்வேறு புதிய வசதிகள் வந்த வண்ணம் உள்ளது.

வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப்

தற்சமயம் வாட்ஸ்ஆப் சார்பில் புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது, அது என்னவென்றால் வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை என்ற முறை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விரைவில் இந்த
அம்சம் சேர்க்கப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவையற்ற குரூப்களில் பயனர்கள் சேர்க்கப்படுவதை தடுக்கும் வகையில் ...

தேவையற்ற குரூப்களில் பயனர்கள் சேர்க்கப்படுவதை தடுக்கும் வகையில் ...

இப்போது வரை வாட்ஸ்ஆப்பில் யார் வேண்டுமானாலும் தங்களது கணக்கில் இருக்கும் வாட்ஸ்ஆப் பயனர்களை குரூப்பில் சேர்த்து அட்டமினாக ஆகலாம். இந்த முறை மூலம் நமக்கு விருப்பம் இல்லாத குரூப்பில் கூட நாம் இடம்பெற வேண்டி இருக்கும். இந்நிலையில் இப்போது இருக்கும் முறையில் மாற்றம் கொண்டுவர வாட்ஸ்ஆப் நிறுவனம் முடிவு செய்துள்ளது. தேவையற்ற குரூப்களில் பயனர்கள் சேர்க்கப்படுவதை தடுக்கும் வகையில் இந்த அப்டேட் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனரின் அனுமதி எப்படி இருக்க வாய்ப்பு?

பயனரின் அனுமதி எப்படி இருக்க வாய்ப்பு?

அதாவது வாட்ஸ்ஆப் செட்டிங்ஸ் பகுதியில் உள்ள பிரைவசி பகுதியில் குரூப்ஸ் என்ற ஆப்ஷன் கொடுக்கப்படும், (WhatsApp Settings > Account > Privacy > Groups).

பின்பு யாரெல்லாம் உங்களை குரூப்பில் சேர்க்க அனுமதிக்க வேண்டும் என கேள்வியுடன் மூன்று ஆப்ஷன்கள் இருக்கும்,(Everyone, My Contacts, and Nobody).

அனுமதிக்கு பின்னரே குருப்பில்...

அனுமதிக்கு பின்னரே குருப்பில்...

மேலும் அதில் உள்ள Nobody விருப்பத்தை தேர்வுசெய்தால் யாராக இருந்தாலும் உங்களது அனுமதிக்கு பின்னரே குருப்பில் சேர்க்க முடியும்.

நீங்கள் எந்த பதிலும் கொடுக்காதபட்சத்தில் அவர்களின் அனுமதி கோரிக்கை 72நாட்கள் வரை மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
WhatsApp Group to get a major refresh No one will be able to add you without your permission: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X