வாட்ஸ்ஆப் அப்டேட்: க்ரூப் டிஸ்க்ரிப்ஷன் அறிமுகம்.!
இந்த க்ரூப் டிஸ்க்ரிப்ஷன் அம்சத்தை பயன்படுத்த உங்கள் வாட்ஸ்ஆப் அப்டேட் செய்ய வேண்டும்.
தற்சமயம் வாட்ஸ்ஆப் செயலியல் பல்வேறு புதிய அப்டேட் வந்த வண்ணம் உள்ளது, அதன்படி மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட க்ரூப் டிஸ்க்ரிப்ஷன் அம்சம் இப்போது வாட்ஸ்ஆப் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இந்த புதிய அப்டேட் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த க்ரூப் டிஸ்க்ரிப்ஷன் அம்சம் பொறுத்தவரை பல்வேறு மக்களுக்கும் பயனுள்ள வகையில் உள்ளது, அதன்பின்பு இந்த க்ரூப் டிஸ்க்ரிப்ஷன் அம்சத்தை பயன்படுத்த உங்கள் வாட்ஸ்ஆப் அப்டேட் செய்ய வேண்டும். மேலும் இந்த அம்சத்தை இயக்குவது எப்படி என்று தொடர்ந்து பார்ப்போம்.

வழிமுறை-1:
முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் வாட்ஸ்ஆப் செயலியை திறந்து, டிஸ்க்ரிப்ஷன் உருவாக்க வேண்டிய க்ரூப்-ஐ தேர்வு
செய்ய வேண்டும்.

வழிமுறை-2:
அடுத்து க்ரூப் இன்ஃபோ பகுதியில் டிஸ்க்ரிப்ஷன் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை-3:
மேலும் க்ரூப் டிஸ்க்ரிப்ஷனை புதிதாய் சேர்க்கவோ அல்லது மாற்றியமைக்வோ முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழிமுறை-4:
அதன்பின்பு க்ரூப் டிஸ்க்ரிப்ஷனை குறிப்பிட்ட க்ரூப்-ல் இருக்கும் அனைவராலும் பார்க்க முடியும்.


வாட்ஸ்ஆப்:
வாட்ஸ்ஆப் சந்தேகத்திற்கு இடமின்றி இந்தியாவின் மிகப்பிரபலமான செய்தி பயன்பாடு ஆகும். அந்த நிலைப்பாட்டை தக்கவைத்துக் கொள்ளும் பொருட்டு வாட்ஸ்ஆப் நிறுவனமானது தொடர்ச்சியான முறையின் கீழ் புதிய அம்சங்ககளை உருட்டியவண்ணம் உள்ளது.

டெலிட் பார் ஆல்:
சமீபத்தில் மிகவும் பிரபலமான "டெலிட் பார் ஆல்" அம்சத்தின் செய்லபடும் நேரத்தை (நம்ப முடியாத) 68 நிமிடங்கள் அல்லது 4096 நொடிகள் என்று நீட்டித்து அறிவிக்கப்பட்டது. தற்போது வாட்ஸ்ஆப் பீட்டா பதிப்பான 2.18.74-ல் ஒரு சிறிய மாற்றம் இடம்பெற்றுள்ளது. அதாவது வாட்ஸ்ஆப்பின் லான்சர் ஐகான் வடிவமைப்பில் சிறிய மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியாக, வாட்ஸ்ஆப் ஐகானின் வடிவமைப்பை மாற்ற இயலாது ஆனால் லே-அவுட் வடிவமைப்பை மாற்றலாம்.


Click it and Unblock the Notifications