Home
Apps

புது அப்டேட்.. இனி WhatsApp-ல் இந்த பச்சை நிற புள்ளி தெரிந்தால் என்ன அர்த்தம்?

டெஸ்ட்ஃபிளைட்டில் (TestFlight) உள்ள, அதாவது சோதனைக்கான லேட்டஸ்ட் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் (Latest WhatsApp beta version), ஆன்லைனில் இருக்கும் காண்டாக்ட்களை (Contacts in Online) அடையாளம் காண, வாட்ஸ்அப் நிறுவனமானது ஒரு சிறிய பச்சை நிற புள்ளியை (WhatsApp Green Dot) அறிமுகப்படுத்துகிறது.

ஒரு காண்டாக்ட், ஆக்டிவ் (active) ஆக இருக்கும் போது சாட் இன்ஃபோ டேஸ்க்ரீனில் (Chat info screen) இந்த புள்ளி தோன்றும்; அதே காண்டாக்ட் வாட்ஸ்அப்பை விட்டு வெளியேறியவுடன் அந்த பச்சை நிற புள்ளி மறைந்துவிடும். ப்ரைவஸி செட்டிங்ஸ்-ஐ (Privacy Settings) மதிக்கும் வகையில், தங்கள் ஆன்லைன் ஸ்டேட்டஸ்-ஐ ஷேர் செய்யும் காண்டாக்களுக்கு மட்டுமே வாட்ஸ்அப்பில் இந்த பச்சை நிறப் புள்ளி காட்டப்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இனி WhatsApp-ல் இந்த பச்சை நிற புள்ளி தெரிந்தால் என்ன அர்த்தம்?

வாட்ஸ்அப் குறித்த துல்லியமான அப்டேட்களை வழங்கும் WAbetainfo வழியாக இந்த அம்சம் கண்டறியப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் பீட்டா 2.26.24.5 அப்டேட் குறித்த பதிவில், ஒருவர் ஆன்லைனில் இருப்பதை குறிக்க ஒரு புதிய பச்சை நிறப் புள்ளி அறிமுகப்படுத்தப்படுவதை டபுள்யூஏபீட்டாஇன்ஃபோ கண்டறிந்துள்ளது.

இதன் மூலம் ஒரு காண்டாக் ஆனது அவைலபில் (available) ஆக இருக்கிறதா என்பதை பயனர்கள் எளிதாக புரிந்துகொள்ள முடியும். இந்த மாற்றத்திற்கு முன், ஒரு காண்டாக்ட் எப்போது ஆன்லைனில் இருந்தது என்பதை புரிந்துகொள்ள பயனர்கள் புகைப்படத்திற்கு கீழே உள்ள டெக்ஸ்ட் லேபிளை (text label) பார்க்க வேண்டியிருந்தது.

அந்த டெக்ஸ்ட் லேபிளிற்கு பதிலாக, இப்போது மறுவடிவமைப்பு செய்யப்பட்ட குறியீடாக இந்த பச்சை நிறப் புள்ளி செயல்படுகிறது. முன்னரே குறிப்பிட்டபடி, இது காண்டாக்ட்டின் ப்ரைவஸி செட்டிங்ஸ்-ஐ மதிப்பதால், தங்கள் 'லாஸ்ட் சீன்' (last seen) மற்றும் ஆன்லைன் ஸ்டேட்டஸ்-ஐ (Online status) மறைத்து வைத்திருக்கும் காண்டாக்ட்களுக்கு இது (பச்சை நிற புள்ளி) ஒருபோதும் தோன்றாது.

கடந்த மாதம் சில ஆண்ட்ராய்டு பீட்டா டெஸ்டர்ர்களுக்கு வாய்ஸ்அப் இந்த பச்சை நிறப் புள்ளியை அறிமுகப்படுத்தியது; இப்போது ஐஓஎஸ் ஆப்பிலும் இது கொண்டுவரப்படுகிறது. லேட்டஸ்ட் பீட்டா வெர்ஷன் உடன் ஐபோன் (iPhone) பயனர்களுக்கும் இந்த அம்சம் வழங்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டில் செயல்படுவதைப் போலவே செயல்படுகிறது.

வாட்ஸ்அப்பிடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட யூசர்நேம் (Usernames) அம்சம் குறித்த சிக்கல்கள் மற்றும் குழப்பங்களுக்கு மத்தியில் இது வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த அம்சம் - பயனர்கள் தங்கள் மொபைல் நம்பர்களை பகிராமல், மற்றவர்களை தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது. இதன் அறிமுகம் இன்னும் ஆரம்பக் கட்டத்தில் இருந்தாலும், இந்த அம்சம் இந்திய அரசாங்கத்தின் ஆய்வுக்கு உட்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு அறிக்கையின்படி, இது ஆன்லைன் மோசடிகள் மற்றும் ஆள்மாறாட்ட முயற்சிகளை கண்டறிவதை மேலும் கடினமாக்கும் என்று அதிகாரிகள் அஞ்சுகிறார்கள். மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் தளமானது, ஆலோசனைகள் முடியும் வரை இந்தியாவில் "யூசர் நேம்ஸ்" அம்சத்தை அறிமுகப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் வாட்ஸ்அப்பை தொடர்ந்து, யூசர் நேம்ஸ் தொடர்பாக டெலிகிராம் (Telegram), சிக்னல் (Signal) ஆகியவற்றும் கூட மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நினைவூட்டும் வண்ணம் டெலிகிராமில் ஏற்கனவே யூசர் நேம் வசதி உள்ளது. சிக்னலை பொறுத்தவரை, இந்த வசதி உள்ளது, ஆனால் இது விருப்பத்திற்கு (Optional) உரியது.

யூசர் நேம் குறித்து வாட்ஸ்அப் என்ன சொல்கிறது? வாட்ஸ்அப் நிறுவனமானது பயனர்கள் "ஆப்பில் அவர்கள் எவ்வாறு தோன்றுகிறார்கள்" (How they show up in the app) என்பது குறித்த கூடுதல் ப்ரைவஸி ஆப்ஷன்களை வழங்குவதற்கான "சமீபத்திய நடவடிக்கை" (Latest step) தான் இந்த யூஸர் நேம்ஸ் என்று சந்தைப்படுத்தியுள்ளது.

வாட்ஸ்அப்பை பொறுத்தவரை இது ஒரு கூடுதல் தனியுரிமை அடுக்கு ( additional privacy layer) ஆகும். இதன் கீழ் வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களை ஒரு தனித்துவமான பயனர் பெயர் குறியீட்டை (unique username key) அமைக்க அனுமதிக்கிறது. இதன் மூலம், அவர்களை யாரெல்லாம் தொடர்பு கொள்ளலாம் என்பதில், பயனர்களுக்கு அதிக கட்டுப்பாடு கிடைக்கும் என்று வாட்ஸ்அப் நம்புகிறது

Best Mobiles in India

English summary
WhatsApp Green Dot New Online status Indicator Feature Now Coming to iOS after Android
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X