வாட்ஸ்ஆப் கோல்டு வைரஸ்: உஷார் மக்களே.!
இதில் பயனர்கள் நேரம், இருப்பிடம் மற்றும் மூன்றாம் தரப்பு செயலிகளில் கிடைக்கும் தனிப்பட்ட ஸ்டிக்கர்களை பயன்படுத்த முடியும்.
வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து புதிய அம்சங்களை சேர்த்த வண்ணம் உள்ளது, குறிப்பாக இந்த செயலியை உலகம் முழுவதும் பல மில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்று தான் கூறவேண்டும்.
குறிப்பாக இந்தியாவில் உள்ள மக்கள் வாட்ஸ்ஆப் செயலியில் அதிக நேரம் செலவிடுவதில் முதல் இடத்தில் உள்ளனர், இத்தகைய வாட்ஸ்ஆப் என்பது வெறும் செயலியாக இல்லாமல், நமது போன் மூலம் பல ஆபத்துகளையும் விளைவிக்க கூடியதாக உள்ளது என்பது தான் உண்மை.

வாட்ஸ்ஆப் கோல்டு
இப்போது புதிதாக ஒரு பிரச்சணை வந்துள்ளது, அது என்னவென்றால் வாட்ஸ்ஆப் கோல்டு என்ற அப்டேட் லிங்க், இந்த லிங்க் பல்வேறு மக்களின் வாட்ஸ்ஆப் செயலியில் அதிகமாக பரவி வருகிறது, இது பெரும் பிரபலங்கள் மட்டும் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப் கோல்டு என்ற அப்டேட் தற்போது கசிந்துள்ளது.

வைரஸ்
வாட்ஸ்ஆப் கோல்டு என்ற அப்டேட் லிங்கை- அப்டேட் செய்தால் நாம் தனிச்சிறப்புகள் வசதிகள் போன்ற பலவற்றை வாட்ஸ்ஆப்பில் பெறமுடியும் என்ற வாசகமும் அனுப்பப்படுகிறது. இந்த லிங்க் மூலம் அப்டேட் செய்ய முயற்சிக்கும்
நபர்களின் செல்போன்களில் வைரஸ்கள் அதிகளவு ஊடுறுவுகின்றன.

வங்கி சார்ந்த தகவல்கள்
இந்த வைரஸ் மூலம் உங்கள் வாட்ஸ்ஆப் உரையாடல்களை கண்காணிக்க முடியும், பின்பு தனிப்பட்ட தகவல் பரிமாற்றங்கள் கொண்டு நீங்க மிரட்டப்படலாம். பின்ப வங்கி சார்ந்த தகவல்களையும் இந்த வைரஸ் திருடும் என்பது குறிப்பிடத்தக்கது,எனவே இதை தவிர்ப்பது மிக மிக நல்லது.

புதிய அப்டேட் ஐ.ஓ.எஸ்:
வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் பீட்டா பயனர்களுக்கு புதிய அம்சம் வழங்கப்பட்டுள்ளது, இந்த அம்சம் என்னவென்றால் புகைப்படங்கள், வீடியோக்கள் அல்லது ஜிஃப்களில் ஸ்டிக்கர்களை சேர்க்க முடியும். இதில் பயனர்கள் நேரம், இருப்பிடம் மற்றும் மூன்றாம் தரப்பு செயலிகளில் கிடைக்கும் தனிப்பட்ட ஸ்டிக்கர்களை பயன்படுத்த முடியும். இந்த அப்டேட்டில் ஸ்டிக்கர்களை தேர்வு செய்ய புதிய வடிவமைப்பு கொண்ட பகுதி வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications