நாம் எதிர்பாராத அம்சத்தை கொண்டுவந்துள்ள வாட்ஸ்அப்.! ஆனால் 'இவர்களுக்கு' மட்டும்..!

|

வாட்ஸ்அப் நிறுவனம் அதன் iOS பயனர்களுக்கு ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. புதிய அப்டேட் சில முக்கிய மேம்படுதல்களுடன் சில மீடியா மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. அதாவது, புதிய அப்டேட் வாட்ஸ்அப்பில் அனுப்பப்பட்ட மீடியா கோப்புகளின் காட்சியை மேம்படுத்தியுள்ளது. இதன் மூலம் நீங்கள் உங்கள் சாட்டில் வரும் மீடியா பிரெவியூவை பெரிய படமாக பார்க்கலாம். மேலும், சில அம்சங்களை நிறுவனம் இப்பொழுது வெளியிட்டுள்ளது, அதைப் பற்றிப் பார்க்கலாம்.

டிஸ்ஸப்பியர் மெசேஜ் அம்சம்

டிஸ்ஸப்பியர் மெசேஜ் அம்சம்

வாட்ஸ்அப்பில், டிஸ்ஸப்பியர் மெசேஜ் அம்சத்தில் சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இப்போது வரை வாட்ஸ்அப் அட்மின் மட்டுமே கட்டுப்படுத்த முடிந்த இந்த அம்சத்தை, இந்த புதிய அப்டேட் மூலம் இனி குழுவில் உள்ள அனைத்து பங்கேற்பாளர்களும் டிஸ்ஸப்பியர் மெசேஜ் அமைப்பைப் பயன்படுத்த முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல், டிஸ்ஸப்பியர் போட்டோஸ் என்ற புகைப்படங்களின் அம்சத்தை அண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளங்களுக்குக் கொண்டு வரும் திறனை வாட்ஸ்அப் ஒரே நேரத்தில் ஆராய்கிறது.

டிஸ்ஸப்பியர் மெசேஜ்களை அட்மின்கள் இன்னும் கட்டுப்படுத்தலாம்

டிஸ்ஸப்பியர் மெசேஜ்களை அட்மின்கள் இன்னும் கட்டுப்படுத்தலாம்

இந்த புதிய புதுப்பிப்பு ஆப் ஸ்டோரில் வெளியிடப்பட்டுள்ளது. IOS 2.21.71 பதிப்பிற்கான வாட்ஸ்அப் பயன்பாட்டின் நிலையான பதிப்பில் பயனர்களுக்கு இரண்டு புதிய மாற்றங்களைக் கொண்டுவருகிறது. முதல் மாற்றம் பயனர்கள் புகைப்படங்களையும் வீடியோக்களையும் திறக்காமல் எளிதாக பெரிய சைசில் காண உதவுகிறது. முந்தைய சிறிய சதுர பிரெவியூ முன்னோட்டத்தை விட இந்த முன்னோட்டம் மிகப் பெரியதாக இருக்கும்.

மனிதன் குரங்கிலிருந்து பிறக்கவில்லை -அவிழ்ந்தது பூமியின் பெரும் மர்ம முடிச்சு.!மனிதன் குரங்கிலிருந்து பிறக்கவில்லை -அவிழ்ந்தது பூமியின் பெரும் மர்ம முடிச்சு.!

டிஸ்ஸப்பியர் மெசேஜ்களின் அமைப்பை இயல்புநிலையாக மாற்றம்

டிஸ்ஸப்பியர் மெசேஜ்களின் அமைப்பை இயல்புநிலையாக மாற்றம்

மேலும், iOS க்கான வாட்ஸ்அப் 2.21.71 அப்டேட், மற்ற பங்கேற்பாளர்களுக்கு டிஸ்ஸப்பியர் மெசேஜ்களின் அமைப்பை இயல்புநிலையாக மாற்றும் திறனை மேலும் வழங்கியுள்ளது. முன்னதாக, நிர்வாகியால் மட்டுமே அதை இயக்க முடியும் என்ற நிலை இருந்து வந்தது, ஆனால் இப்போது குழுவின் ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் இந்த விருப்பம் திறக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஆப் ஸ்டோரில் உள்ள சேஞ்ச்லாக், குழுத் தகவலைத் திருத்து மாற்றுவதன் மூலம் நிர்வாகிகள் அம்சத்தை அணுக முடியும் என்று கூறுகிறது.

விரைவில் வந்து சேரும்

விரைவில் வந்து சேரும்

ஆப் ஸ்டோர் வழியாக இந்த புதிய அப்டேட் வெளிவருவதால், எல்லா பயனர்களும் அவர்களின் பகுதியில் அப்டேட் கிடைத்தவுடன் விரைவாக அப்டேட் செய்துகொள்ள முடியும். நீங்கள் உடனடியாக புதுப்பிப்பைப் பெறவில்லை எனில், இது ஒரு கட்டமாக வெளியிடப்படுவதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும், எனவே அப்டேட் உங்களுக்கு விரைவில் வந்து சேரும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியம்: பிபிசி பகீர்.!மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியம்: பிபிசி பகீர்.!

ஏழு நாட்களுக்குப் பிறகு மறைந்துவிடும்

ஏழு நாட்களுக்குப் பிறகு மறைந்துவிடும்

வாட்ஸ்அப்பின் காணாமல் போகும் டிஸ்ஸப்பியர் மெசேஜ்கள் ஆண்ட்ராய்டு, iOS மற்றும் லினக்ஸ்-பேஸ் KaiOS சாதனங்களுக்குக் கடந்த ஆண்டு நவம்பரில் கிடைத்தன. இந்த அப்டேட் இப்போது இந்தியப் பயனர்களுக்கும் நேரலையில் உள்ளது. எவ்வாறாயினும், டிஸ்ஸப்பியர் மெசேஜ்கள் இயக்கப்பட்டதும், ஒரு தனிநபருக்கோ அல்லது குழுவிற்கோ அனுப்பப்படும் உரை ஏழு நாட்களுக்குப் பிறகு மறைந்துவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.டிஸ்ஸப்பியர் மெசேஜ்களை இயக்குவதற்கு முன்பு நீங்கள் அனுப்பிய அல்லது பெற்ற மெசேஜ்களை இந்த அமைப்பு பாதிக்காது.

Best Mobiles in India

Read more about:
English summary
WhatsApp For iOS Brings a 2.21.71 Version That Brings Disappearing Messages Setting To Default : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X