Home
Apps

Whatsapp இல் 50 நபர் வீடியோ காலிங் அம்சத்திற்கான விருப்பம் அறிமுகம்! எப்படிப் பயன்படுத்துவது?

பேஸ்புக் நிறுவனம் கடந்த மாதம் மெசஞ்சர் ரூம்ஸ் என்ற அம்சத்தை அறிமுகம் செய்தது, இந்த புதிய அம்சத்தைப் பயனர்களின் பயன்பாட்டிற்காக சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து, இப்போது இந்த அம்சத்தை பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப் தளத்திலும் அறிமுகம் செய்யவுள்ளது. மெசஞ்சர் ரூம்ஸ் அம்சம் ஒரே நேரத்தில் 50 பேர் கொண்ட குரூப் வீடியோ கால் அழைப்பைப் பயன்படுத்த அனுமதிக்கிறது.

வாட்ஸ்அப் தளத்தில் மெசஞ்சர் ரூம்ஸ் அம்சம்

வாட்ஸ்அப் தளத்தில் மெசஞ்சர் ரூம்ஸ் அம்சம்

WABetaInfo இன் அறிக்கையின்படி, பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் பீட்டா 2.20.163 வெர்ஷனில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான மெசஞ்சர் ரூம்ஸ் அம்சத்தை வாட்ஸ்அப் தளத்தில் ஒருங்கிணைத்துள்ளது. இந்த புதிய அப்டேட் சாட் மெனுவில் உள்ள ஷேர் ஆப்ஷனுக்குள் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய "மெசஞ்சர் ரூம்ஸ்" விருப்பம் கேலரி மற்றும் டாக்குமெண்ட் ஆப்ஷன்களுக்கு மத்தியில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

50 நபர்களுடன் குரூப் வீடியோ காலிங் அழைப்பு

50 நபர்களுடன் குரூப் வீடியோ காலிங் அழைப்பு

மெசஞ்சர் ரூம்ஸ் அம்சம் ஒரேநேரத்தில் 50 நபர்களுடன் குரூப் வீடியோ அழைப்பைப் பயன்படுத்த ஒரு சாட் ரூம் அறையை உருவாக்க மெசஞ்சருக்கு உங்களை வழிநடத்துகிறது. இதுமட்டுமின்றி, மெசஞ்சர் ரூம்ஸ் அறையை உருவாக்குவதற்கான ஷார்ட்கட் ஆப்ஷன்கள், கால்ஸ் டேப் போன்ற வாட்ஸ்அப்பின் பிற பகுதிகளிலும் காணப்படுவதை WABetaInfo அதன் அதிகாரப்பூர்வ பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

பீட்டா வெர்ஷனில் சோதனை

பீட்டா வெர்ஷனில் சோதனை

இந்த அம்சம் தற்போது அமெரிக்கா உட்பட ஒரு சில நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலான பீட்டா பயனர்களுக்கு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய மெசஞ்சர் ரூம்ஸ் அம்சம் விரைவில் அதிக நாடுகளுக்கு விரிவாக்கப்படும் என்பது தெரிகிறது. பீட்டா சோதனை ஓட்டத்தின் கீழ் சோதனை செய்யப்பட்டு வரும் இந்த அம்சம் விரையில் அனைவருக்கும் வாட்ஸ்அப் இல் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் பீட்டா 2.20.163 வெர்ஷன்

வாட்ஸ்அப் பீட்டா 2.20.163 வெர்ஷன்

இந்த புதிய மெசஞ்சர் ரூம்ஸ் அம்சத்தை முயற்சித்துப் பார்க்க நீங்கள் விரும்பினால், அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் பீட்டா பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் அல்லது நம்பகமான மூலத்திலிருந்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனிற்கான வாட்ஸ்அப் பீட்டா 2.20.163 வெர்ஷனின் APK பைலை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். ஆனால், எப்பொழுதும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பக்கங்களிலிருந்து நம்பகத்தன்மையான அசல் APK பைலை பதிவிறக்கம் செய்வதே நல்லது.

மெசஞ்சர் ரூம்ஸ் அம்சத்திற்கான விளக்கம்

மெசஞ்சர் ரூம்ஸ் அம்சத்திற்கான விளக்கம்

புதிய மெசஞ்சர் ரூம்ஸ் அம்சம் இப்பொழுது உங்கள் வாட்ஸ்அப் சாட் ஷேர் ஆப்ஷனிற்குள் இருக்கும் கேமரா விருப்பத்தை மாற்றி அமைத்துள்ளது. கேமரா விருப்பம் எப்பொழுதும் போல உங்கள் சாட் பாக்ஸ் கீழ் இடத்தில் காணப்படுகிறது. நீங்கள் மெசஞ்சர் ரூம்ஸ் விருப்பத்தை கிளிக் செய்தால், இந்த அம்சம் என்ன என்பதை விளக்கும் அறிமுகத்தை வாட்ஸ்அப் வழங்குகிறது.

புதிய வீடியோ காலிங் அறையை உருவாக்க அனுமதி கேட்கும் வாட்ஸ்அப்

புதிய வீடியோ காலிங் அறையை உருவாக்க அனுமதி கேட்கும் வாட்ஸ்அப்

மெசஞ்சர் ரூம்ஸ் செயல்பாட்டைத் தொடர மெசஞ்சர் பயன்பாட்டைத் திறக்க விரும்புகிறீர்களா என்று வாட்ஸ்அப் அனுமதி கேட்கிறது.மெசஞ்சர் ரூம்ஸ் மூலம் புதிய வீடியோ காலிங் அறையை உருவாக்க விரும்பும் பயனர்கள் CONTINUE IN MESSENGER கிளிக் செய்து 50 நபர்களுக்கான குரூப் வீடியோ காலிங் அம்சத்தைத் தடையின்றி பயன்படுத்திக்கொள்ளலாம்.

மெசஞ்சர் ரூம்ஸ் அம்சத்தின் மிக சிறந்த சிறப்பே இதுதான்

மெசஞ்சர் ரூம்ஸ் அம்சத்தின் மிக சிறந்த சிறப்பே இதுதான்

நீங்கள் உருவாகியுள்ள சாட் ரூமில் மற்றவர்களை இணைக்க உங்கள் காண்டாக்டிற்கு சென்று நீங்கள் விரும்பும் நபர்களுக்கு சாட் ரூம்லிங்கை ஷேர் செய்தால் போதும். அந்த லிங்கை கிளிக் செய்து மற்றவர்களும் இணைந்துகொள்ளலாம். இதன் சிறப்பே பேஸ்புக் கணக்கு இல்லாவிட்டாலும் கூட, அவர்கள் உங்கள் வீடியோ அழைப்பில் இணையலாம் என்பது தான்.

More from GizBot

Best Mobiles in India

English summary
WhatsApp For Android Gets Facebook Messenger Rooms Integration With Beta Update : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X