வாட்ஸ்ஆப்பில் ரீடவுன்லோட் அம்சம் இணைப்பு; பயனர்கள் வரவேற்பு.!

வாட்ஸ்ஆப்பில் உருட்டப்பட்டுள்ள, ஒரு புதிய மேம்படுத்தல் ஆனது அநேகமாக அனைத்து பயனர்களாலும் விரும்பப்படும் என்பது போல் தெரிகிறது.

|

வாட்ஸ்ஆப்பில் உருட்டப்பட்டுள்ள, ஒரு புதிய மேம்படுத்தல் ஆனது அநேகமாக அனைத்து பயனர்களாலும் விரும்பப்படும் என்பது போல் தெரிகிறது. உலகின் மாபெரும் மெசேஜிங் தளமான வாட்ஸ்ஆப்பில், இப்படியொரு அம்சம் இடம்பெறுவது சற்று தாமதம் என்றாலும் கூட, வரவேற்கத்தக்கது.

நேற்று வரை, வட்ஸ்ஆப் வழியாக ஒருமுறை டவுன்லோட் செய்த மீடியா பைல்களை, மொபைல் மெமரியில் இருந்து டெலிட் செய்யும் பட்சத்தில் அதனை மீண்டும் டவுன்லலோட் செய்ய முடியாது அப்படி தானே.? இனி அந்த சிக்கல் இருக்காது.

என்ன பயன்.?

என்ன பயன்.?

இந்த சமீபத்திய அப்டேட்டை பெறும் பயனர்கள், தங்கள் மொபைல்களில் இருந்து மீடியா பைல்களை நீக்கியிருந்தாலும் கூட, அதை மீண்டும் டவுன்லோட் செய்ய அல்லது மீட்டு எடுக்க உதவும். அதாவது இனி வாட்ஸ்ஆப் வழியாக அனுப்பப்படும் மீடியாக்கள் உடனடியாக வாட்ஸ்ஆப் சேவையகங்களிலிருந்து நீக்கப்படாது, அதற்கு பதிலாக 30 நாட்களுக்கு ஒரு முறை நீக்கப்படும்.

எதையதெல்லாம் ரீடவுன்லோட் செய்யலாம்.?

எதையதெல்லாம் ரீடவுன்லோட் செய்யலாம்.?

இந்த அறிக்கையானது பிரபல வாட்ஸ்ஆப் வலைப்பதிவான வாட்ஸ்ஆப்பீட்டாஇன்ஃபோ (WABetaInfo) தளத்தில் இருந்து வெளியாகியுள்ளது. இந்த புதிய அம்சத்தின் கீழ், புகைப்படங்கள் மட்டுமின்றி, வீடியோக்கள், கிப் பைல்கள், வாய்ஸ் மெசேஜ்கள் மற்றும் டாகுமெண்ட்ஸ் உட்பட ஒவ்வொரு மீடியா பைல்களையும் ரீடவுன்லோட் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

டெலிட் ஆன எல்லாமே கிடைக்குமா.?

டெலிட் ஆன எல்லாமே கிடைக்குமா.?

இந்த இடத்தில உங்களால் அனைத்து மீடியா பைல்களையும் ரீடவுன்லோட் செய்ய முடியும் என்று அர்த்தம் இல்லை. சாட் ரெக்கார்டில் உள்ள மீடியா பைல்களை மட்டுமே மீண்டும் பதிவிறக்கம் செய்ய முடியும். ஒருவேளை குறிப்பிட்ட மீடியா ஆனது சாட்டில் இருந்து டெலிட் செய்யப்பட்டு விட்டால் அதை ஒன்று செய்ய முடியாது. சில முக்கிய கோப்புகளைத் தற்செயலாக டெலிட் செய்து விட்ட தருணத்தில் தான் இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

யாருக்கெல்லாம் கிடைக்கும்.?

யாருக்கெல்லாம் கிடைக்கும்.?

இந்த அப்டேட் ஆனது, வாட்ஸ்ஆப் வெர்ஷன் 2.18.106 மற்றும் 2.18.110-ல் கிடைக்கும். இந்த அம்சத்தின் சோதனை கட்டத்தின் போது, ​​வாட்ஸ்ஆப்பீட்டாஇன்ஃபோ, சில மாதங்களுக்கு முன்னர் டெலிட் செய்யப்பட்ட மீடியா பைல்களை கூட மீட்க முடியும் என்றும், வாட்சஆப்பினால், கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு முன்னர் டெலிட் செய்யப்பட்ட மெசேஜ்களை கூட டவுன்லோட் செய்ய முடியும் என்றும் கூறியுள்ளது.

மென்ஷனை (@) மிக எளிதாக சரி பார்க்க அனுமதிக்கிறது.!

மென்ஷனை (@) மிக எளிதாக சரி பார்க்க அனுமதிக்கிறது.!

இதற்கு முன்னதாக, பரிசோதனை தளத்தில், ஒரு புதிய வாட்ஸ்ஆப் க்ரூப் அம்சம் காணப்பட்டது. அந்த அம்சம் ஒரு க்ரூப் மெம்பருக்கு ஒரு மேலோட்டமான மற்றும் கூர்மையான பார்வையை வழங்குமாம். அதாவது, க்ரூப்பில் தன் பெயரின் கீழ் நிகழ்ந்துள்ள மென்ஷனை (@) மிக எளிதாக சரி பார்க்க அது அனுமதிக்குமாம். இது எப்படி வேலை செய்யும் என்பது பற்றிய விளக்கம் இல்லை. இருப்பினும் மென்ஷன்களை ஸ்க்ரோலிங் செய்யும் பட்டன் எதாவது இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

How to read deleted messages on whatsapp - KANNADA

"தேடல்" விருப்பம் வழியாக.!

உடன் சாட் விண்டோவில் மிதக்கும் "@" விருப்பத்தை அணுகுவதின் வழியாக, ஒருவர் மிக எளிமையாக க்ரூப் மெசேஜ்களை அணுக முடியும். கூடுதலாக, க்ரூப்பிற்குள் கிடைக்கும் "தேடல்" விருப்பம் வழியாக, எந்தவொரு பயனரின் ப்ரொபைல் விவரத்தையும் அணுக முடியும் அம்சமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப் க்ரூப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த பொதுவான அப்டேட்ஸ்களை தவிர, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு அம்சமும் இணைக்கப்பட்டுள்ளது.

ஸ்டாப் ரீஅடிக்ஷன் திறன்.!

ஸ்டாப் ரீஅடிக்ஷன் திறன்.!

அதாவது, க்ரூப்பை விட்டு வெளியேற்றப்பட்ட நபர்களை மீதும் சேர்ப்பது சார்ந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. மிக நீண்ட காலமாக காணாமல் போன ஒரு அம்சமாக இருந்த இந்த ஸ்டாப் ரீஅடிக்ஷன் திறன் ஆனது ஸ்பேமர்களுக்கு மிகப்பெரிய அடியாக இருக்கும். இது எப்படி செயல்படும் என்பது பற்றிய வார்த்தைகள் இல்லை. அதே சமயம், இது எவ்வளவு விரைவாக நமக்கு கிடைக்கும் என்பது சார்ந்த தகவலும் இல்லை.

நேர்மையான பயனர்களை ஈர்க்கும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம்.!

நேர்மையான பயனர்களை ஈர்க்கும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம்.!

சமீப காலமாக வாட்ஸ்ஆப் சில கடுமையான அம்சங்களை கொண்டு வருவது, பார்ப்பதற்கும் சரி, பயன்படுத்துவதற்கும் சரி மிகவும் நன்றாக இருக்கிறது. இது வாட்ஸ்ஆப் தளத்தின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் என்பதோடு சேர்த்து நேர்மையான பயனர்களை ஈர்க்கும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம். பேஸ்புக் நடத்திய சமீபத்திய டெவெலப்பரின் மாநாட்டில், க்ரூப் வீடியோ சாட் அம்சம் அறிவிக்கப்பட்டதும். அது பொது தளத்தில் மிக விரைவாக உருட்டப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எட்டு நிமிடங்கள் மற்றும் 16 விநாடிகள் என்று குறைக்கப்பட்டுள்ளது.!

எட்டு நிமிடங்கள் மற்றும் 16 விநாடிகள் என்று குறைக்கப்பட்டுள்ளது.!

முன்னதாக, 'டெலிட் பார் எவ்ரிஒன்' அம்சம் மீதான குறிப்பிட்ட மாற்றம் அறிவிக்கப்பட்டது. இது மெசேஜை பெறுநர் காண்பதற்கு முன்னரே டெலிட் செய்யும் திறனை அனுப்புநருக்கு வழங்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆரம்பத்தில் சில நிமிடங்கள் மட்டுமே என்கிற காலக்கெடுவை கொண்டு அறிமுகமான டெலிட் அம்சம், பின்னர் 1 நாள் என்கிற மிக நீண்ட காலக்கெடுவை பெற்றது. இப்போது அது, ​​ஒரு மணிநேரம், எட்டு நிமிடங்கள் மற்றும் 16 விநாடிகள் என்று குறைக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
WhatsApp Finally Lets Users to Redownload Deleted Media. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X