வாட்ஸ்ஆப் கொண்டுவருகிறது புதிய அம்சம்: கம்ப்யூட்டர் போதும்: செல்போன் வேண்டாம்.!

|

வாட்ஸ் ஆப் செயலியை உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர், குறிப்பாக இந்த செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்ந்த வண்ணம் உள்ளது, இந்நிலையில் அந்நிறுவனம் புதிய அம்சத்தை வழங்க திட்டமிட்டுள்ளளது.

கணினியில் வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் வசதி

கணினியில் வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் வசதி

இப்போது அலுவலக பயன்பாட்டுக்கு எளிதாக டெஸ்க்டாப் வெர்ஷன் பயன்படுகிறது, வாட்ஸ்ஆப் செயலியின் கியுஆர் கோட் மூலம் கணினியில் இணைத்து வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தலாம், இந்நிலையில் இண்டர்நெட் வசதி செல்போனில் இணைக்கப்படாமலேயே கணினியில் வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என வாட்ஸ்ஆப் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்போன் ஆஃப் செய்யப்பட்டிருந்தாலும் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தலாம்

செல்போன் ஆஃப் செய்யப்பட்டிருந்தாலும் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தலாம்

குறிப்பாக வாட்ஸ்ஆப் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது என்னவென்றால், universal windows platform செயலியை new multi platform சிஸ்டம் உடன் இணைந்து பணியாற்றவுள்ளோம், இதன் மூலம் உங்கள் செல்போன் ஆஃப்
செய்யப்பட்டிருந்தாலும் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நான்கு ரியர் கேமராக்களுடன் அசத்தலான ஹூவாய் நோவா 5ஐ ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்நான்கு ரியர் கேமராக்களுடன் அசத்தலான ஹூவாய் நோவா 5ஐ ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்

வீடியோ ஸ்டேட்டஸ்

வீடியோ ஸ்டேட்டஸ்

மேலும் வாட்ஸ்ஆப் செயலியில் வீடியோ ஸ்டேட்டஸ் வைக்க நமக்கும் பெரிதும் உதவியாக இருக்கிறது யூடியூப். குறிப்பாக இந்த யூடியூப் தளத்தில் அனைத்து வீடியோக்கள் இருப்பதால் பதிவறக்கம் செய்து, அதன்பின் எடிட் செய்து வாட்ஸ்ஆப் செயலியில் ஸ்டேட்டஸாக வைக்க முடியும்

 ytcutter.com என்ற இணையதளம்

ytcutter.com என்ற இணையதளம்

இந்நிலையில் யூடியூப் வீடியோவை தனியே பதிவிறக்கம் செய்து, எடிட் செய்து வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸாக வைப்பதற்கு பதில், ரிஸ்க் எடுக்காமல் யூடியூப் வீடியோவை ytcutter.com என்ற இணையதளம் மூலம் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸாக வைப்பதற்கு எளிய வழிமுறை உள்ளது, அதைப் பார்ப்போம்.

யூடியூப் வீடியோ

யூடியூப் வீடியோ

முதலில் நமக்கு பிடித்த யூடியூப் வீடியோ URL-ஐ தேர்வு செய்துகொள்ள வேண்டும்.

அடுத்து ytcutter.com இணையதளத்திற்கு செல்ல வேண்டும், பின்பு நீங்கள் தேர்வு செய்த URL-ஐ பதிவிட வேண்டும்.

இப்போது யூடியூப் வீடியோ அந்த இணையதளப் பக்கத்தில் காட்டப்படும், வீடியோவில் எந்த பகுதி வேண்டுமோ அதில் கர்சரை

நகர்த்தி கொண்டு வரவேண்டும், பின்பு Start என்பதை தேர்வு செய்ய வேண்டும்

வீடியோ எதுவரை வேண்டுமோ அதுவரைக்கும் வீடியோ பார்த்து விட்டு End ஆப்ஷனை கொடுக்க வேண்டும்.

உடனே இப்போது டவுன்லோடு ஆப்ஷனை கிளிக் செய்து, எளிமையாக வாட்ஸ்ஆப்-ல் ஸ்டேட்டஸாக வைக்கலாம்.

Best Mobiles in India

English summary
WhatsApp is reportedly building a desktop version that works without your phone : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X