வாட்ஸ்ஆப்பில் உள்ள டெலிட் அம்சத்தின் காலக்கெடுவில் மாற்றம்.! இனி..!?
தொடர்ச்சியான முறையில், புதிய அம்சங்களை இணைத்து கொண்டு வரும் வாட்ஸ்ஆப், இன்று, ஏற்கனவே இருக்குமாமொரு அம்சத்தில் சிறிய மாற்றம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ச்சியான முறையில், புதிய அம்சங்களை இணைத்து கொண்டு வரும் வாட்ஸ்ஆப், இன்று, ஏற்கனவே இருக்குமாமொரு அம்சத்தில் சிறிய மாற்றம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. அந்த அம்சம், மிகவும் எதிர்பார்க்கப்பட்டு பின்னர் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கப்பட்ட 'டெலிட் பார் எவ்ரிஒன்' அம்சம் தான். இது மெசேஜை பெறுநர் காண்பதற்கு முன்னரே டெலிட் செய்யும் திறனை அனுப்புநருக்கு வழங்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
இந்த அம்சத்தின் காலக்கெடு, அதாவது அனுப்பட்ட மெசேஜை எத்தனை நிமிடத்திற்குள் டெலிட் செய்யலாம் என்கிற காலக்கெடுவில் செய்யப்பட்டுள்ள மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறைக்கப்பட்டுள்ளது.!
ஆரம்பத்தில் சில நிமிடங்கள் மட்டுமே என்கிற காலக்கெடுவை கொண்டு அறிமுகமான டெலிட் அம்சம், பின்னர் 1 நாள் என்கிற மிக நீண்ட காலக்கெடுவை பெற்றது. இப்போது அது, ஒரு மணிநேரம், எட்டு நிமிடங்கள் மற்றும் 16 விநாடிகள் என்று குறைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலுடன் சேர்த்து, வாட்ஸ்ஆப்பில் சாட் பில்டர்ஸ் எனும் அம்சம் பற்றிய விவரமும் வெளியாகியுள்ளது.

சாட் பில்டர்ஸ் அம்சம்.!
இந்த தகவலானது வரப்போகும் அம்சங்களை பரிசோதிக்கும் தளமான, வாட்ஸ்ஆப்பீட்டா இன்ஃபோ வழியாக கிடைக்கப் பெற்றுள்ளது. வெளியான தகவலின் படி, கூறப்படும் புதிய சாட் பில்டர்ஸ் அம்சம் ஆனது, ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான பிஸ்னஸ் வாட்ஸ்ஆப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

மூன்று தேடல் விருப்பங்கள் கிடைக்கும்.!
பிஸ்னஸ் வாட்ஸ்ஆப்பில் இணைக்கப்பெற்றுள்ள சாட் பில்டர்ஸ் அம்சமானது, நீண்ட நெடிய சாட்டில் உள்ள ஒரு குறிப்பிட்ட மெசேஜை மிக விரைவாக தேடி கண்டுபிடிக்க அனுமதிக்கும். அதாவது பில்டர்ஸ் ஐகானை டாப் செய்ய, மூன்று தேடல் விருப்பங்கள் கிடைக்கும், அன்ரீட் சாட்ஸ், க்ரூப்ஸ் மற்றும் பிராட்கேஸ்ட் லிஸ்டஸ். அதன் வழியாக தேவையான மெசேஜை அணுகலாம்.

வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்ஸ்.!
இது தவிர 2.18.84 வெர்ஷனில், வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்ஸ்களை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இதற்கு முன்னதாக, ரெஸ்ட்ரிக் க்ரூப் அம்சம் உருட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த அம்சமானது, ஸ்மார்ட்போனில் வேறு வேலைகளை பார்க்க முடியாத அளவிற்கு, (குறிப்பாக வீடியோ ஸ்ட்ரீமிங் செய்யும் போது) கடுப்பை கிளப்பும் க்ரூப் நோட்டிபிகேஷன்களுக்கு, ஒரு முடிவை கட்டியுள்ளது.

அப்படி என்ன கட்டுப்பாடுகள்.?
எவரையும் எரிச்சலூட்டக்கூடியதாக இருக்கும், வாட்சஆப் க்ரூப் நோட்டிபிகேஷன்களை கட்டுப்படுத்த உருட்டப்பட்டுள்ள அம்சம் தான் - ரெஸ்ட்ரிக்ட் க்ரூப் (Restrict Group) அம்சம். கடந்த சில வாரங்களாகேவ பேசப்பட்ட, இந்த அம்சமானது அட்மின்களுக்கே உரிய கூடுதல் கட்டுப்பாட்டை வழங்குகிறது. அப்படி என்ன கட்டுப்பாடுகள்.?

மெசேஜை படிக்க முடியும், ஆனால், ரிப்ளை செய்ய முடியாது.!
வாட்ஸ்ஆப்பீட்டாஇன்ஃபோ (WABetaInfo) தளம் கொடுத்துள்ள விளக்கத்தின் படி, கூறப்படும், ரெஸ்ட்ரிக்ட் க்ரூப் டூல் ஆனது, க்ரூப் அட்மின்களை மட்டுமே மெசேஜ் செய்ய அனுமதிக்கும். அதாவது, க்ரூப்பின் இதர மெம்பர்களால், அட்மினின் மெசேஜை படிக்க முடியும், ஆனால், ரிப்ளை செய்ய முடியாது. யாரேனும், க்ரூப்பில் மெசேஜ் செய்ய விரும்பினால், அவர்கள் அட்மினை தொடர்பு கொள்ள வேண்டும்.

வாட்ஸ்ஆப் 2.18.210 வெர்ஷனில் காணப்பபட்டுள்ளன.!
இந்த புதிய ரெஸ்ட்ரிக்ட் க்ரூப் அம்சமானது, எப்போது எந்தெந்த தளங்களில் உருட்டப்படும் என்பது பற்றிய வார்த்தைபால் இல்லை. ஆனால், நிச்சயமாக நீண்ட காலம் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. வரப்போகும் இந்த அப்டேட் உடன், வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்ஸ் உட்பட பல பிரபலமான அம்சங்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அவைகள், கோவூகுள் பிளே பீட்டா பதிப்பான, வாட்ஸ்ஆப் 2.18.210 வெர்ஷனில் காணப்பபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னர் வெளியான பிப் மோட் பற்றி.?
பிப் மோட் எனும் புதிய மேம்படுத்தல் ஆனது, தற்போது வரையிலாக ஐபோன் பயனர்களுக்கு மட்டுமே உருட்டப்பட்டுள்ளது. எனினும் கூடிய விரைவில் ஆண்ட்ராய்டு தளத்தையும் எட்டும் என்பதில் சந்தேகம் வேண்டாம். ஏனெனில் வாட்ஸ்ஆப் நிறுவனம் ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் என எந்த பாரபட்சமும் பார்ப்பதில்லை.

வெளியாகியுள்ள பிப் மோட் எனப்படும் அம்சத்தின் நன்மை என்ன.?
பிப் என்பது பிக்சர்-இன்-பிக்சர் (Picture-in-Picture) என்பதின் சுருக்கமாகும். சில மாதங்களுக்கு முன் பரிசோதனை தளத்தில் காணப்பட்ட இந்த பிக்சர்-இன்-பிக்சர் மோட் ஆனது, இறுதியாக ஐஓஎஸ் தளத்தின் வாட்ஸ்ஆப் அப்டேட்டில் உருட்டப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சம் ஆனது, வாட்ஸ்ஆப்பில் இருந்தபடியே, அதாவது வாட்ஸ்ஆப்பை விட்டு வெளியேறாமலேயே பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்களை அணுகும் ஆதரவை வழங்கும்.

அதெப்படி சாத்தியம்.?
அதாவது, வாட்ஸ்ஆப் சாட் வழியாக, பகிரப்படும் பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் இணைப்புகளை வாட்ஸ்ஆப்பில் இருந்தபடியே பிளே செய்யலாம் அல்லது திறக்கலாம் அல்லது அணுகலாம். அதுமட்டுமின்றி பிளே ஆகி கொண்டிருக்கும் வீடியோவை பார்த்துக்கொண்டே (க்ளோஸ் செய்யாமலேயே) மற்றொரு வாட்ஸ்ஆப் சாட்டிற்கு செல்வது மட்டுமின்றி, வழக்கம் போல மெசேஜ்களை பரிமாறிக்கொள்ள முடியும்.

ஆண்ட்ராய்டில் எப்போது கிடைக்கும்.?
வாட்ஸ்ஆப்பின் ஐஓஎஸ் பதிப்பின் மிக முக்கியமான அம்சமாக பார்க்கப்படும் பிப் மோட் ஆனது கூடிய விரைவில் ஆண்ட்ராய்டு தளத்திலும் உருட்டப்படும் என்று எதிர்பார்க்கலாம். அடு சார்ந்த தகவலை உடனுக்குடன் அறிந்து கொள்ள தமிழ் கிஸ்பாட் தளத்தின் ஆப்ஸ் பிரிவுடன் இணைந்திருக்கவும். இதற்கிடையில் வருகிற மே 25 ஆம் தேதி அன்று, வாட்ஸ்ஆப்பில் சில பொது தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறைகளும் (General Data Protection Regulation - GDPR) நிகழவுள்ளன. நிகழும் ஒழுங்குமுறையின் கீழ், வாட்ஸ்ஆப்பில் இணையும் பயனர்களுக்கு, குறைந்தபட்சம் 16 வயது இருக்க வேண்டும் என்கிற கட்டுப்பாடு ஏற்படுத்தப்படும்.


Click it and Unblock the Notifications