மிரட்டலான வாட்ஸ் ஆப் "டார்க் மோடு" அப்டேட் ஒருவழியாக வெளியிடப்பட்டுள்ளது.!
ஒரு வழியாக அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த மிரட்டலான டார்க் மோடு சேவையை வாட்ஸ் ஆப் நிறுவனம் தற்பொழுது வெளியிட்டுள்ளது.
வாட்ஸ் ஆப் நிறுவனம் விரைவில் தனது படார்க் மோடு சேவையை அறிமுகம் செய்யுமென்று கடந்த சில மாதங்களாகத் தெரிவித்து வந்தது. ஒரு வழியாக அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த மிரட்டலான டார்க் மோடு சேவையை வாட்ஸ் ஆப் நிறுவனம் தற்பொழுது வெளியிட்டுள்ளது.

வாட்ஸ் ஆப் பீட்டா அப்டேட்
தற்பொழுது வெளியாகியுள்ள புதிய வாட்ஸ் ஆப் பீட்டா அப்டேட்டில் டார்க் மோடு சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது வெளியாகியுள்ளது வாட்ச ஆப் 2.19.82 பீட்டா அப்டேட்டில் இந்த புதிய டார்க் மோடு சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பேக்கிரௌண்ட் லேஅவுட்
புதிதாய் அறிமுகம் செய்துள்ள டார்க் மோடு சேவையின் படி, வாட்ஸ் ஆப் இன் பேக்கிரௌண்ட் லேஅவுட் கருப்பு நிறத்தில் மாற்றப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் பேஸ்புக் மெஸ்சேன்ஜ்ர் இல் டார்க் மோடு சேவை அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய டார்க் மோடு
இந்த புதிய டார்க் மோடு சேவையின் படி, பயனர்களின் கண்களுக்குக் குறைவான சிரமம் மற்றும் பாதுகாப்பு கிடைக்குமென்றும், அதேபோல் டிஸ்பிளேயின் வெளிச்சத்தை குறைப்பதன் மூலம் போனின் பேட்டரி பயன்பாடும் குறைவாய் பயன்படுத்திக்கொள்ள முடியுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டார்க் மோடு எனபில்
புதிய டார்க் மோடு சேவை வாட்ஸ் ஆப் செட்டிங்ஸ் இல் இருக்கும் என்றும், டார்க் மோடு சேவையைப் பயனர் எனபில் செய்ததும் நோட்டிபிகேஷன், சாட், செட்டிங்ஸ் மற்றும் டேட்டா ஸ்டோரேஜ் போன்ற அணைத்து சேவைக்கும் டார்க் மோடு எனபில் செய்யப்படும்.

அடுத்த அப்டேட்
அதன் அடுத்த அப்டேட்டில் பிங்கர்பிரிண்ட் லாக், ஸ்டிக்கர் இன்டெகிரஷன் அம்சம், 3டி டச் ஆக்ஷன் ஸ்டேட்டஸ் மற்றும் பல சிறப்பம்சங்கள் வாட்ஸ் ஆப் நிறுவனம் வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications