இனி வாட்ஸ்ஆப்பில் குற்றவுணர்வுகளுக்கு இடமில்லை; ரீக்கால் அம்சம்.!

Written By:

"Very sorry.. தெரியாம உங்களுக்கு அனுப்பிட்டேன்.. Delete பண்ணிடுங்க", "அச்சச்சசோ ஐ யம் சாரி.. Wrong Tab, Unknowingly sent to you" என்று வாட்ஸ்ஆப்பில் டைப் அடிக்காத ஆட்களே இல்லை எனலாம்.

இனி வாட்ஸ்ஆப்பில் குற்றவுணர்வுகளுக்கு இடமில்லை; ரீக்கால் அம்சம்.!

வாட்ஸ்ஆப்பில் ஏதோவொரு சாதாரணமான மெசேஜை தவறான நபருக்கு அனுப்பிவிட்டால் பரவாயில்லை. ஒருவேளை, மிகவும் தனியுரிமை மிக்க அல்லது ரகசியமான தகவலை தவறான வாட்ஸ்ஆப் சாட்டில் அல்லது குரூப்பில் போட்டுவிட்டால் நிலை இன்னும் மோசமாகிவிடும் அல்லவா.??

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ரீக்கால் அம்சம்

ரீக்கால் அம்சம்

இப்படியான பயனர்களின் குற்ற உணர்வுகளுக்கு இடமளிக்க கூடாது என்ற நோக்கத்திலேனாலே வாட்ஸ்ஆப் நிறுவனம் அதன் "ரீக்கால்" (Recall) அம்சத்தை, அதாவது "அன்சென்ட்" (Unsent) அம்சத்தை தனது பயனர்களுக்கு உருட்ட திட்டமிட்டுள்ளது.

'அன்சென்ட்' அல்லது 'டெலிட் பார் எவ்ரிஒன்'

'அன்சென்ட்' அல்லது 'டெலிட் பார் எவ்ரிஒன்'

மூன்று மாதங்களுக்கு முன்னரே மிகவும் பரவலாக எதிர்பார்க்கப்பட்டஇந்த 'அன்சென்ட்' அல்லது 'டெலிட் பார் எவ்ரிஒன்' (delete for everyone) அம்சமானது தற்போது இறுதிக்கட்ட பரிசோதனையை எட்டிவிட்டது, விரைவில் இயக்கப்படும்" என்று வாட்ஸ்ஆப்பீட்டாஇன்ஃபோ (WABetaInfo) ட்வீட்டியுள்ளது.

படங்கள், வீடியோக்கள், ஜிப் பைல்கள் மற்றும் ஆவணங்கள்

படங்கள், வீடியோக்கள், ஜிப் பைல்கள் மற்றும் ஆவணங்கள்

அதாவது, செய்திகளை அனுப்பிய ஐந்து நிமிடங்களுக்குள் பயனர்கள் அந்த செய்திகளை ரீக்கால் செய்ய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெக்ஸ்ட் செய்திகளை மட்டுமில்லாமல் படங்கள், வீடியோக்கள், ஜிப் பைல்கள் மற்றும் ஆவணங்கள் ஆகிய அனைத்தையுமே ரீக்கால் அம்சத்தின்கீழ் திரும்ப பெறலாம்.

வாட்ஸ்ஆப்பின் 2.17.30+ வெர்ஷனில்..

வாட்ஸ்ஆப்பின் 2.17.30+ வெர்ஷனில்..

இருப்பினும், பெறுபவர் மூலம் படிக்கப்படாத செய்திகளை மட்டுமே ரீக்கால் செய்ய முடியும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. முன்னர் வெளியான வாட்ஸ்ஆப்பீட்டாஇன்ஃபோ அறிவிப்பின்கீழ் இந்த ரீக்கால் அம்சமானது, வாட்ஸ்ஆப்பின் 2.17.30+ வெர்ஷனில் இயங்குகிறதென்பது தெரியவந்தது.

ஒரே நேரத்தில் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு

ஒரே நேரத்தில் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு

ஏற்கனவே வாட்ஸ்ஆப் 2.17.30 வெர்ஷன் ஆப் ஸ்டோரில் கிடைக்கின்ற நிலைப்பாட்டில், ரீக்கால் அம்சம் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் உருட்டப்படலாம் மற்றும் இந்த அம்சம் ஒரே நேரத்தில் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு என இரண்டிற்கும் கிடைக்கும் என தெரிகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
WhatsApp could soon allow users to recall sent messages: Report. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot