வாட்ஸ்ஆப் செயலியில் கிடைக்கிறது புதிய வசதி: ட்ரை பண்ணுங்க மக்களே.!
குறிப்பாக டிவிட்டரில் வெளிவந்துள்ள தகவலின் அடிப்படையில் பேஸ்புக் தனது வாடிக்கையாளர்கள் வியாபாரங்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என நினைக்கிறது.
வாட்ஸ்ஆப் நிறவனம் தொடர்ந்து புதிய அம்சங்களை சேர்த்த வண்ணம் உள்ளது, குறிப்பாக இந்நிறுவனம் விரைவில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பகுதியில் விளம்பரங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. தற்சமயம் வாட்ஸ்ஆப் செயலியில் கான்சிக்யூட்டிவ் வாய்ஸ் மெசேஜஸ் (Consecutive Voice Messages) என்ற பிளேபேக் அம்சம் ஆண்ட்ராய்டு அப்டேட் மூலம் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.

இருமாதங்கள் சோதனைக்கு பின்பு..
இதற்க்குமுன்பு கடந்த மார்ச் மாதம் வாட்ஸ்ஆப் பீட்டா 2.19.86 பதிப்பில் இந்த அம்சம் வழங்கப்பட்டது, பின்பு இருமாதங்கள் சோதனைக்கு பின்பு இந்த புதிய வசதி அனைவருக்கும் வழஙப்பட்டு இருக்கிறது. குறிப்பாக வாட்ஸ்ஆப் செயலியில் சேர்க்கப்பட்டு இருக்கும் இந்த அம்சம் மூலம் வாய்ஸ் மெசேஸஜ்களை தொடர்சியாக கேட்க முடியும்.

புதிய அப்டேட்
இந்த செயலியில் இப்போது வாய்ஸ் ய்ஸ் மெசேஜ்களை ஒவ்வொன்றாகவே கேட்க முடியும். குறிப்பாக புதிய அப்டேட் மூலம் வாய்ஸ் மெசேஜ்களில் ஒரே கிளிக் செய்து இடைவெளியின்றி கேட்க முடியும்.
பின்பு இதனுடன் வாட்ஸ்ஆப் அப்டேட்டில் CVE-2019-3568பிழையும் சரி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பைவேர் தாக்குதல்
அன்மையில் வாட்ஸ்ஆப் செயலியில் ஸ்பைவேர் தாக்குதல் கண்டறியப்பட்டது, இந்த ஸ்பைவேர் பொதுவாக பயனரின் மொபைலில் வாய்ஸ் கால் மூலம் விவரங்களை சேகரித்தது. பின்பு வாய்ஸ்கால் அழைப்பை பயனர் ஏற்றபலும் ஏற்கவில்லை என்றாலும் பயனர் விவரங்களை இந்த ஸ்பைவேர் சேகரித்தது உறுதி செய்யப்பட்டது.

மின்னஞ்சல்
ஸ்பைவேர் பொறுத்தவரை பயனர் ஸ்மார்ட்போனின் குறுந்தகவல்கள், ஜிபிஎஸ், லோகேஷன் மின்னஞ்சல் போன்ற பல்வேறு விவரங்களை சேகரித்து வந்தது. கடந்த மாதம் கண்டறியப்பட்ட பிழை ஏற்கனவே முந்தைய அப்டேட் மூலம் சரி செய்யப்பட்டது.

விளம்பரங்கள் தோன்றும்
மேலும் 2020-ம் ஆண்டு முதல் வாட்ஸ்ஆப் செயலியில் விளம்பரங்கள் தோன்றும் என பேஸ்புக் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதுபற்றிய அறிவிப்பு நெதர்லாந்தில் நடைபெற்ற பேஸ்புக் வருடாந்திர விளம்பர பொதுக்கூட்டத்தில் வெளியாகி இருக்கிறது.மேலும் வாட்ஸ் செயலியில் எங்கு விளம்பரங்கள் தோன்றும் என்ற விவரங்கள் ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.
டிவிட்டரில் வெளிவந்துள்ள தகவலின் அடிப்படையில்
குறிப்பாக டிவிட்டரில் வெளிவந்துள்ள தகவலின் அடிப்படையில் பேஸ்புக் தனது வாடிக்கையாளர்கள் வியாபாரங்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என நினைக்கிறது. இந்த புதிய அம்சம் வாட்ஸ்ஆப்பில் கிளிக் செய்யப்படும் விளம்பரங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாவது திட்டம்
இந்நிறுவனத்தின் இரண்டாவது திட்டம் இன்ஸ்டாகிராம் சார்ந்து ஆகும், அதன்படி வாட்ஸ்ஆப் (ஐ.ஜி) கிளிக் செய்யப்படும் விளம்பரங்கள் என குறிப்பிடப்படுகிறது. மூன்றாவது திட்டத்தில் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் பகுதியில் விளம்பரங்களை தோன்ற செய்வது ஆகும், இது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் விளம்பரங்களை தோன்றுவதை போன்று செயல்படும் என்று தெரவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்ஆப் டிப்ஸ் - இது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்
ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவரும் கட்டாயம் பயன்படுத்தும் குறுந்தகவல் செயலியாக வாட்ஸ்ஆப் விளங்குகின்றது. வாட்ஸ்ஆப் மக்களின் தொலைதொடர்பு முறையை செயலி வாயிலாக எளிமையாக்கியிருக்கின்றது என்றும் கூறலாம்.
அதிக செலவில்லாமல் இண்டர்நெட் வசதி இருந்தால் உலகின் எந்த இடத்திற்கும் தொடர்பு கொள்ள முடியும் என்ற நிலையை வாட்ஸ்ஆப் உருவாக்கியுள்ளது. இதெல்லாம் எங்களுக்கு தெரியாதா என்கின்றீர்களா. இவை தெரிந்திருந்தாலும் வாட்ஸ்ஆப் குறித்து உங்களுக்கு தெரியாததும் இருக்கின்றது.
அந்த வகையில் வாட்ஸ்ஆப் குறித்து நீங்கள் அறிந்திராத சில வியப்பூட்டும் தகவல்களை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

ப்ரொபைல் போட்டோ
உங்க நண்பரின் ப்ரொபைல் போட்டோவை வாட்ஸ் அப்பில் மாற்ற முடியும், ஆனால் அது உங்களுக்கு மட்டும் தான் தெரியும். அதற்கு உங்களுக்கு பிடித்த போட்டோவை 561*561 அளவில் எடுத்து அதில் உங்க நண்பர் எண்ணை பதிவு செய்து மெமரி கார்டு- வாட்ஸ் அப் - ப்ரொபைல் போட்டோ சென்று ஏற்கனவே இருக்கும் போட்டோவை ரீ ப்ளேஸ் செய்தால் வேலை முடிந்தது

வாட்ஸ் ஆப் அக்கவுன்ட்
ஆண்ட்ராய்டில் டூயல் சிம் பயன்படுத்துபவர்கள் இரு வாட்ஸ் ஆப் அக்கவுன்டகளை ஆரம்பிக்க நீங்க ஸ்விட்ச்மீ என்ற அப்ளிகேஷனை பயன்படுத்தலாம்.

மெசேஜ்
தவறுதலாக டெலீட் செய்த மெசேஜ்களை மீட்க உங்க எஸ்டி கார்டு சென்று வாட்ஸ் ஆப் - டேட்டாபேஸ் இல் நீங்கள் டெலீட் செய்த அனைத்து மெசேஜ்களும் இருக்கும்.

ஆட்டோ இமேஜ் டவுன்லோடு
வாட்ஸ் அப்பில் வரும் போட்டோ, வீடியோ தானாக டவுன்லோடு ஆவதை கட்டுப்படுத்த செட்டிங்ஸ் - சாட் செட்டிங்ஸ் - மீடியா ஆட்டோ டவுன்லோடு சென்று உங்களுக்கு தேவையான ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ளலாம்.

மொபைல் நம்பர்
உங்க மொபைல் நம்பர் என்டர் செய்யாமல் வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியும் என உங்களுக்கு தெரியுமா.

வாய்ஸ் நோட்டிபிக்கேஷன்
வாட்ஸ் ஆப் நோட்டிப்பிக்கேஷன்களை படிக்க நேரமில்லை என்றால் வாய்ஸ் ஃபார் நோட்டிபிக்கேஷன் செயலி மூலம் குரல் வடிவில் நோட்டிபிகேஷனஅகளை பெற முடியும்.

வாட்ஸ் ஆப் ஸ்டாட்ஸ்
வாட்ஸ் ஸடாட் ஃபார் வாட்ஸ் ஆப் அப்ளிகேஷன் மூலம் நீங்கள் வாட்ஸ் ஆப் டவுன்லோடு செய்ததில் இருந்து மேற்கொண்டவற்றை அறிந்து கொள்ள முடியும்.

வாட்ஸ் அப் அக்கவுன்ட்
வாட்ஸ் அப் அக்கவுன்டை டெலீட் செய்ய செட்டிங்ஸ் - அக்கவுன்ட் - டெலீட் கொடுத்தால் வேலை முடிந்தது

போன் நம்பர்
வாட்ஸ் ஆப்பில் போன் நம்பரை மாற்றினால் பழைய எண்ணில் இருக்கும் மெசேஜ்கள் அழிந்து விடும். அவ்வாறு அழியாமல் இருக்க செட்டிங்ஸ் - அக்கவுன்ட் - சேன்ஞ் நம்பர் கொடுத்தால் புதிய நம்பரிலும் மெசேஜ் அழியாமல் இருக்கும்

ஸ்பை
உங்க நண்பரின் வாட்ஸ் ஆப் அக்கவுன்டை வேவு பார்க்க ஸ்பைமாஸ்டர் ப்ரோ தான் சிறந்தது. உங்க நண்பரின் அக்கவுன்டில் இருக்கும் அனைத்து மெசேஜ் மற்றும் போட்டோ, வீடியோ என எல்லாவற்றையும் இதில் பார்க்க முடியும்


Click it and Unblock the Notifications