சூசகமாக முடிவு எடுத்து அதிரவிட்ட வாட்ஸ் ஆப்.! என்னனு தெரியுமா?
வாட்ஸ் ஆப் நிறுவனம் தற்போது ஒரு சில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. தன்னை காத்துக் கொள்ளவும் சந்தையில் நிலை நிறுத்திக் கொள்ளவும். வணிக சாமர்த்தியமான முடிவுகளையும் எடுத்து வருகின்றது. இதில் வாட்ஸ்
வாட்ஸ் ஆப் நிறுவனம் தற்போது ஒரு சில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. தன்னை காத்துக் கொள்ளவும் சந்தையில் நிலை நிறுத்திக் கொள்ளவும்.
வணிக சாமர்த்தியமான முடிவுகளையும் எடுத்து வருகின்றது. இதில் வாட்ஸ் ஆப் நிறுவனம் வருமானம் ஈட்ட

இதுபோன்ற நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பொது மக்களையும் இந்த செயல் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வருமானம் குறைவு:
கடந்த சில மாதங்களுக்கு முன் வாட்ஸ் ஆப் செயலியால் தங்களுக்கு எந்த வருமானம் இல்லை என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
வாட்ஸ் ஆப் செயலியால் வருமானம் இல்லை என்றும் கவலையை தெரிவித்து இருந்தது. இந்நிலையில் ஒரு முக்கிய முடிவையும் எடுத்துள்ளது.

வருமானம் ஈட்ட முடிவு:
இந்நிலையில், இலவசமாக பயன்படுத்தப்படும் குறுஞ்செய்தி அனுப்பும் செயலியான வாட்ஸ்ஆப்புக்கு நாளுக்கு நாள் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதன் மூலம் வருமானம் ஈட்ட பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

வாட்ஸ் ஆப்பில் விளம்பரம்:
அதன்படி, வரும் 2020ஆம் ஆண்டு முதல் வாட்ஸ்ஆப்பில் விளம்பரங்கள் வரவிருப்பதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. இதனால் வாட்ஸ் ஆப்புக்கு வருவாயை அதிகரிக்கவும் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

லிங்குடன் விளம்பரம்:
நெதர்லாந்தில் நடந்த பேஸ்புக் வர்த்தக மாநாட்டில் இதுகுறித்து வெளியிடப்பட்ட தகவலில், முதல்கட்டமாக இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் வருவது போல வாட்ஸ்ஆப் ஸ்டோரிகளுக்கு இடையே லிங்குடன் விளம்பரம் செய்யும் வசதி வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்
மொபைல் போனில் இன்டர்நெட் இருந்தாலே வாட்ஸ் அப்பை நீங்க உபயோகிக்க முடியும். வாட்ஸ் அப் இல்லாமல் இன்று யாருமே இருக்க மாட்டார்கள் என்பதால் வாட்ஸ் அப் பற்றி நீங்கள் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய அம்சங்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம், கீழ் இருக்கும் ஸ்லைடர்களில் பட்டியலை பார்க்கவும்

ப்ரொபைல் போட்டோ
உங்க நண்பரின் ப்ரொபைல் போட்டோவை வாட்ஸ் அப்பில் மாற்ற முடியும், ஆனால் அது உங்களுக்கு மட்டும் தான் தெரியும். அதற்கு உங்களுக்கு பிடித்த போட்டோவை 561*561 அளவில் எடுத்து அதில் உங்க நண்பர் எண்ணை பதிவு செய்து மெமரி கார்டு- வாட்ஸ் அப்-ப்ரொபைல் போட்டோ சென்று ஏற்கனவே இருக்கும் போட்டோவை ரீ ப்ளேஸ் செய்தால் வேலை முடிந்தது

கடைசியாக பார்த்தது
உங்க வாட்ஸ் அப்பில் கடைசியாக பார்த்ததை மறைக்க நாட் லாஸ்ட் ஸீன் என்ற அப்ளிக்ஷனை பதிவிறக்கம் செய்ய வேண்டும்

RAR, .APK, .ZIP பைல்களை பறிமாறுவது
போட்டோ மற்றும் பைல்களை பறிமாறுவது அளவு படுத்தப்பட்ட நிலையில் நீங்கள் க்ளவுட்சென்ட் மற்றும் ட்ராப் பாக்ஸ்களை பதிவிறக்கம் செய்து, க்ளவுட்சென்ட் மூலம் ட்ராப் பாக்ஸை இனைத்து தேவையான பைல்களை லிங்க் செய்து அனுப்பலாம்

வாட்ஸ் அப் அக்கவுன்ட்
ஆன்டிராய்டில் டூயல் சிம் பயன்படுத்துபவர்கள் இரு வாட்ஸ் அப் அக்கவுன்டகளை ஆரம்பிக்க நீங்க ஸ்விட்ச்மீ என்ற அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்ய வேண்டும்

மெசேஜ்
தவறுதலாக டெலீட் செய்த மெசேஜ்களை மீட்க உங்க எஸ்டி கார்டுக்கு சென்று வாட்ஸ் அப் - டேட்டாபேஸ் சென்றால் நீங்க டெலீட் செய்த அனைத்து மெசேஜ்களும் இங்கு இருக்கும்

வாட்ஸ் அப் ஆட்டோ இமேஜ் டவுன்லோடு
வாட்ஸ் அப்பில் வரும் போட்டோக்கள் தானாக டவுன்லோடு ஆவதை கட்டுப்படுத்த செட்டிங்ஸ் - சாட் செட்டிங்ஸ் - மீடியா ஆட்டோ டவுன்லோடு சென்று உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து கொள்ளலாம்

மொபைல் நம்பர்
உங்க மொபைல் நம்பர் என்டர் செய்யாமல் வாட்ஸ் அப் பயன்படுத்த ஏற்கனவே இருக்கும் வாட்ஸ் அப்பை டெலீட் செய்து மீண்டும் டவுன்லோடு செய்யுங்கள். ப்ளைட் மோடை ஆக்டிவேட் செய்து உங்க நம்பரை பதிவு செய்யுங்க. இப்ப உங்க நம்பர் ரிஜெஸ்டர் ஆகாது, அடதனால் வேறு முறைகளை பயன்படுத்தி வெரிஃபை செய்ய சொல்லும் நீங்க அதையும் கேன்சல் செய்து விடுங்கள். இப்போ ஸ்பூஃப் டெக்ஸ்ட் மெசேஜை இன்ஸ்டால் செய்து அவுட்பாக்ஸ் சென்று மெசேஜ் தகவல்களை ஸ்பூஃப் அப்ளிகேஷனுக்கு காப்பி செய்து ஸ்பூஃப்டு வெரிபிகேஷனுக்கு அனுப்புங்கள். ஸ்பூஃப்டு மெசேஜில் +4479000347295, நாட்டின் குறியீடு, மொபைல் நம்பர் மற்றும் ஈ மெயில் அட்ரெஸை குறிப்பிட்டால் வேலை முடிந்தது.

ஹைடிங் ப்ரொபைல் போட்டோ
உங்க வாட்ஸ் அப் ப்ரோபைல் போட்டோவை மறைக்க வாட்ஸ் அப் ப்ளஸ் தான் சிறந்தது

வாய்ஸ் நோட்டிபிக்கேஷன்
வாட்ஸ் அப் நோட்டிப்பிக்கேஷன்களை படிக்க நேரமில்லை என்றால் வாய்ஸ் பார் மோட்டிபிக்கேஷன் மற்றும் டெக்ஸ்ட் டூ ஸ்பீச் மென்பொருளை இன்ஸ்டால் செய்ய வேண்டும். இதற்கு செட்டிங்ஸ் - அசெஸ்சபிலிட்டி சென்று வாய்ஸ் நோட்டிபிக்கேஷனை ஆன் செய்ய வேண்டும்

வாட்ஸ் அப் ஸ்டாட்ஸ்
வாட்ஸ் ஸட்டாட் பார் வாட்ஸ் அப் அப்ளிகேஷன் மூலம் நீங்கள் வாட்ஸ் அப் டவுன்லோடு செய்ததில் இருந்து எத்தனை மெசேஜ்களை அனுப்பியுள்ளீர்கள் என்பதை பார்க்க முடியும்

வாட்ஸ் அப் அக்கவுன்ட்
வாட்ஸ் அப் அக்கவுன்டை டெலீட் செய்ய செட்டிங்ஸ் - அக்கவுன்ட் - டெலீட் கொடுத்தால் வேலை முடிந்தது

போன் நம்பரை மாற்றுவது
வாட்ஸ் அப்பில் போன் நம்பரை மாற்றினால் பழைய எண்ணில் இருக்கும் மெசேஜ்கள் அழிந்து விடும். அவ்வாறு அழியாமல் இருக்க செட்டிங்ஸ் - அக்கவுன்ட் - சேன்ஞ் நம்பர் கொடுத்தால் புதிய நம்பரிலும் மெசேஜ் அழியாமல் இருக்கும்


Click it and Unblock the Notifications