விரைவில் : வாட்ஸ்ஆப்பில் அனைவரும் எதிர்நோக்கும் "ரீகால்" அம்சம்.!

டபுள்யூஏபீட்டாஇன்போ கூற்றின்படி, வாட்ஸ்ஆப் நிறுவனம் அதன் மொபைல் செய்தியிடல் தளதில் ஒரு 'ரீகால்' அம்சத்தை அறிமுகப்படுத்துவதற்கு நெருக்கமாக நகர்ந்துள்ளது.

|

அடுத்த முறை உங்கள் வாட்ஸ்ஆப் நண்பருக்கு தவறான மெசேஜை அனுப்பிவிட்டால் பதற்றப்பட வேண்டாம். அதற்காக குறிப்பிட்ட நபரிடம் மன்னிப்பும், விளக்கமும் அளிக்க வேண்டாம். ஏனெனில் இத்தகைய தவறான மெஸேஜ்களை திரும்பப்பெற விரைவில் வாட்ஸ்ஆப்பில் நீங்கள் ஒரு ஐந்து நிமிட விண்டோ பெறலாம்.

விரைவில் : வாட்ஸ்ஆப்பில் அனைவரும் எதிர்நோக்கும்

அதாவது வாட்ஸ்ஆப் அதன் புதிய அம்சங்களை ஆரம்பிக்கும் ஒரு ரசிகர் தளமான டபுள்யூஏபீட்டாஇன்போ கூற்றின்படி, வாட்ஸ்ஆப் நிறுவனம் அதன் மொபைல் செய்தியிடல் தளதில் ஒரு 'ரீகால்' அம்சத்தை அறிமுகப்படுத்துவதற்கு நெருக்கமாக நகர்ந்துள்ளது.

இந்த வசதியுடன், பயனர்கள் உரைகள், படங்கள், வீடியோக்கள், கிப்கள், ஆவணங்கள் மட்டுமின்றி ஸ்டேட்டஸா ரிப்ளையை கூட ஐந்து நிமிட விண்டோக்குள் "ரீகால்" செய்ய முடியும். வாட்ஸ்ஆப் செய்தி பயன்பாட்டின் "2.17.30+" பதிப்பில் "ரீகால்" இந்த அம்சம் கிடைக்கப்பெறலாம். வாட்ஸ்ஆப்பின் தற்போதைய பதிப்பு 2.17.190 ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

"வாட்ஸ்ஆப் ஏற்கனவே நீங்கள் அனுப்பிய செய்திகளைத் திருத்தும் வாய்ப்பை பீட்டாவில் சேர்த்துள்ளது, இது டீபால்ட் ஆக முடக்கப்பட்டுள்ளது மற்றும் அது வளர்ச்சிக்கு உட்பட்டுள்ளது" என்று முந்தைய அறிக்கையில் டபுள்யூஏபீட்டாஇன்போ ட்வீட் ஒன்றில் கூறியிருந்தது. இந்த அம்சத்தின் கீழ் பயனர்கள் சமீபத்திய செய்திகளை மட்டுமே திருத்த முடியும் மற்றும் பழைய செய்திகளை அல்ல.

Best Mobiles in India

English summary
The mobile messaging platform has moved closer towards introducing a 'Recall' feature.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X