Home
Apps

வாட்ஸ்ஆப் வாய்ஸ் கால் வசதிக்கு கிடைத்தது புதிய அப்டேட்.!

வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு அம்சங்களை சேர்த்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதன்படி வாட்ஸ்ஆப் செயலியில் உள்ள வாய்ஸ் கால் அம்சத்துக்கு புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ்ஆப் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
குறிப்பாக இந்த வசதி பல்வேறு மக்களுக்கும் பயன்படும் வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

கால் வெயிட்டிங்

கால் வெயிட்டிங்

இப்போது வாட்ஸ்ஆப் செயலியில் உள்ள வாய்ஸ் கால் ஆப்ஷன் மூலம் நீங்கள் ஒரு அழைப்பில் இருந்தால் மற்றொருஅழைப்பு வரும்போது புதிதாக இனி கால் வெயிட்டிங் ஆப்ஷனும் வங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 எதைத் தொடர வேண்டும்?

எதைத் தொடர வேண்டும்?

மேலும் இப்போது வழங்கப்பட்டுள்ள இந்த அம்சத்தின் மூலம் பேசிக்கொண்டிருக்கும் அழைப்பு அல்லது வரும் புதிய அழைப்பு எதைத் தொடர வேண்டும் என்பதை பயனாளரே முடிவு செய்துகொள்ளலாம்.

கூகுள் பிளே ஸ்டோரிலும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது

கூகுள் பிளே ஸ்டோரிலும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது

ஆனால் இதற்குமுன்பு வாய்ஸ் கால் பேசிக்கொண்டிருந்தால் இரண்டாவது அழைப்பு தானாகவே துண்டிக்கப்பட்டுவிடும். இனி இப்புதிய அப்டேட் மூலம் தேர்வை பயனாளரே மேற்கொள்ளலாம். இந்த புதிய அப்டேட் கூகுள் பிளே ஸ்டோரிலும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

விரல்நுனி லாக் அப்டேட்

விரல்நுனி லாக் அப்டேட்

பின்பு இதைத் தொடர்ந்து விரல்நுனி லாக் அப்டேட் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் அப்டேட் ஆகி உள்ளது.Settings > Account > Privacy > Fingerprint lock என்ற வழிகளில் பயனாளர் இந்த
ஆப்ஷனைப் பெற முடியும்.

 டார்க் மோட்

டார்க் மோட்

மேலும் வாட்ஸ்ஆப் பயனர்கள் நீண்டநாள் மிகவும் எதிர்பார்த்த டார்க் மோட் (Dark mode) அப்டேட் குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்புகள் எதுவும் வெளியாகாத நிலையில் பீட்டாவெர்ஷனில் (வெர்ஷன் 2.19.353) இந்த டார்க் மோட் வசதி கிடைக்கத் துவங்கியுள்ளது.

மூன்று வெவ்வேறு ஆப்ஷன்களை உடையதாக இருக்கும்

மூன்று வெவ்வேறு ஆப்ஷன்களை உடையதாக இருக்கும்

WABetaInfo என்ற வலைதளத்தின் அறிவிப்பில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் டார்க் மோடு அப்டேட் வெளியிடப்பட்டால் அதில் பேட்டரி சேவர் மோடு, டார்க் மோடு, லைட் மோடு என மூன்று வெவ்வேறு ஆப்ஷன்களை உடையதாக இருக்கும் எனத் தெரிகிறது.

Best Mobiles in India

English summary
WhatsApp Call Waiting Feature Rolled Out: Check Full Details Here: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X