வியாபார பயன்பாட்டிற்கான வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் செயலி அறிமுகம்.!

இந்த வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் செயலி முக்கிய அம்சம் என்னவென்றால் வியாபாரம் செய்வோர் தங்களது வாடிக்கையாளர்களிடம் தகவல்பரிமாற்றம் செய்ய ஏதுவாக வெளியிடப்பட்டுள்ளது.

By Prakash
|

வியாபாரம் செய்யும் மக்கள் மிகவும் அதிகம் எதிர்பார்த்த வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் செயலியை அறிமுகம் செய்துள்ளது வாட்ஸ் ஆப் நிறுவனம், இதற்கு முன்னதாக இந்த செயலி சோதனை செய்யப்படும் ஸ்கிரீன்ஷாட்டுகள் மட்டுமே இணையத்தில் வந்த நிலையில் இப்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது அந்நிறுவனம். இனிமேல் அனைத்து இடங்களில் வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் செயலி கண்டிப்பாக பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வியாபார பயன்பாட்டிற்கான வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் செயலி அறிமுகம்.!

இந்த வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் செயலி குறித்த சிறந்த தகவல்கள் மற்றும் பயன்பாடுகள் குறித்த அறிவிப்பை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம். இதன்மூலம் மக்கள் வியாபாரம், பண ரீதியிலான பயன்பாடுகளை மிக அருமையாக செயல்படுத்த முடியும். மேலும் பின்வரும் காலங்களில் பல்வேறு அப்டேட் வசதிகளுடன் இந்த வாட்ஸ்ஆப் செயலி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் செயலி:

வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் செயலி:

இந்த வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் செயலி முக்கிய அம்சம் என்னவென்றால் வியாபாரம் செய்வோர் தங்களது வாடிக்கையாளர்களிடம் தகவல் பரிமாற்றம் செய்ய ஏதுவாக வெளியிடப்பட்டுள்ளது.

ப்ரோஃபைல் அம்சம்:

ப்ரோஃபைல் அம்சம்:

வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் செயலியில் உள்ள ப்ரோஃபைல் அம்சத்தில் வியாபார நிறுவனத்தின் முகவரி, மின்னஞ்சல் முகவரி, வலைதளம் அதன்பின்பு வியாபாரம் சார்ந்த கூடுதல் தகவல்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு:

ஆண்ட்ராய்டு:

மெசேஜிங் டூல்ஸ், மெசேஜிங் ஸ்டாட்டஸ்டிக்ஸ், ஃபைல்ஸ், வாட்ஸ்அப் வெப் மற்றும் அக்கவுண்ட் டைப் போன்ற வசதிகள் வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் செயலியில் வழங்கப்பட்டுள்ளது. இந்த செயலிப் பொறுத்தவரை முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மெசேஜிங் டூல்ஸ்:

மெசேஜிங் டூல்ஸ்:

மெசேஜிங் டூல்ஸ் பொறுத்தவரை குறுந்தகவல்களை மிக எளிமையாகவும், வேகமாகவும் பதில் அனுப்ப ஆட்டோ ரிப்ளை அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பயன்பாடு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும்.

How To Increase the Speed of your Laptop (TAMIL)
மெசேஜிங் ஸ்டாட்டஸ்டிக்ஸ்:

மெசேஜிங் ஸ்டாட்டஸ்டிக்ஸ்:

மெசேஜிங் ஸ்டாட்டஸ்டிக்ஸ் பொதுவாக வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்பட்ட தகவல்களை எத்தனை பேர் படித்தனர், மேலும் எத்தனைப் பேருக்கு வெற்றிகரமாக அனுப்பபட்டது போன்ற தகவல்களை தெரிவிக்கும்.

 அமெரிக்கா:

அமெரிக்கா:

இந்தோனேஷியா, இத்தாலி, மெக்சிகோ, லண்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மட்டும் முதற்கட்டமாக இந்த வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, பின்வரும் வாரங்களில் மற்ற நாடுகளுக்கும் இந்த பிஸ்னஸ் செயலி வழங்கப்படும்.

பிளாக் செய்ய முடியும்:

பிளாக் செய்ய முடியும்:

வாடிக்கையாளர்கள் பிஸ்னஸ் கணக்கில் இருந்து வரும் குறுந்தகவல்களை மிக எளிமையாக பிளாக் செய்ய முடியும், அதன்பின்பு ஸ்பேம் வசதியும் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் பொதுவான வாட்ஸ்ஆப் செயலியை எவ்வித சிரமமும் இன்றி பயன்படுத்த முடியும்.

Best Mobiles in India

English summary
WhatsApp Business is finally out brings Business profiles messaging tools statistics and more ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X