அடேங்கப்பா..WhatsApp செட்டிங்ஸ்-இல் இப்படி ஒரு வசதியா? வாங்க பார்ப்போம்.!
உலகம் முழுவதும் வாட்ஸ்அப் செயலியை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த செயலியில் தொடர்ந்து புதிய புதிய அம்சங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.
இந்நிலையில் வாட்ஸ்அப் தனது ஆண்ட்ராய்ட வெர்ஷனில் ஒரு புதிய அம்சத்தை வழங்க உள்ளது. அதாவது WABetaInfo வெளியிட்டுள்ள தகவலின்படி, வாட்ஸ்அப் செயலியில் உள்ள செட்டிங்ஸ் பகுதியில் சர்ச் பார் சேர்க்கப்பட இருக்கிறது. குறிப்பாகக் கூகுள் பிளே திட்டத்தின் கீழ் இந்த அம்சம் சேர்க்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் இந்த புதிய அம்சம் தற்போது பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்றும், இதைத் தொடர்ந்து எதிர்காலத்தில் ஸ்டேபில் வெர்ஷனில் இந்த புதிய அம்சம் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஐபோன் வெர்ஷனில் சர்ச் பார் மூலம் ஆப் செட்டிங்ஸ்-ஐ இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு பயனர்கள் எளிமையாகச் செயலியின் செட்டிங்ஸ்-ஐ குறிப்பிட்டுத் தேட முடியும்.
அதேபோல் தற்போது வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் இந்த புதிய அம்சம் எப்படி இயங்கும் என்ற ஸ்கிரீன்ஷாட்கள் கூட வெளியாகி உள்ளன. அதாவது பயனர்கள் செட்டிங்ஸ் பகுதியின் மேற்புறத்தில் சர்ச் பார் கொண்டு தேட விரும்புவதை டைப் செய்யலாம். இவ்வாறு செய்தபின் உங்களின் தேடலுக்கான பதில்கள் பட்டியலிடப்படும். மேலும் பீட்டா டெஸ்டர்களுக்கு இந்த புதிய அம்சம் வழங்கப்பட்டு விட்டதை உணர்ந்தும் ஐகான் இடம்பெற்றுள்ளது.
எனவே வாட்ஸ்அப் செட்டிங்ஸ் பகுதியில் இந்த சர்ச் ஐகான் காணப்பட்டால் இந்த அம்சம் வழங்கப்பட்டு விட்டதை உறுதி செய்துகொள்ளலாம். இதுதவிர வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் இரண்டு அட்டகாசமான அம்சங்களைக் கொண்டுவர இருக்கிறது.

அதாவது வாட்ஸ்அப் வெளியிட உள்ள அப்டேட் என்னவென்றால், உங்களது வாட்ஸ்அப் குரூப்களில் யார் யாரை இணைக்கலாம் விலக்கலாம் என்ற வசதியையும், உங்களது நண்பர்கள் எந்தெந்த குரூப்களில் இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளும் வசதியையும் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த இரண்டு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
குறிப்பாக விரைவில் வெளியாகும் புதிய அப்டேட் மூலம் குரூப் அட்மின்கள் யார் யார் குரூப்-இல் இணைய முடியும் என்பதைத் தீர்மானிக்க முடியும். அதேபோல் இன்வைட் லின்க் அல்லது கம்யுனிட்டியுடன் க்ரூப்-ஐ இணைக்கச் செய்யும் போது, யார் க்ரூப்-இல் இணைய வேண்டும் என்பதை அட்மின்கள் தீர்மானிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர ஏதேனும் காண்டாக்ட் பெயரை கிளிக் செய்தால்,எந்த குரூப்-இல் இருக்கின்றீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ளவும் முடியும். சுருக்கமாக இந்த அம்சம் மூலம் மற்றவர்களுடன் நீங்கள் இருக்கும் குரூப்களை எளிமையாகத் தெரிந்துகொள்ள முடியும். குறிப்பாக வாட்ஸ்அப் வெளியிட உள்ள இந்த இரண்டு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








