வாட்ஸ்ஆப்பில் "கரும்புள்ளி" ஒன்றுடன் பரவி வரும் மெசேஜ்; பயனர்கள் பீதி; என்னது அது.?

அப்படியானதொரு விபரீதமான பக் தான், தற்போது வாட்ஸ்ஆப்பில் பரவி வருகிறது.

|

வாட்ஸ்ஆப்பில் பரவி வரும் 'பக்' (Bug) மற்றும் அது ஏற்படுத்தி வரும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கிராஷை பற்றி அறிந்துகொள்ளும் முன்னர், ஒரு மென்பொருள் பிழை (சாப்ட்வேர் பக்) என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

வாட்ஸ்ஆப்பில்

'பக்' என்பது கணினியில் அல்லது ஸ்மார்ட்போனில் தவறான அல்லது எதிர்பாராத விளைவை உருவாக்கும் ஒரு நவீன தவறு (எரர்) அல்லது பிழை ஆகும். ஒரு பக் ஆனது, ஒட்டுமொத்த கம்யூட்டர் சிஸ்டத்தையே காலி செய்யும் அளவு திறன் வாய்ந்ததாக கூட இருக்கும். அப்படியானதொரு விபரீதமான பக் தான், தற்போது வாட்ஸ்ஆப்பில் பரவி வருகிறது.

தொட வேண்டாம் என்கிற கேப்ஷன் உடன் பரவி வருகிறது.!

தொட வேண்டாம் என்கிற கேப்ஷன் உடன் பரவி வருகிறது.!

வெளியான ஊடக அறிக்கைகளின் படி, பிளாக் டாட் பக் என்கிற பெயரை கொண்ட ஒரு பக் ஆனது, வாட்ஸ்ஆப்பில் பரவி வருகிறது. ஒரு பெரிய கரும்புள்ளி வடிவத்தில் உள்ள அந்த வாட்ஸ்ஆப் ஸ்மைலி ஆனது தொட வேண்டாம் என்கிற கேப்ஷன் உடன் பரவி வருகிறது.

பிளாக் டாட்.!

பிளாக் டாட்.!

ஆர்வத்தில் அதை தொடும் பட்சத்தில், அது ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்ஆப் ஆண்ட்ராய்டு ஆப்பை செயலிழக்க செய்வது மட்டுமின்றி, சாத்தியமான முறையில் ஒட்டுமொத்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனையே கிராஷ் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பக் மெசேஜை போலவே, பிளாக் டாட் மெசேஜிலும், வார்த்தைகளுக்கு இடையிலேயான ஸ்பேஸ் பகுதியில், மறைக்கப்பட்டுள்ள குறியீடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மெசேஜ் பாம்ப் (Message Bomb).!

மெசேஜ் பாம்ப் (Message Bomb).!

அதை தொடும் பட்சத்தில், மறைக்கப்பட்டுள்ள குறியீடுகள் "விரிவடைந்து", ஆப்பை ஓவர்லோடிங் செய்கிறது. இதன் விளைவாக ஹேங் ஆவது முதல் கிராஷ் வரையிலான பாதிப்புகளை பயனர்கள் சந்திக்க நேரிடுகிறது. இத்தகைய பக் மெசேஜ்களை, மெசேஜ் பாம்ப் (Message Bomb) என்றும் அழைப்பார்கள். இவைகள் ஆண்ட்ராய்டு தளத்தை மட்டுமின்றி, ஐமெசேஜ் பயன்பாட்டை கூட கிராஷ் செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
ஹேங் அல்லது ப்ரீஸ் ஆக்குகிறது.!

ஹேங் அல்லது ப்ரீஸ் ஆக்குகிறது.!

கிடைக்கப்பெறும் மெசேஜில் வெளிப்படையாக காட்சிப்படாத ஸ்பெஷல் கேரக்டர்கள் ஆனது, குறிப்பிட்ட டெக்ஸ்ட்டை மாற்றுக்கொள்ளும் திறனும் கொண்டவைகள் ஆகும் என்பதும் அதன் வழியாகத்தான் வாட்ஸ்ஆப்பை ஹேங் அல்லது ப்ரீஸ் ஆக்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்ஆப்பில் உலவும் இந்த பக் பற்றிய எந்தவிதமான கருத்தையும் பேஸ்புக் தெரிவிக்கவில்லை.

Best Mobiles in India

English summary
WhatsApp 'Black Dot' Bug Can Crash Your Android Smartphone. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X