விரைவில் வாட்ஸ்அப்பில் வரும் புதிய அம்சம்.! என்ன தெரியுமா?

|

உலகில் உள்ள முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ் அப் தற்போது அதிகளவு பயனாளிகளுடன் உள்ளது. மெசேஜ் மூலம் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதில் பெரும்பங்கு வகிக்கும் இதற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி கொண்டே
உள்ளது.

மேஜ்கள், வீடியோக்கள்,

இந்த செயலி மூலம் இமேஜ்கள், வீடியோக்கள், டாக்குமெண்ட்டுக்கள், லோகேஷன் உள்பட பல விஷயங்களை பகிர்ந்து கொள்ளஉதவுகிறது. அதேபோல் வாய்ஸ்கால், வீடியோகால் போன்றவற்றை இலவசமாகவும் தருகிறது. ஸ்மார்ட்போன்களில் மட்டுமின்றி ஜியோ
போன் மற்றும் நோக்கியா 8110 ஆகிய பேசிக் மாடல் போன்களிலும் தற்போது வாட்ஸ் அப் பயன்படுத்தும் வசதி உள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்அப் நிறுவனம் தனது

குறிப்பாக வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களை கவரும் வகையில் அவ்வப்போது புதிய புதிய பியூச்சர்கள் மற்றும் அப்டேட்களை அறிமுகம் செய்து வாட்ஸ்அப் நிறுவனம் அசத்தும். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் புதிய வசதிகள் மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது.

Android பயனர்கள் தனியாக ஆப் இன்ஸ்டால் செய்யாமல் ஷேர் செய்துக்கொள்ள புது வசதி!Android பயனர்கள் தனியாக ஆப் இன்ஸ்டால் செய்யாமல் ஷேர் செய்துக்கொள்ள புது வசதி!

பேக் கிரவுண்டில் உள்ள வால்பேப்பரின் ஒளி

அதன்படி வாட்ஸ்அப்பில் சேட் செய்யும் போது அதன் பேக் கிரவுண்டில் உள்ள வால்பேப்பரின் ஒளி அளவை மாற்றிக் கொள்ளும் வசதியை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த அப்டேட் ஆனது வாட்ஸ்அப்பின் டிரேட் மார்க் டூடூல்களை முழுவதுமாக அகற்றவும், அதன் வண்ணத்தை மாற்றவும் ஒப்பாசிட்டி ரேஷியோவை குறைக்கும் வசதிகளும் இடம்பிடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது வாட்ஸ்அப் பீட்டா.

இன்று மதியம் விற்பனைக்கு வரும் ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன்.! ரூ.1000 சலுகை.!இன்று மதியம் விற்பனைக்கு வரும் ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன்.! ரூ.1000 சலுகை.!

ஸிலும் புதிய மாற்றங்கள் வர

விரைவில் வாட்ஸ்அப் கால் பட்டனின் இன்டெர்பேஸிலும் புதிய மாற்றங்கள் வரவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதேபோல
இந்நிறுவனம் வெகேஷன் மோட் என்ற புத்தம் புதிய அப்டேட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய அப்டேட் ஆனது தற்சமயம் பீட்டா பயன்பாட்டளர்களின் சோதனையில் உள்ளது. இதைத்தொடர்ந்து அனைத்து ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்கும் பயன்பாட்டுக்கு
வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மலிவு விலை திட்டங்கள்.! சிறப்பான சலுகைகள்.!பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மலிவு விலை திட்டங்கள்.! சிறப்பான சலுகைகள்.!

 அப்டேட் சிறப்பு என்னவென்றால்,

இந்த புதிய அப்டேட் சிறப்பு என்னவென்றால், அர்சிவ் செய்யப்பட்ட சாட்களையும் மியூட் செய்துகொள்ள முடியும். இதற்குமுன்பு வரை வாட்ஸ்அப்-ல் இந்த ஆப்ஷன் இல்லாமல் இருந்தது. ஆனால் கடந்த வருடம் இந்த ஆப்ஷன் கொண்டுவரவுள்ளதாக அறிவித்த வாட்ஸ்அப் நிறுவனம் சில காரணங்களால் அதை கிடப்பில் போட்டது. இந்தநிலையில் மீண்டும் வெகேஷன் மோட் ஆப்ஷனை டெவலப் செய்துள்ளது. பின்பு இது விரைவில் பயன்பாட்டுக்கும் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
WhatsApp To Roll Out Wallpaper Dimming, Doodles To Chat Background And Bug Fixes: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X