க்ரூப் சாட்டில் 'ப்ரைவேட் ரிப்ளை' உட்பட மொத்தம் 3 மூன்று அம்சங்கள் உருட்டல்.!

இந்த புதிய அம்சங்களில் ஒன்று, வாட்ஸ்ஆப் க்ரூப்பில் தனிப்பட்ட ஒரு நபருக்கான 'ரிப்ளை'யை அனுப்ப உதவும் ஒரு சுவாரசியமான அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

|

சமீப காலமாக வாட்ஸ்ஆப் பீட்டாவில், பல புதிய அம்சங்கள் உருட்டப்பட்டு வருகின்றன. இதன் அர்த்தம், அந்த அம்சங்கள் வாட்ஸ்ஆப்பின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் வெர்ஷன்களுக்கும் விரைவில் உருட்டப்படும் என்பதாகும்.

க்ரூப் சாட்டில் 'ப்ரைவேட் ரிப்ளை' உட்பட மொத்தம் 3 மூன்று அம்சங்கள்.!

வாட்ஸ்ஆப் பீட்டாவை ஒரு பரிசோதனை தளம் என்றே கூறலாம். பொதுவான முறையில் அனைவர்க்கும் வாட்ஸ்ஆப்பின் புதிய அம்சங்கள் உருட்டப்படும் முன்னர் பீட்டா வெர்ஷனில் உருட்டப்படும் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறோம். தற்போது மூன்று புதிய வாட்ஸ்ஆப் க்ரூப் அம்சங்களானது, வாட்ஸ்ஆப் பீட்டாவில் காணப்பட்டுள்ளது.

தனிப்பட்ட நபருக்கான 'ரிப்ளை'

தனிப்பட்ட நபருக்கான 'ரிப்ளை'

இந்த புதிய அம்சங்களில் ஒன்று, வாட்ஸ்ஆப் க்ரூப்பில் தனிப்பட்ட ஒரு நபருக்கான 'ரிப்ளை'யை அனுப்ப உதவும் ஒரு சுவாரசியமான அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர டாப் டூ அன்பிளாக் மற்றும் பிப் (பிக்சர் டூ பிக்சர்) மோட் ஆகிய அம்சங்களும் காணப்பட்டுள்ளது.

சோதனை

சோதனை

இந்த விவரங்கள், வாட்ஸ் பயன்பாடுகளில் வரவிருக்கும் அம்சங்கள் வெளிப்படுத்தும் முனைப்பில் இயங்கும் - வாட்ஸ்ஆப்பீட்டா இன்ஃபோ (WABetaInfo) மூலம் கசிந்துள்ளது. வாட்ஸ்ஆப்பீட்டா இன்ஃபோவின்படி, இந்த அம்சங்கள் அனைத்தும் பீட்டா பதிப்பின் பயன்பாட்டில் சோதனை செய்யப்பட்டு வருகின்றன, ஆனால் அனைத்து பீட்டா பயனர்களும் இப்போது இதைப் பார்க்க முடியாது.

லாங் பிரஸ் செய்தால்

லாங் பிரஸ் செய்தால்

வாட்ஸ்ஆப்பீட்டா இன்ஃபோ ஸ்க்ரீன்ஷாட்களுடன் இந்த அம்சங்களை பகிர்ந்துள்ளது. அதன்படி, க்ரூப் சாட்டில், ரிப்ளை விருப்பத்தை லாங் பிரஸ் செய்தால் (சற்று நீடித்து அழுத்துவதால்) அது உள்கொண்டுள்ள மற்ற விருப்பங்களைத் திறக்கிறது. அதில் 'ரிப்ளை ப்ரைவேட்லி' பட்டியலிடப்பட்டுள்ளது.

க்ரூப் சாட்டில் குறிப்பிட்ட ஒருவருக்கு

க்ரூப் சாட்டில் குறிப்பிட்ட ஒருவருக்கு

'ரிப்ளை ப்ரைவேட்லி' விருப்பத்தை தேர்வு செய்வதின் மூலம் நீங்கள் பொதுவான க்ரூப் சாட்டில் குறிப்பிட்ட ஒருவருக்கு மட்டுமே பதில் அளிக்க முடியும். இது குழு உரையாடல்களில் ஒழுங்கீனத்தை குறைக்க உதவும், மேலும் பயனர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

பிப் (PIP) பயன்முறை

பிப் (PIP) பயன்முறை

குறிப்பிட்ட நபருக்கான மெசேஜை, ஒவ்வொரு முறையும் தனிப்பட்ட சாட்டை திறந்து பகிர்ந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தை 'ரிப்ளை ப்ரைவேட்லி' அம்சம் முற்றிலும் இல்லாமல் ஆக்கும். மறுகையில் உருட்டப்பட்டுள்ள பிப் (PIP) பயன்முறையானது, தேர்ந்தெடுக்கப்பட்ட வீடியோ அல்லது வீடியோ சாட்டை ஒரு புதிய விண்டோவில் திறக்க உதவும்.

டாப் டூ அன்பிளாக்

டாப் டூ அன்பிளாக்

இந்த பிப் பயன்முறை அம்சம் வாட்ஸ்ஆப்பின் பயனர் இடைமுகத்தை உச்சத்திற்கு கொண்டுசெல்லுமென தோன்றுகிறது. உடன் மூன்று புதிய பீட்டா அம்சங்களில் இறுதியாக காணப்பட்டுள்ள டாப் டூ அன்பிளாக் ஆனது ஒரு பயனரை அன்பிளாக் செய்ய அவரின் பெயரில் வெறுமனே டாப் செய்வதின் மூலம் 'அன்பிளாக்' விருப்பத்தை அணுக முடியும்.

ஆட் வையா லின்க்

ஆட் வையா லின்க்

இது தவிர, க்ரூப்பில் பயனர்களை சேர்ப்பதற்கு க்ரூப் இன்ஃபோ பிரிவில் 'ஆட் வையா லின்க்' (Add via link) என்கிற அம்சமும் இடம்பெற்றுள்ளது. எனினும், வாட்ஸ்ஆப்பீட்டாஇன்ஃபோ வலைத்தளத்தில் படி, இந்த அம்சஙகள் குழு நிர்வாகிகளுக்கு (க்ரூப் அட்மின்ஸ்) மட்டுமே தெரியும்.

விரைவில் க்ரூப் கால்ஸ்

விரைவில் க்ரூப் கால்ஸ்

இந்த புதிய பீட்டா அம்சங்களின் மூலமாக, ஐஓஎஸ் பயனர்கள் விரைவில் க்ரூப் கால்ஸ் விருப்பத்தை பெறுவார்கள் என்ற வார்த்தையையும் வாட்ஸ்ஆப்பீட்டாஇன்ஃபோவின் அறிக்கை சேர்க்கிறது. இந்த புதிய பீட்டா அம்சங்களின் மூலமாக, ஐஓஎஸ் பயனர்கள் விரைவில் க்ரூப் கால்ஸ் விருப்பத்தை பெறுவார்கள் என்ற வார்த்தையையும் வாட்ஸ்ஆப்பீட்டாஇன்ஃபோவின் அறிக்கை சேர்க்கிறது.

Best Mobiles in India

English summary
WhatsApp beta reveals private reply in groups coming soon, PIP mode too. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X