வாட்ஸ்ஆப் புதிய அப்டேட்டில் ஏற்பட்டுள்ள தேதி பிரச்சனை.!

வாட்ஸ்ஆப் செயலியில் இந்த தேதி பிரச்சனை இருந்து வந்த போதிலும் வாட்ஸ் அப் மற்றும் பயனாளிகளின் ரெகுலர் பயன்பாடு அதிகளவில் பாதிக்கப்படவில்லை என்றே தெரிகிறது.

|

வாட்ஸ்ஆப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்டுக்களை செய்து வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதிகளை செய்து தந்து கொண்டிருப்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போதைய புதிய அப்ட்டேட்டில் வாட்ஸ் அப் செய்திகளின் தேதி குறித்த பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ்ஆப் புதிய அப்டேட்டில் ஏற்பட்டுள்ள தேதி பிரச்சனை.!


வாட்ஸ்ஆப் உரையாடலில் வலது பக்கத்தில் சேட் செய்த தேதி குறித்த தகவல் இருக்கும் என்பது அனைவரும் தெரிந்ததே. இந்த தகவலின் மூலம் அந்த சேட் என்றைக்கு எந்த தேதியில் உருவானது என்பதை பயனாளிகள் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்

இந்த நிலையில் ஒருசிலருக்கு இந்த தேதிகள் சரியாக காண்பிக்காது. சில டெக்னிக்கல் காரணங்களால் ஏற்படும் இந்த பிரச்சனையால் நாம் சேட் செய்த தேதி குறித்த தகவல் இருக்காது, அல்லது தவறான தேதி இருக்கும்.

இந்த பிரச்சனை முதலில் ஒரு சிலருக்கு மட்டுமே இருந்த நிலையில் தற்போது இந்த பிரச்சனையை பல வாட்ஸ் அப் பயனாளிகள் சந்தித்து வருகின்றனர். இந்த பிரச்சனையால் வாட்ஸ் அப் பயனாளிகள் மிகுந்த அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ்ஆப் செயலியில் இந்த தேதி பிரச்சனை இருந்து வந்த போதிலும் வாட்ஸ் அப் மற்றும் பயனாளிகளின் ரெகுலர் பயன்பாடு அதிகளவில் பாதிக்கப்படவில்லை என்றே தெரிகிறது. இந்த பிரச்சனை எதனால் ஏற்படுகிறது, இதற்கு என்ன தீர்வு என்ன என்பது குறித்து வாட்ஸ் அப் நிறுவனம் இன்னும் பதில் அளிக்கவில்லை. இருப்பினும் இந்த பிரச்சனைக்கு வாட்ஸ் அப் விரைவில் ஒரு நல்ல தீர்வினை தெரிவிக்கும் என்று நம்பப்படுகிறது.

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)

வாட்ஸ்ஆப் புதிய அப்டேட்டில் ஏற்பட்டுள்ள தேதி பிரச்சனை.!


சமீபத்தில் வாட்ஸ் அப் குறித்த ஒரு கட்டுரையில் இந்தியாவில் வாட்ஸ் அப் பயனாளிகள் கூடுதலாக முக்கிய வசதி ஒன்றை பெற்றுள்ளனர் என்பதை பார்த்தோம். அதுதான் சிறுதொழில் செய்பவர்கள் அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை எளிதில் தொடர்பு கொள்ளும் வசதி. மேலும் கடந்த செப்டம்பர் மாதம் முதன்முதலில் பிசினஸ் பார்ட்னர்களான புக் மை ஷோ, நெட்ஃபிளிக்ஸ், மேக் மை டிரிப் ஆகியவற்றை அறிமுகம் செய்தது. ஆரம்பகட்டத்தில் இந்த செயல் இந்தோனேஷியா, இத்தாலி, மெக்சிகோ, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட ஒருசில நாடுகளுக்கு மட்டுமே இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது.

Best Mobiles in India

English summary
WhatsApp Beta on Android infected by a mysterious Day bug ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X