வாட்ஸ் அப் புதிய வெர்ஷனில் கிடைத்துள்ள புதிய வசதி
வாட்ஸ் அப் பயனாளிகளுக்கு தரும் இன்னொரு புதிய வசதி
உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ் அப், தனது வாடிக்கையாளர்களுக்கு புதுப்புது சலுகைகளை வழங்க 24 மணி நேரமும் மூளையை கசக்கி பல்வேறு வசதிகளை கண்டுபிடித்து வழங்கி வருகிறது.

கடந்த ஓரிரண்டு மாதங்களில் வாட்ஸ் அப் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய சலுவகைகளை வழங்கியுள்ளது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். அவற்றில் ஸ்னாப்சேட் வசதி என்பது குறிப்பிடத்தக்கது என்பது அனைவரும் அறிந்ததே
இந்நிலையில் வாட்ஸ் அப் தற்போது அறிவித்துள்ள புதிய வசதியின்படி இனி வாட்ஸ் அப்பில் சாதாரண டெக்ஸ் மட்டுமின்றி போல்ட் மற்றும் இட்டாலிக் போன்ற சிறப்பு டெக்ஸ்ட்களையும் பயன்படுத்தலாம். கடந்த வருடமே ஒருசில சிறப்பு டெக்ஸ்ட்களை பயன்படுத்தும் வசதியை வாட்ஸ் அப் அளித்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் தற்போது மேலும் சில சிறப்பு டெக்ஸ்ட்களான போல்ட் , இட்டாலிக், அடிக்கோடு போன்றவைகளையும் பயன்படுத்தும் வசதியை அளித்துள்ளது. இந்த புதிய வசதி வாட்ஸ் அப் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது
பயணத்தின் போது கூகுள் மேப்ஸ் எவ்வாறு உபயோமாக உள்ளது!
இந்த வசதியின்படி நீங்கள் டெக்ஸ்ட்களுக்கு இடையே ஒரு புதிய கோட்-ஐ இணைக்க விரும்பினால் அதாவது (*)என்பதை இணைக்க விரும்பினால் இனி மிக எளிது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதே நேரத்தில் வாட்ஸ் அப் பயனாளிகள் மனதில் வைத்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவேனில் லேட்டஸ் பீட்டா 2.17.148 வாட்ஸ் அப் வெர்ஷனில் மட்டுமே இந்த சிறப்பு வசதி உண்டு என்பதுதான். இந்த புதிய வசதி கிடைத்த பின்னர் வார்த்தைகளுக்கு இடையே சிறப்பு குறியீடுகளை இணைப்பது மிக எளிது என்பதால் வாட்ஸ் அப் பயனாளிகல் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த புதிய வசதியை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்ப்போமா!
வாட்ஸ் அப் மேசேஜ் பாக்ஸில் நீங்கள் டைப் செய்ய வேண்டிய வார்த்தைகளை முதலில் முழுவதுமாக டைப் செய்து முடிக்க வேண்டும். பின்னர் அந்த வார்த்தைகளின் மேல் கையை வைத்து ஒரு லாங் பிரஸ் செய்ய உடனே உங்கள் முன் சிறப்பு குறியீடுகள் தோன்றும். இந்த சிறப்பு குறியீடுகளில் நீங்கள் எதை தேர்வு செய்ய வேண்டுமோ அதை தேர்வு செய்து பின்னர் காப்பி செய்து தேவையான இடத்தில் பேஸ்ட் செய்தால் உங்கள் வார்த்தைகள் தற்போது சிறப்பு குறியீடுகளுடன் கிடைக்கும்.
அதேபோல் மேலே உள்ள மூன்று வெர்டிகல் டாட் லைனை க்ளிக் செய்தால் உங்களுக்கு போல்ட், இட்டாலிக், உள்பட நான்கு ஆப்சன்கள் கிடைக்கும். இதில் எது தேவையை அதை க்ளிக் செய்தால் நீங்கள் டைப் செய்த வார்த்தைகள் முழுவதும் நீங்கள் விரும்பும் வகையில் மாறிவிடும்.


Click it and Unblock the Notifications