வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ள புதிய டார்க் சாலிட் கலர் சேவை பற்றி தெரியுமா?

|

வாட்ஸ்அப் சமீபத்தில் கூகிள் பிளே பீட்டா திட்டத்தின் மூலம் புதிய டார்க் தீம் அப்டேட் வெர்ஷனை சமர்ப்பித்தது. தற்பொழுது வாட்ஸ்அப் புதிய 2.20.31 பீட்டா பதிப்பை வெளியிட்டு அதில் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய அப்டேட்டில்ட் புதியது என்ன? என்ன மாற்றங்களை வாட்ஸ்அப் மேற்கொண்டுள்ளது என்ற அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ளுங்கள்.

டார்க் தீம் சேவை கீழ் புதிய டார்க் சாலிட் நிறங்கள்

டார்க் தீம் சேவை கீழ் புதிய டார்க் சாலிட் நிறங்கள்

வாட்ஸ்அப் அண்மையில் அனைவரும் எதிர்பார்த்த டார்க் தீம் சேவையை அண்ட்ராய்டு பயனர்களுக்கு அறிமுகம் செய்தது. தற்பொழுது இந்த டார்க் தீம் சேவையின் கீழ் புதிய டார்க் சாலிட் நிறங்கள் (Dark Solid Colors) என்ற 6 solid நிறங்களை சேர்த்துள்ளது. பிளே ஸ்டோரில் இந்த அப்டேட் புதுப்பிப்பை நீங்கள் காணவில்லையெனில், கூகிள் உங்களுக்காக வெளியிடும் வரை தயவுசெய்து பொறுமையாக காத்திருங்கள்.

டார்க் சாலிட் நிறங்கள்

டார்க் சாலிட் நிறங்கள்

வாட்ஸ்அப் 2.20.13 பீட்டா அப்டேட்டில் டார்க் தீம் சேவையை வாட்ஸ்அப் இயக்கிய பிறகு, அதை மேம்படுத்த வாட்ஸ்அப் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இந்த பீட்டா வேர்ஷனில், வாட்ஸ்அப் வால்பேப்பர் அமைப்புகளில் கீழ் இந்த புதிய டார்க் சாலிட் கலர்கள் கிடைக்கும் விருப்பத்தை வாட்ஸ்அப் தற்பொழுது சேர்த்துள்ளது.

99 ஸ்மார்ட்போன்களை வைத்து Google-க்கு தண்ணிகாட்டிய ஓவியர்! எல்லாம் சிவப்பா மாறிடுச்சு!99 ஸ்மார்ட்போன்களை வைத்து Google-க்கு தண்ணிகாட்டிய ஓவியர்! எல்லாம் சிவப்பா மாறிடுச்சு!

6 புதிய நிறங்கள்

6 புதிய நிறங்கள்

இந்த டார்க் சாலிட் அம்சத்தின் கீழ் பயனர்களுக்குக் கருப்பு, டார்க் பிரவுன், டார்க் நேவி, டார்க் ஆலிவ், டார்க் பர்பில் மற்றும் டார்க் வெல்வெட் போன்ற நிறங்கள் கிடைக்கிறது. இதற்கு முன்பு டார்க் தீம் சேவையின் கீழ் வெறும் கருப்பு நிறம் மட்டுமே வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இனி கருப்பு நிறம் மட்டுமில்லை கலரும் இருக்கு

இனி கருப்பு நிறம் மட்டுமில்லை கலரும் இருக்கு

நீங்கள் உங்களுக்கு பிடித்த ஒரு டார்க் சாலிட் நிறத்தைத் தேர்ந்தெடுத்து, டார்க் தீம் சேவையை எனேபிள் செய்தால், வாட்ஸ்அப் தானாகவே நீங்கள் தேர்வு செய்த அந்த டார்க் சாலிட் நிறத்தை உங்கள் வால்பேப்பர் நிறமாக மாற்றுகிறது. இதன் மூலம் பயனர்கள் டார்க் தீம் சேவையின் கீழ் வெறும் கருப்பு நிறத்தில் மட்டுமில்லாமல் கூடுதல் நிறங்களில் பயன்படுத்தலாம்.

இந்தியாவை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்: அமெரிக்காவிற்கு கூகுள் கடிதம்- சுந்தர்பிச்சை பாராட்டுஇந்தியாவை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்: அமெரிக்காவிற்கு கூகுள் கடிதம்- சுந்தர்பிச்சை பாராட்டு

நீக்கப்பட்ட சேவை இதுதான்

நீக்கப்பட்ட சேவை இதுதான்

முந்தைய (2.20.29) பீட்டா அபடேட்டில் டார்க் தீம் சேவையின் கீழ் சேர்க்கப்பட்ட Set By Battery Saver அம்சம் தற்பொழுது, வாட்ஸ்அப் Android 9 மற்றும் அதற்கும் குறைவான இயங்குதள ஸ்மார்ட்போன்களில் இருந்து நீக்கபட்டுள்ளது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
WhatsApp Beta For Android 2.20.31 Is Coming With Dark Solid Colors : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X