வாட்ஸ்அப்-ன் புதிய அப்டேட்: வீடியோ,புகைப்படம் தானாகவே நீக்கப்படும்.!

|

வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் புதிய வசதிகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். மேலும் உலகளவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்.

வீடியோக்கள் மற்றும் GIF படங்கள்

வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த சில மாதங்களாக ஒரு புதிய அம்சத்தை 'காலாவதியான செய்தி' (Expiring Message) சோதித்து வருகிறது. இந்த புதிய அம்சம் தொடர்பான செய்திகள் இந்த ஆண்டு மார்ச் மாதம் முன்முதலில் வெளிவந்தன. முன்னரே தீர்மானிக்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு படங்கள், வீடியோக்கள் மற்றும் GIF படங்கள் போன்ற செய்திகளுடன் அனுப்பப்படும் அனைத்தும் தானகவே நீக்கப்படும்.

றிக்கையில், வாட்ஸ்அப் 2.20.201.1 பீட்டா பதிப்பை

அன்மையில் வெளிவந்தWABetaInfo அறிக்கையில், வாட்ஸ்அப் 2.20.201.1 பீட்டா பதிப்பை அண்ட்ராய்டில் (Android)வெளியிட்டுள்ளது. பின்பு சமீபத்திய வெளியீட்டில் காலாவதியாகும் புதிய மீடியா அம்சத்தைப் பற்றி அம்சங்களும் அடங்கும்.

அடுத்த குறி: ஜியோ போஸ்ட்பெய்ட் ப்ளஸ் அறிமுகம்., அனைத்து சலுகையும் ரூ.399 முதல்!

செய்திகள் தானகவே காலாவதியாகும்

அதாவது செய்திகள் தானகவே காலாவதியாகும் அம்சத்தைப் போலவே இந்த புதிய அம்சமும் காலாவதியான மீடியாவை (படங்கள், வீடியோக்கள் மற்றும் GIF கள்) தானாகவே நீக்க அனுமதிக்கும். குறிப்பாக ஒருவர் உரையாடலில் (chat) இருந்து வெளியேறிய பின் தானாகவே மறைந்துவிடும்.

 ஈடுபட்டிருக்கும்போது

மேலும் இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால், ஊடகங்கள் தானாகவே காணமால் போன பிறகு இந்த மீடியா காலாவதியானது ('This media is expired') போன்ற செய்தி திரையில் வராது. பின்பு ஒருவர் உரையாடலில் ஈடுபட்டிருக்கும்போது காலாவதியாகும் ஊடகங்கள் வேறு வழியில் தோன்றும், இதன் மூலம் தேவையற்ற வீடியோக்களும், புகைப்படங்களும் இனிமேல் அனைவருக்கும் தலைவலியாக இருக்காது.

 தகவலின்படி வாட்ஸ்அப்பில்

முன்பு வெளிவந்த தகவலின்படி வாட்ஸ்அப்பில் சேட் செய்யும் போது அதன் பேக் கிரவுண்டில் உள்ள வால்பேப்பரின் ஒளி அளவை மாற்றிக் கொள்ளும் வசதியை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த அப்டேட் ஆனது வாட்ஸ்அப்பின் டிரேட் மார்க் டூடூல்களை முழுவதுமாக அகற்றவும், அதன் வண்ணத்தை மாற்றவும் ஒப்பாசிட்டி ரேஷியோவை குறைக்கும் வசதிகளும் இடம்பிடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது வாட்ஸ்அப் பீட்டா.

இரட்டை செல்பி கேமராவோடு விவோ வி 20 ப்ரோ: விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

வாட்ஸ்அப் கால் பட்டனின்

விரைவில் வாட்ஸ்அப் கால் பட்டனின் இன்டெர்பேஸிலும் புதிய மாற்றங்கள் வரவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதேபோல

இந்நிறுவனம் வெகேஷன் மோட் என்ற புத்தம் புதிய அப்டேட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய அப்டேட் ஆனது தற்சமயம் பீட்டா பயன்பாட்டளர்களின் சோதனையில் உள்ளது. இதைத்தொடர்ந்து அனைத்து ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்கும் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்டேட் சிறப்பு என்னவென்றால்,

இந்த புதிய அப்டேட் சிறப்பு என்னவென்றால், அர்சிவ் செய்யப்பட்ட சாட்களையும் மியூட் செய்துகொள்ள முடியும். இதற்குமுன்பு வரை வாட்ஸ்அப்-ல் இந்த ஆப்ஷன் இல்லாமல் இருந்தது. ஆனால் கடந்த வருடம் இந்த ஆப்ஷன் கொண்டுவரவுள்ளதாக அறிவித்த வாட்ஸ்அப் நிறுவனம் சில காரணங்களால் அதை கிடப்பில் போட்டது. இந்தநிலையில் மீண்டும் வெகேஷன் மோட் ஆப்ஷனை டெவலப் செய்துள்ளது.

பின்பு இது விரைவில் பயன்பாட்டுக்கும் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
WhatsApp Working on a ‘Expiring Media’ Feature to Delete Photos, Videos Once Viewed: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X