வாட்ஸ்ஆப்பில் சத்தமின்றி இணைக்கப்பட்டுள்ள ஒரு புதிய அம்சம்; ஆண்ட்ராய்டு வாசிகள் குஷி.!

இந்த புதிய அம்சம் எங்கு இருக்கும்.? அதை பயன்படுத்துவது எப்படி.?

|

பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான, மிக பிரபலமான மெசேஜிங் தளமான வாட்ஸ்ஆப்பில், பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் ஒரு முயற்சியின் கீழ் ஒரு புதிய அம்சம் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது வரையிலாக ஆண்ட்ராய்டு பதிப்பிலான வாட்ஸ்ஆப்பிற்கு மட்டுமே உருட்டப்பட்டுள்ளது.

வாட்ஸ்ஆப்பில் சத்தமின்றி இணைக்கப்பட்டுள்ள ஒரு புதிய அம்சம்; என்ஜாய்.!

இணைக்கப்பெற்றுள்ள புதிய அம்சமானது ஒரு பயனர் தனது ஸ்மார்ட்போனில் இருந்து டெலிட் செய்யப்பட்டு இருந்தாலும் கூட, ஒரு பழைய மீடியா உள்ளடக்கத்தை மீண்டும் பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கும் ஒரு வாட்ஸ்ஆப் அம்சம் ஆகும். இந்த புதிய அம்சம் எங்கு இருக்கும்.? அதை பயன்படுத்துவது எப்படி.?

ஒரே ஒரு முறை மட்டுமே டவுன்லோட்.!

ஒரே ஒரு முறை மட்டுமே டவுன்லோட்.!

நேற்றுவரை, போட்டோக்கள், GIFகள் மற்றும் ஷார்ட் கிளிப்புகள் போன்ற பைல்களை நாம் டவுன்லோட் செய்த நாளில் இருந்து அடுத்த 30 நாட்கள் வரை குறிப்பிட்ட பைல் ஆனது வாட்ஸ்ஆப் சேவையகத்தில் சேமித்து வைக்கப்ப்பட்டு இருக்கும். ஒருமுறை டவுன்லோட் செய்து ஸ்மார்ட்போன் சேமிகப்பதில் டெலிட் செய்யாத பட்சத்தில் மட்டுமே 30 நாட்கள் என்கிற கணக்கு செல்லுபடியாகும். ஒருவேளை டெலிட் செய்து விட்டால் மறுமுறை டவுன்லோட் செய்ய கிடைக்காது.

நெறிமுறையில் சில மாற்றங்கள்.!

நெறிமுறையில் சில மாற்றங்கள்.!

இந்த நெறிமுறையின் கீழ், டவுன்லோட் செய்யப்பட்ட ஒரு பைலை ஸ்மார்ட்போன் சேமிகப்பதில் இருந்து நீக்கி விட்டால் அதை மீண்டும் வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியாது. ஆனால், இன்று முதல் அது சாத்தியமே. அதற்காக, வாட்ஸ்ஆப் சேமிப்பக நெறிமுறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

மறைகுறியாக்கப்பட்டது (என்க்ரிப்ட்ட்).!

மறைகுறியாக்கப்பட்டது (என்க்ரிப்ட்ட்).!

ஆக, இனி ஒரு பயனரால் டவுன்லோட் செய்யப்பட்டாலும் கூட, வாட்ஸ்ஆப்பின் சர்வரில் கிடைக்கப்பெற்ற அனைத்து செய்திகளும், மல்டிமீடியா உள்ளடக்கங்களும், மீண்டும் அணுகுவதற்காக சேமித்து வைக்கப்பட்டு இருக்கும். இந்த இடத்தில் வாட்ஸ்ஆப் சேவையகம் மறைகுறியாக்கப்பட்டது (என்க்ரிப்ட்ட்) என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறோம். அதாவது இந்த பைல்களை ஒரு பயனரை தவிர, வேறு யாராலும் அணுக முடியாது.

எந்த வாட்ஸ்ஆப் வெர்ஷனில் கிடைக்கும்.?

எந்த வாட்ஸ்ஆப் வெர்ஷனில் கிடைக்கும்.?

வாட்ஸ்ஆப் பீட்டா இன்ஃபோவின் அறிக்கையின் படி, இப்போது வரையிலாக ​​இந்த புதிய அம்சமானது, ஆண்ட்ராய்டு பதிப்பிற்கான வாட்ஸ்ஆப் பதிப்பில் (2.18.113) கிடைக்கிறது மற்றும் மிக விரைவில் ஐஓஎஸ் தளத்திற்கு,ம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெறுவது எப்படி.?

பெறுவது எப்படி.?

இதை நிகழ்த்த தனிப்பட்ட பொத்தான் எதுவும் இணைக்கப்படவில்லை. ஸ்மார்ட்போனின் சேமிப்பகத்தில் இருந்தும் நீக்கப்பட்ட மீடியா உள்ளடக்கத்தை, குறிப்பிட்ட வாட்ஸ்ஆப் சாட் சென்று, மீண்டும் அந்த குறிப்பிட்ட மீடியா பைலை பதிவிறக்கம் செய்ய டாப் செய்யவும், அவ்வளவு தான்.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
வாட்ஸ்ஆப்  ஐகானின் வடிவம் மற்றும் அளவை மாற்றலாம்.!

வாட்ஸ்ஆப் ஐகானின் வடிவம் மற்றும் அளவை மாற்றலாம்.!

இந்த புதிய அம்சம் தவிர, வாட்ஸ்ஆப் நிறுவனம் மற்றொரு புதிய அம்சத்தையும் சோதிக்கிறது, அது ஸ்மார்ட்போன் ஸ்க்ரீனில் உள்ள வாட்ஸ்ஆப் ஐகானின் வடிவம் மற்றும் அளவை தேவைக்கு ஏற்றபடி மாற்றி அமைத்துக் கொள்ள அனுமதிக்கும் ஒரு அம்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
WhatsApp for Android gets new feature: All you need to know. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X