Home
Apps

இனி வாட்ஸ் ஆப்-லயே பேஸ்புக், இன்ஸ்டா, யூடூப் பயன்படுத்தலாம்.! புதிய "பி.ஐ.பி" அப்டேட்.!

வாட்ஸ் ஆப் நிறுவனம் இன்று தனது புதிய வாட்ஸ் ஆப் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷன் 2.18.301-னை அறிமுகம் செய்துள்ளது.

வாட்ஸ் ஆப் நிறுவனம் இன்று தனது புதிய வாட்ஸ் ஆப் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷன் 2.18.301-னை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய அப்டேட் இல் பி.ஐ.பி மோடு சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அப்டேட் விரைவில் அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் கிடைக்குமென்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சூப்பர்.!இனி வாட்ஸ் ஆப்-லயே பேஸ்புக், இன்ஸ்டா, யூடூப் பயன்படுத்தலாம்.!

இந்த புதிய வாட்ஸ் ஆப் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷன் 2.18.301 அப்டேட் இல் பிக்சர்-இன்-பிக்சர் மோடு சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இனிமேல் வாட்ஸ் ஆப் பயனர்கள், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடூப் மற்றும் வீடியோஸ் என அனைத்தையும் வாட்ஸ் ஆப்-லேயே பயன்படுத்திக் கொள்ளலாம்.

"பிக்சர்-இன்-பிக்சர்"

இந்த "பிக்சர்-இன்-பிக்சர்" மோடு சேவையை வாட்ஸ் ஆப் நிறுவனம் இதற்கு முன்பே பயனர்களுக்கு வழங்கத் திட்டமிட்டிருந்தது, ஆனால் சில காரணத்தினால் அது தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அதன் படி தற்பொழுது இந்தச் சேவையுடன் இணங்கும் புதிய பீட்டா வாட்ஸ் ஆப் அப்டேட்டை, வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

 பீட்டா வெர்ஷன் 2.18.301 அப்டேட்

பீட்டா வெர்ஷன் 2.18.301 அப்டேட்

இந்த புதிய வாட்ஸ் ஆப் பீட்டா வெர்ஷன் 2.18.301 அப்டேட் செய்த பின்பு உங்களுக்கு பிக்சர்-இன்-பிக்சர் சேவை கிடைக்கவில்லை என்றால், உங்களின் வாட்ஸ் ஆப் சாட்களை பேக்கப் செய்துவிட்டு, வாட்ஸ் ஆப் செயலியை மீண்டும் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். இப்பொழுது, உங்களுக்கு இந்த புதிய அப்டேட் எந்தத் தடையுமின்றி கிடைக்கும். ஐபோன் பயனர்களுக்கு இந்த அப்டேட் முன்பே வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 வாட்ஸ் ஆப் இல் யூடூப் & இன்ஸ்டாகிராம்

வாட்ஸ் ஆப் இல் யூடூப் & இன்ஸ்டாகிராம்

இதன் மூலம் வாட்ஸ் ஆப் இல் அனுப்பப்படும் யூடூப் அல்லது இன்ஸ்டாகிராம் வீடியோ லிங்க்கள் அனைத்தும் இனி வாட்ஸ் ஆப் செயலியிலேயே ஓபன் செய்து பார்த்துக்கொள்ளலாம். இத்துடன் இனிமேல் யூடூப் அல்லது இன்ஸ்டாகிராம் வீடியோக்களை பார்க்க யூடூப் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலி பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.

"பப்பில் வீடியோ விண்டோ"

இந்த வீடியோகள் ஒரு சிறிய "பப்பில் விண்டோ"வில் பிளே செய்யப்படும், இந்த வீடியோ பப்பில் விண்டோவில் பாஸ், பிளே, கிளோஸ் மற்றும் புள் ஸ்கீரின் சேவைக்கான கட்டுப்பாடு கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த வீடியோ பப்பில் விண்டோகளை வாட்ஸ் ஆப் திரையில் எங்கு வேண்டுமானாலும் நகர்த்திக் கொள்ளலாம்.

ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட்

ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட்

இந்த புதிய அப்டேட் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் மற்றும் அதற்கு மேல் இருக்கும் ஆண்ட்ராய்டு வெர்ஷன் ஸ்மார்ட் போன்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
WhatsApp Android beta users get PiP mode to watch Instagram, YouTube, Facebook videos in-app : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X