வாட்ஸ்ஆப் செயலியில் க்ரூப் கால் ஷார்ட்கட் வசதி அறிமுகம்.!

பின்பு சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்ஆப் செயலியில் கண்டறியப்பட்ட பிழை பயனரின் பழைய குறுந்தகவல்களை தானாகஅழிக்க செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.

|

வாட்ஸ்ஆப் செயலியில் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்ட வண்ணம் உள்ளது, அதன்படி முன்பு வாட்ஸ்ஆப் செயலியில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் மேற்கொள்ளும் வசதி வழங்கப்பட்டிருப்பதும் அனைவரும் அறிந்ததே, இதைத் தொடர்ந்து வாட்ஸ்ஆப் செயலியில் க்ரூப் கால் வசதி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சேர்க்கப்பட்டது.

வாட்ஸ்ஆப் செயலியில் க்ரூப் கால் ஷார்ட்கட் வசதி அறிமுகம்.!

இந்த அம்சம் பயனுள்ள வகையில் இருந்தாலும், வீடியோ கால் மேற்கொள்வது சற்றே சிக்கல் நிறைந்த ஒன்றாக இருக்கிறது, பின்பு முதலில் ஒரு நபருடன் வீடியோ கால் துவங்கி பின் மற்றவர்களை அதில் இணைத்துக் கொள்ள வேண்டும்.தற்சமயம்
சிக்கல் நிறைந்த அம்சமாக இருந்தாலும், விரைவில் இது எளிமையாக்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு பீட்டா

ஆண்ட்ராய்டு பீட்டா

தற்சமயம் வாட்ஸ்ஆப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.9 செயலியில் வீடியோ கால் செய்ய பிரத்யேக பட்டன் வழங்கப்பட்டுள்ளது, மேலும் இதனால் க்ரூப் சாட் செய்யும் போது ஒற்றை கிளிக் மூலம் வீடியோ கால் செய்யலாம் எனவும் பின்பு பலருக்கு
ஓரே சமயத்தில் வீடியோ கால் செய்ய க்ரூப் காண்டாக்ட்கள் இடம்பெற்றிருக்கும் ஸ்லைடிங் பயன்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.

க்ரூப் கால் ஷார்ட்கட்

க்ரூப் கால் ஷார்ட்கட்

இந்த புதிய அப்டேட் மூலம் க்ரூப் கால் ஷார்ட்கட் மட்டுமின்றி செயலியில் இருந்த பிழைகளும் சரி செய்யப்பட்டுள்ளது என வாட்ஸ்ஆப் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில்

விரைவில்

க்ரூப் வீடியோ கால் பட்டன் ஏற்கனவே ஐஒஎஸ் செயலியில் வழங்கப்பட்டிருக்கிறது, ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் தற்சமயம் சோதனை செய்யப்படும் இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்காப்படுகிறது.

பிழை

பிழை

பின்பு சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்ஆப் செயலியில் கண்டறியப்பட்ட பிழை பயனரின் பழைய குறுந்தகவல்களை தானாக அழிக்க செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது, இதில் பலர் தங்களது வாட்ஸ்ஆப் குறுந்தகவல்கள் தானாக அழிந்துவிட்டதாக அவரவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 2015-ம் ஆண்டு

2015-ம் ஆண்டு

சில பயனர்கள் 2015-ம் ஆண்டு அனுப்பப்பட்ட குறுந்தகவல்கள் அழிந்து போனதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தனர் குறுந்தகவல்கள் தானாக அழிந்து போகும் பிழை குறித்து வாட்ஸ்அப் சார்பில் இதுவரை எவ்வித விளக்கமும் வழங்கப்படவில்லை
என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
WhatsApp for Android 2.19.9 Update Adds Group Call Shortcut, Fixes GIF Bug: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X