Whatsapp உடன் கைகோர்த்த WHO - இனி வைரஸுடன் சேர்த்து போலி செய்திகளையும் கட்டுப்படுத்துவோம்!

|

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் இன்னும் அதிகரித்து வருகிறது. ஒரே ஒரு நாட்டில் ஒருவரிடத்தில் தொற்றிய இந்த வைரஸ் இப்பொழுது உலகத்தில் உள்ள பல நாடுகளில் பரவி வருகிறது. இந்த வைரஸ் பற்றிப் பல உண்மை தகவல்கள் மற்றும் அதிகப்படியான போலி தகவல்கள் வாட்ஸ்அப் பயன்பாட்டில் பகிரப்பட்டு வருகிறது. இதைத் தடுக்கும் முயற்சியாக வாட்சப் தற்பொழுது WHO உடன் கூட்டு சேர்ந்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்கள்

உலக சுகாதார அமைப்பின் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்கள்

கொரோனா வைரஸ் தொடர்பான சுகாதார தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பின் இந்த முயற்சி முற்றிலுமாக உலக மக்களை நேரடியாகச் சென்று சேரவில்லை என்று தான் கூற வேண்டும். இதற்கிடையில் அசல் செய்திகளுடன் பிற மொழிகளில் மொழிபெயர்க்கும் போது சில தகவல்கள் சேர்க்கப்பட்டு போலி தகவளாக உருமாறிவிடுகிறது.

உலக சுகாதார அமைப்புடன் கூட்டுச் சேர்ந்த வாட்ஸ்அப்

உலக சுகாதார அமைப்புடன் கூட்டுச் சேர்ந்த வாட்ஸ்அப்

இந்த செயலை தடுத்து மக்கள் நேரடியாக உலக சுகாதார அமைப்பின் தகவல் மற்றும் ஆலோசனைகளை நேரடியாகப் பெறுவதற்கு வாட்ஸ்அப்நிறுவனம் உலக சுகாதார அமைப்புடன் கூட்டுச் சேர்ந்துள்ளது. இதற்காக வாட்ஸ்அப் மெசேஜ்ஜிங் தளத்தில் புதிய சுகாதார எச்சரிக்கையை அறிவிக்க என்ற புதிய சேவையை வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய தற்பொழுது அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கு ஆங்கிலத்தில் கிடைக்கிறது.

ரூ.4,000-விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் அசத்தலான ரியல்மி எக்ஸ்2 ப்ரோ.!ரூ.4,000-விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் அசத்தலான ரியல்மி எக்ஸ்2 ப்ரோ.!

முதலில் இந்த எண்னை சேவ் செய்யுங்கள்

முதலில் இந்த எண்னை சேவ் செய்யுங்கள்

இந்த சேவையை உங்கள் வாட்சஅப் எண்ணிலிருந்தே நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம், இதன் மூலம் கொரோனா வைரஸ் பற்றிய உங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப்பில், WHO ஹெல்த் எச்சரிக்கையைத் தொடர்பு கொள்ள, முதலில் பயனர்கள் உங்களுடைய காண்டாக்ட் லிஸ்டில் +41798931892 என்ற எண்ணைச் சேவ் செய்ய வேண்டும். உங்கள் சந்தேகங்களுக்குப் பதில் வேண்டுமென்றால் இந்த எண்ணிற்கு hi என்று மெசேஜ் செய்தால் போதும்.

ஹெல்த் எச்சரிக்கை அறிவிப்புகள் அனைத்தும் இனி நேரடியாக படிக்கலாம்

ஹெல்த் எச்சரிக்கை அறிவிப்புகள் அனைத்தும் இனி நேரடியாக படிக்கலாம்

இத்துடன் இந்த எண்ணின் கீழ் வரும் முதல் வரவேற்பு மெசேஜ்ஜில் Whatsapp.com/coronavirus என்ற வலைத்தளம் லிங்க் செய்யப்பட்டுள்ளது. இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் கொரோனா வைரஸ் தகவல் மையத்தையும் நீங்கள் பார்வையிடலாம், மேலும் உலக சுகாதார அமைப்பின் ஹெல்த் எச்சரிக்கையுடன் சாட் பாக்ஸைத் திறக்க முகப்புப் பக்கத்தில் இருக்கும் WHO இணைப்பைக் கிளிக் செய்தால் போதுமானது.

செவ்வாயில் மோதி தன்னை விடுவித்துக்கொண்ட நாசா லேண்டர்...செவ்வாயில் மோதி தன்னை விடுவித்துக்கொண்ட நாசா லேண்டர்...

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று குறித்த பாதுகாப்பு

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று குறித்த பாதுகாப்பு

கொரோனா வைரஸ் தொடர்பான அனைத்து அதிகாரப்பூர்வ தகவல்களையும் இந்த சுகாதார எச்சரிக்கை சேவை உங்களுக்கு நேரடியாக வழங்கும். கொரோனா வைரஸ் நோய்த்தொற்று, பாதுகாப்பான பயண ஆலோசனை மற்றும் கொரோனா வைரஸ் பற்றிப் பரவி வரும் போலி கட்டுக்கதைகளை நீக்குவது போன்ற தலைப்பில் பயனர்களுக்குப் பல விதத்தில் இந்த சேவை உதவுகிறது. இந்த சேவை ஆரம்ப சேவையாக ஆங்கிலத்தில் மட்டும் தொடங்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரத்தில் மேலும்  மொழிகளில்

அடுத்த வாரத்தில் மேலும் மொழிகளில்

ஆங்கிலம் மட்டும் அனைவரும் உதவாது என்பதினால் வரும் வாரங்களில் ஆங்கிலம் தவிர, அரபு, சீன, பிரஞ்சு, ரஷ்ய மற்றும் ஸ்பானிஷ் உள்ளிட்ட அனைத்து ஐக்கிய நாடுகளின் மொழிகளிலும் கிடைக்கும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏர்டெல் சேவையில் ஏதேனும் பிரச்சனையா? இதை பயன்படுத்துங்கள்.! ஏர்டெல் வேண்டுகோள்.!ஏர்டெல் சேவையில் ஏதேனும் பிரச்சனையா? இதை பயன்படுத்துங்கள்.! ஏர்டெல் வேண்டுகோள்.!

வைரஸை விட வேகமாக பரவும் போலி செய்திகள்

வைரஸை விட வேகமாக பரவும் போலி செய்திகள்

வைரஸைவிட, வைரஸ் பற்றிய போலி தகவல்கள் தான் வலைத்தளம் மூலம் உலகம் முழுதும் வேகமாகப் பரவி வருகிறது என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார். போலி செய்திகளை கண்டு மக்கள் அஞ்ச வேண்டாம் என்றும், கொரோனா அறிகுறிகள் உங்களுக்கு உடனே கொரோனா பாதுகாப்பு அமைப்பின் மருத்துவரைஅணுகுங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுளள்து.

Best Mobiles in India

English summary
WhatsApp And World Health Organization Have Partnered To Launch New Health Alert Chat Box : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X