பிளாக் செய்த எண்களில் இருந்து மெசேஜ் வருகிறது; வாட்ஸ்ஆப் பயனர்கள் கொந்தளிப்பு.!
பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான மெசேஜிங் தளமான வாட்ஸ்ஆப்பில் உருவாகியுள்ள ஒரு புதிய சிக்கல் ஆனது வாட்ஸ்ஆப் பயனரக்ளின் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான மெசேஜிங் தளமான வாட்ஸ்ஆப்பில் உருவாகியுள்ள ஒரு புதிய சிக்கல் ஆனது வாட்ஸ்ஆப் பயனரக்ளின் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ்ஆப்பில், குறிப்பிட்ட மொபைல் எண்ணை பிளாக் செய்யும் அம்சம் இருப்பதை நாம் அனைவருமே அறிவோம். அப்படியாக பிளாக் செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து எந்த மெசேஜூம் வராது என்பது தான் வாட்ஸ்ஆப்பின் செயல்பாடு.

பிளாக் செய்யபட்ட எண்ணில் இருந்து மெசேஜ்.!
ஆனால் தற்போது வாட்ஸ்ஆப்பில் ஏற்பட்டுள்ள மென்பொருள் பிழை (Software bug) ஆனது, பிளாக் செய்யப்பட்ட எண்களில் இருந்து மெசேஜ் அனுப்ப உதவுவதாகவும் மற்றும் அந்த எண்களால் வாட்ஸ்ஆப் ஸ்டோரீஸ்களை பார்க்க முடிகிறது என்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இந்த சிக்கலானது சமீபத்திய ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பதிப்பில் காணப்பட்டுள்ளதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன.

தடுக்கும் வல்லமையை இழக்க செய்கிறது.!
பிரபல டிப்ஸ்டர் மற்றும் பீட்டா சோதனையாளர் ஆன வாட்ஸ்ஆப்பீட்டா இன்ஃபோவின் படி (WaBetaInfo), பிளாக் செய்யப்பட்ட எண்களில் இருந்து வாட்ஸ்ஆப் பயனர்கள் மெசேஜ்களை பெற்றுள்ளனர். இந்த மென்பொருள் பிழையானது, இந்த சமீபத்திய 'பக்' ஆனது, பிளாக் செய்யப்பட்ட எண்களை தடுக்கும் வல்லமையை இழக்க செய்கிறது. இதன் விளைவாக, அவர்களால் எந்த தடையும் இல்லாமல் மெசேஜ்களை, ஸ்டோரீஸ்களை பார்க்க முடிகிறது.

ட்விட்டர் வழியாக பயனர்கள் புகார்.!
இந்த வாட்ஸ்ஆப் பக் சார்ந்த புகார்கள், டவிட்டர் தளத்தில் நிரம்பி வழிகிறது.

உதவி செய்யுங்கள்.!
சிலர் இந்த வாட்ஸ்ஆப் பக் சிக்கலில் இருந்து தப்பிப்பது எப்படி என்பது சார்ந்த உதவிகளையும் கேட்டு வருகின்றனர்.

ஸ்க்ரீன் ஷார்ட்.!
ஒருவர் பிளாக் செய்யப்பட்ட எண்ணில் இருந்து கிடைத்துள்ள மெசேஜை ஸ்க்ரீன் ஷார்ட் எடுத்து பதிவிட்டுள்ளார்.

நீங்களும் பாதிக்கப்பட்டுருந்தால்.? என்ன வேண்டும்.?
பிளாக் செய்யப்பட்ட பயனரிடமிருந்து மெசேஜ் வரக்கண்டால்.. உடனே கீழே உள்ள வழிமுறைகளை பின்பற்றவும் :
வழிமுறை 01: நீங்கள் பிளாக் செய்ய விரும்பும் பயனரைத் மீண்டும் பிளாக் செய்ய வேண்டும். அதற்கு..
வழிமுறை 02: குறிப்பிட்ட பயனரின் "காண்டாக்ட் இன்ஃபோ'வை அணுக அவரது பெயரில் டாப் செய்யவும்.
வழிமுறை 03: பின்னர் 'காண்டாக்ட் இன்ஃபோ' மீது டாப் செய்யவும்.
வழிமுறை 04: இப்போது, பிளாக் செய்யும் அம்சம் உங்களுக்கு அணுக கிடைக்கும். அதை டாப் செய்து, உறுதி செய்யவும்.


எந்த அதிகாரபூர்வமான அறிக்கையும் வெளியாகவில்லை.!
இந்த எளிமையான வழிமுறைகளை பின்பற்றுவதின் மூலமாக, நீங்கள் குறிப்பிட்ட எண்ணை மீண்டும் பிளாக் செய்யலாம். வாட்ஸ்ஆப்பின் இந்த சமீபத்திய பக் பற்றிய எந்த அதிகாரபூர்வமான அறிக்கையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்ஆப் சார்ந்த மேலும் பல அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்தின் ஆப்ஸ் பிரிவுடன் இணைந்திருக்கவும்.


Click it and Unblock the Notifications