இப்படி ஒரு ஸ்ட்ராங்கான WhatsApp பாதுகாப்பை நீங்களே எதிர்பார்த்திருக்க முடியாது.. புதிய அப்டேட்..
வாட்ஸ்அப் நிறுவனம் அதன் வாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் வெர்ஷனில் இன்னும் கூடுதலான பாதுகாப்பை அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளது, உங்கள் வாட்ஸ்அப் கணக்கை உங்கள் கணினியுடன் இணைக்க விரும்பும்போது இனி கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இனி உங்களின் அனுமதி இல்லாமல், உங்களுக்குத் தெரியாமல் யாரும் உங்கள் வாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் வெர்ஷனை ஓபன் செய்ய முடியாது.

பேஸ் ஐடி அன்லாக் மற்றும் பிங்கர்பிரிண்ட் அன்லாக் பாதுகாப்பு
மொபைல் போன் மோடில் கிடைக்கும் பேஸ் ஐடி அன்லாக் மற்றும் பிங்கர்பிரிண்ட் அன்லாக் அம்சத்தை வாட்ஸ்அப் இப்போது அதன் வாட்ஸ்அப் வெப் வெர்ஷனில் பயன்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப் வெப் அல்லது டெஸ்க்டாப்பை இணைக்க, உங்கள் சாதனத்தில் முதலில் கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதற்கு முன்பு, இனி ஸ்மார்ட்போனில் பேஸ் அன்லாக் அல்லது பிங்கர்பிரிண்ட் அன்லாகை பயன்படுத்துமாறு கேட்கப்படும்.

உங்களை தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை
உங்கள் அனுமதியின்றி உங்களின் நண்பர்கள் அல்லது ஆபிஸ்மேட் போன்றவர்கள் உங்கள் வாட்ஸ்அப் கணக்கைக் கணினியில் ஓபன் செய்வதற்கான வாய்ப்பை இது பாதுகாப்பு முறை கட்டுப்படுத்தும். இது வாட்ஸ்அப்பின் தற்போதைய பாதுகாப்பு நடவடிக்கைகளில் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல், உங்கள் வாட்ஸ்அப் கணக்கு வெப் / டெஸ்க்டாப் வெர்ஷனில் உள்நுழையும் போதெல்லாம் உங்கள் ஸ்மார்ட்போனில் ஒரு நோட்டிபிகேஷன் பாப் அப் செய்யப்படும்.

பயோமெட்ரிக் தகவல்களை வாட்ஸ்அப் அணுகாது
பேஸ் அன்லாக் மற்றும் பிங்கர்பிரிண்ட் அன்லாக் ஆகிய இரண்டு அம்சங்கள் உங்கள் சாதனத்தில் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையில் செயல்படுகிறது. வாட்ஸ்அப்பின் புதிய வடிவமைப்பால், உங்கள் சாதனத்தின் 'இயங்குதளத்தில் சேமிக்கப்பட்ட பயோமெட்ரிக் தகவல்களை வாட்ஸ்அப் அணுக முடியாது' என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெளிவாக உறுதியுடன் தெரிவித்துள்ளது.

புதிய வடிவத்தில் டிசைன்
ஆகையால், உங்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு இதன் மூலம் கிடைக்கிறது என்று நிறுவனம் கூறியுள்ளது. வாட்ஸ்அப் வெப் அதன் சாதனங்களை இணைக்கும் இந்த புதிய பாதுகாப்பு அப்டேட்டை புதிய வடிவத்தில் டிசைன் செய்துள்ளது. ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் வெப் வலைப்பக்கத்தின் டிசைன் மறுவடிவமைப்புடன், வரும் வாரங்களில் இணக்கமான சாதனங்களுக்குக் கிடைக்குமென்று நிறுவனம் கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications