வாட்ஸ்அப்: சத்தமில்லாமல் வெளிவந்த புத்தம் புதிய அம்சம்!

|

வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த சில மாதங்களாகத் தனது அண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்குத் தொடர்ச்சியாகப் பல புதிய அப்டேட்களை வெளியிட்டுவருகிறது. தற்பொழுது சத்தமில்லாமல் வாட்ஸ்அப் நிறுவனம் சில புதிய அம்சங்களை வெளியிட்டுள்ளது.

வாட்ஸ்அப் அப்டேட் 2.19.120

வாட்ஸ்அப் அப்டேட் 2.19.120

ஐபோனுக்கான சமீபத்திய வாட்ஸ்அப் அப்டேட் 2.19.120 வெர்ஷனில், பார்வை ஊனமுற்றோருக்கான 'பிரெய்ல் கீபோர்டு' சேவை, 'கால் வெயிட்டிங்' - அழைப்பு காத்திருப்பு ஆதரவு, புதுப்பிக்கப்பட்ட சாட் டிஸ்பிளே மற்றும் பல பயனுள்ள அம்சங்களைச் சத்தமில்லாமல் வெளியிட்டுள்ளது.

கால் வெயிட்டிங் ஆதரவு

கால் வெயிட்டிங் ஆதரவு

புதிய அம்சமான கால் வெயிட்டிங் ஆதரவு, பயனர் தொலைபேசி அழைப்பில் இருந்தாலும் கூட வாட்ஸ்அப் இல் வரும் மற்றொரு அழைப்பிற்குப் பதிலளிக்க இந்த புதிய அம்சம் அனுமதிக்கிறது. ஐபோன் பயனர்களுக்கான அழைப்பு காத்திருப்பு ஆதரவு அம்சம் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள வெர்ஷனில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இனி யாரும் தப்பிக்க முடியாது: 14 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ராக்கெட்!இனி யாரும் தப்பிக்க முடியாது: 14 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ராக்கெட்!

பட்டியலில் காணப்படாத அம்சம்

பட்டியலில் காணப்படாத அம்சம்

இப்போது வரை, எல்லா வாட்ஸ்அப் பயனர்களும் மற்றொரு அழைப்பில் இருக்கும்போது, பிஸி டோன் மட்டுமே அழைப்பு விடுத்த நபருக்குக் கேட்கும். அழைப்பில் உள்ளவர்களுக்கு எந்தவித நோட்டிபிகேஷனும் அனுப்பப்படமாட்டாது. ஆனால் இனி பயனர்களுக்கு கால் வெயிட்டிங் நோட்டிபிகேஷன் அனுப்பப்படும். பீட்டா வெர்ஷன் சோதனையின் போது கூட இந்த அம்சம் பட்டியலில் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரெய்லி கீபோர்டு அம்சம்

பிரெய்லி கீபோர்டு அம்சம்

பிரெய்லி கீபோர்டு அம்சம், குறிப்பாகப் பார்வை ஊனமுற்றவர்கள் வாய்ஸ்ஓவர் பயன்முறையைப் பயன்படுத்தி நேரடியாக மெசேஜ்களை குரல் மூலம் டைப் செய்து எளிதாக அனுப்பும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் சாட்களை ஸ்கேன் செய்ய சாட் ஸ்கிரீனில் சில மாற்றங்களை வாட்ஸ்அப் செய்துள்ளது.

ஜியோ பயனர்களை பொறாமைப்பட செய்யும் ஏர்டெல் நிறுவனத்தின் பலே ப்ரீபெய்ட் திட்டங்கள்!ஜியோ பயனர்களை பொறாமைப்பட செய்யும் ஏர்டெல் நிறுவனத்தின் பலே ப்ரீபெய்ட் திட்டங்கள்!

பிங்கர் பிரிண்ட் லாக் சேவை

பிங்கர் பிரிண்ட் லாக் சேவை

அண்மையில் வாட்ஸ்அப் நிறுவனம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு பிங்கர் பிரிண்ட் லாக் சேவை மற்றும் புதிய குரூப் பிரைவசி அம்சத்தை அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது ஐபோன் பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள கால் வெயிட்டிங் மற்றும் பிரெய்லி கீபோர்டு அம்சம் விரைவில் சத்தமில்லாமல் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
A Brand New Feature Rolled Out In Latest Update Version Without Any Information : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X