வாட்ஸ்ஆப்பில் விரும்பத்தகாத தொந்தரவா? இதோ புகார் அளிக்க புதிய வசதி
தொலைத்தொடர்பு சேவையில் வாடிக்கையாளர் விரும்பத்தகாத தகவல்களைப் பெறுவது உரிம விதிமுறைகளை மீறுவதாகும் என கடந்த 19-ம் தேதி மத்திய தொலைத் தொடர்பு துறை தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்ஆப் நிறுவனம் பல கட்டுப்பாடுகளை கொண்டுவந்துவிட்டது, பின்பு இந்த செயலியில் பல்வேறு அம்சங்கள் தொடர்ந்து சேர்க்கப்பட்ட வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் விரும்பத்தகாத தகவல்கள் வரும்பட்டசத்தில்
அதுகுறித்து மத்திய தொலைத்தொடர்பு துறையிடம் புகார் தெரிவிக்கலாம் என அத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதாவது வாட்ஆப்பில் வரும் விரும்பத்தகாத தகவலை ஸ்கிரீன் ஷாட் ஆக படம்பிடித்து அதையும் மொபைல் எண்ணையும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி புகார் தெரிவிக்கலாம் என தகவல் தொடர்புத்துறை
கட்டுப்பாடு அதிகாரி அஷிஷ் ஜோஷி அவர்கள் தெரிவித்தார்.

ஆஷிஷ் ஜோஷி
விரும்பத்தகாத தகவல் என்பது மிரட்டலாகவோ நிர்பந்திப்பதாகவோ அல்லது ஆபாசமானதாகவோ இருக்கலாம் என்றும் ஆஷிஷ் ஜோஷி அவர்கள் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உரிய நடவடிக்கை
பின்பு பாதிக்கப்பட்டவர் தரும் புகார் சம்மந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கும் காவல் நிலையத்திற்கும் அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படும் எனவும் அவர்தெரிவித்தார்.

விரும்பத்தகாத தகவல்கள்
வாடிக்கையாளர்களுக்கு விரும்பத்தகாத தகவல்கள் வரும்பட்டசத்தில் அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பது மொபைல் போன் நிறுவனங்களின் கடமை என்றும் ஏனெனில் வாடிக்கையாளர் விண்ணப்பப் படிவத்திலேயே இதுகுறித்து உறுதியை அவை வழங்கியுள்ளதாகவும் ஆஷிஷ் அவர்கள் தெரிவித்தார்.

கடந்த 19-ம் தேதி
தொலைத்தொடர்பு சேவையில் வாடிக்கையாளர் விரும்பத்தகாத தகவல்களைப் பெறுவது உரிம விதிமுறைகளை மீறுவதாகும் என கடந்த 19-ம் தேதி மத்திய தொலைத் தொடர்பு துறை தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபலங்கள்
இந்த வசதி கண்டிப்பாக பல்வேறு பிரபலங்கள் மற்றும் மக்களுக்கும் பயன்படும் வகையில் உள்ளது என்று தான் கூறவேண்டும்.


Click it and Unblock the Notifications