ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமை மிஞ்சும் ஒரு செயலியா?

இந்த செயலில் 'கலெக்சன்ஸ்' என்ற ஒரு வசதி உள்ளது. இதை ஒரு நூலகம் போல் நீங்கள் பயன்படுத்தி உங்களுக்கு தேவையான பதிவுகள், கருத்துக்களை சேமித்து வைத்து கொண்டு தேவைப்படும் போது எடுத்து பார்த்து கொள்ளலாம்.

|

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செய்த தவறுகளை செய்ய மாட்டோம் என்ற வாக்குறுதியுடன் சில ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட
வேரோ என்ற சமூக வலைதளம் தனது பயன்பாட்டை அதிகரித்து வருகிறது. வேரோ சமூக வலைத்தளம் கடந்த 2015ஆம் ஆண்டு லெபனான் நாட்டை சேர்ந்த கோடீஸ்வரர் அய்மேன் ஹரிரி என்பவரால் தொடங்கப்பட்டது. இது பிற சமூக வலைப்பின்னல்களில் உள்ள அல்காரிதம் பயனாளிகளுடன் எளிதில் பயன்படுத்தும் வகையில் இருக்கும் என்று அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் அதிக நபர்களால் டவுண்லோடு செய்யப்பட்டு வரும் இந்த செயலி ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த சில நாட்களாக இந்த செயலியில் சில தொழில்நுட்ப கோளாறுகள் தென்படுவதாக கூறப்படுகிறது இந்த செயலி பயனாளிகளுக்குள் திரைப்படம், பாடல்கள் மற்றும் லிங்குகள், புகைப்படங்கள்ல் ஆகியவற்றை பகிர்ந்து கொள்ள அனுமதிக்கின்றது. இதனால் ஒரு உண்மையான சமூகவலைத்தளத்தை பயனாளிகள் அனுபவிக்கின்றனர்.

வேரோ

வேரோ

உங்களுக்காகவே ஒரு சமூக வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது, அதுதான் வேரோ. இந்த பெயரின் அர்த்தம் உண்மை என்பது என்று இதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வேரோவில் என்ன வித்தியாசம்?

வேரோவில் என்ன வித்தியாசம்?

பயனாளிகள் வேரோவை விரும்பி பயன்படுத்துவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று விளம்பரம் என்பதே இதில் இல்லை. அதேபோல் சில கஷ்டமான விஷயங்களை மாற்ற முடியாத வகையிலும், நிலையான அலாக்ரிதமும் உண்டு. இதனால் இதில் பதிவாகும் கருத்துக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசைப்படி தோன்றும், எந்த பதிவும் மிஸ் ஆக வாய்ப்பே இல்லை.

நண்பர்கள்

நண்பர்கள்

மேலும் இது நமது நண்பர்களை வகைப்படுத்தியும் கொடுக்கும். நெருங்கிய நண்பர்கள், நண்பர்கள், மற்றும் ஃபாலோயர்கள் என வேறுபடுத்தி காண்பிப்பதால் பயன்படுத்த எளிதாக இருக்கும். மேலும் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வகையான பாதுகாப்பு செட்டிங் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கலெக்சன்ஸ்

கலெக்சன்ஸ்

இந்த செயலில் 'கலெக்சன்ஸ்' என்ற ஒரு வசதி உள்ளது. இதை ஒரு நூலகம் போல் நீங்கள் பயன்படுத்தி உங்களுக்கு தேவையான பதிவுகள், கருத்துக்களை சேமித்து வைத்து கொண்டு தேவைப்படும் போது எடுத்து பார்த்து கொள்ளலாம். அதேபோல் வேரோ செயலில் தனிப்பட்ட தகவல்களை தனியாக பிரித்தெடுத்து பெர்சனல் என்று தனியாக சேமித்து வைக்கும் வசதியையும் அளித்துள்ளது. இதனால் நமது தனிப்பட்ட தகவல்கள் பரவிவிடும் என்ற பயம் இருக்காது.

ஒருமில்லியன்

ஒருமில்லியன்

ஆனால் இந்த செயலி எப்படி விளம்பரமே இல்லாமல் பயனாளிகளுக்கு சேவை செய்ய முடிகிறது. அதற்காகத்தான் ஒரு கட்டணத்தை பெறுகிறது. இந்த செயலியை நீங்கள் இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம். ஆனால் தொடர்ந்து அதில் செயல்பட வருட கட்டணத்தை பயனாளி செலுத்த வேண்டும். முதல் ஒருமில்லியன் பயனாளிகள் இந்த கட்டணத்தை கட்ட வேண்டிய அவசியம் இல்லை.

 சமீபத்திய மாற்றங்களால் பயனாளிகள் வருத்தம்

சமீபத்திய மாற்றங்களால் பயனாளிகள் வருத்தம்

சமீபகாலமாக ஃபேஸ்புக், ஸ்னாப்சாட் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் வேரோ பயனாளிகளை வருத்தமடைய செய்து வருகிறது. போலி செய்திகளின் மீதான நம்பிக்கை பிரச்சினைகள் பல ஆண்டுகளாக பேஸ்புக் பாதிக்கப்பட்டுள்ளது. சமூக வலைப்பின்னல் நெட்வொர்க்கின் சமீபத்திய செய்தி மாற்றங்கள் செய்த ஒவ்வொரு நாளும் 50 மில்லியன் மணிநேரம் பயனர்களால் செலவிடப்பட்ட நேரத்தை குறைக்கின்றன.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
 இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம்

அதேபோல் இன்ஸ்டாகிராம் செயலியும் ஒரு பின்னடைவை சந்தித்து வருகிறது. இதில் கால வகைப்படியான போஸ்ட்டுகள் சில சமயம் தெரிவதில்லை. அதாவது நியூஸ்ஃபீடில் சில பதிவுகள் தெரிவதில்லை. சில சமயம் தாமதமாக தெரிகிறது. ஸ்னாப்சட் அப்டேட்டும் பயனாளிகளுக்கு ஆத்திரத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள பயனாளிகளை இதன் அப்டேட் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Best Mobiles in India

English summary
What is Vero Social media app to rival Facebook and Instagram is topping charts ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X