டெலிகிராம் செயலியில் இப்படியொரு சிக்கல் உள்ளதா? மக்களே உஷார்.!

|

வாட்ஸ்அப் நிறுவனம் அண்மையில் அறிவித்துள்ள பிரைவசி பாலிசி மாற்றம் உலகம் முழுக்க பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது என்று தான் கூறவேண்டும். அதாவது வாட்ஸ்அப்பின் புதிய நிபந்தனைகளும், ரகசிய காப்பு விதிகளும் வரும் பிப்ரவரி 8-ம் தேதி முதல் மாற்றி அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கவல்கள், செல்போன்

அதன்படி பயனர்களின் தகவல்கள், செல்போன் நம்பர், முகவரி, ஸ்டேட்டஸ், பண பரிவர்த்தணை என அனைத்து வாட்ஸ்அப் சர்வரில் சேகரித்து வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதேபோல் பயனாளர்கள் குறித்த விவரங்களை திரட்டி பேஸ்புக் வாயிலாக பிற தொழில் நிறுவனங்களுக்கும் வழங்குவதும் இதன் பின்னணியில் உள்ளது. வெளிவந்த தகவலின்படி, வாட்ஸ்ஆப்பில் நாம் அனுப்பும் தகவல்கள் 30 நாட்களுக்கு அதன் சர்வர்களில் சேமித்து வைக்கப்படும்.

சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற

இந்த நிலையில் சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற மாற்று ஆப்களை மக்கள் பயன்படுத்த துவங்கிவிட்டனர். மேலும் சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற மாற்று ஆப்களை கவனத்தில் கொள்ளம் தருணத்தில் டெலிகிராம் மெசஞ்சர் ஆப்பில் உள்ள ஒரு அம்சத்தின் வழியாக உங்கள் சரியான லோக்கேஷனை ஹேக்கர்களால் பிரித்தெடுக்க முடியும். அதாவது இது உங்களின் துல்லியமான இருப்பிடத்தைப் பெற ஸ்டாக்கர்களுக்கு உதவும் என்கிற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆராய்ச்சியாளர் ஆன அகமது ஹசன் கூறியுள்ளா

அண்மையில் வெளிவந்த ஆர்ஸ்டெக்னிகாவின் தகவலின்படி, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை கண்டுபிடிப்பதற்காக டெலிகிராமில் உள்ள People Nearby அம்சம் பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர் ஆன அகமது ஹசன் கூறியுள்ளார்.

அறிக்கையானது,

ஆர்ஸ்டெக்னிகாவின் அறிக்கையானது, டெலிகிராம் ஆப் அதன் பயனர்களை அவர்கள் இருக்கும் புவியியல் பகுதிக்குள் லோக்கல் க்ரூப்களை உருவாக்க அனுமதிக்கிறது. மேலும் இதுபோன்ற லோக்கல் க்ரூப்களுக்கு நுழைய பெரும்பாலான ஸ்கேமர்கள் (மோசடி செய்பவர்கள்) தங்கள் லோக்கேஷனை ஸ்பூஃப் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

க்ரூப்பில் சாட் செய்ய

அதன்பின்பு போலி பிட்காயின் முதலீடுகள், ஹேக்கிங் டூல்ஸ், சோஷியல் செக்யூரிட்டி நம்பர் திருட்டு மற்றும் பிற மோசடிகளை கட்டவிழ்த்து விடுகிறார்கள் என்று ஹசன் கூறியுள்ளார். அதிகமான டெலிகிராம் பயனர்கள் தங்களின் இருப்பிடத்தைப் பகிர்வது, தங்களின் வீட்டு விலாசத்தை கொடுப்பதற்கு சமம் என்பதை புரிந்துகொள்வதில்லை. மேலும் ஒரு பெண் லோக்கல் க்ரூப்பில் சாட் செய்ய இந்த அம்சத்தைப் பயன்படுத்தினால், தேவையற்ற பயனர்களால் அவர் பின்தொடரபடலாம் என்று ஹசன் எச்சரிக்கிறார்.

பயன்படுத்த முடியும்

ஆனால் சிக்கல் அதிகமுள்ள People Nearby அம்சம் டெலிகிராம் ஆப்பில் டீபால்ட் ஆக அணைக்கப்பட்டுள்ளது. அதாவது இதை கைமுறையாக இயக்கினால் தான் பயனர்கள் அதை பயன்படுத்த முடியும்.

 பாதுகாப்பு ஓட்டை பற்றி ஹஸன்,

மேலும் இந்த பாதுகாப்பு ஓட்டை பற்றி ஹஸன், டெலிகிராம் நிறுவனத்தை மின்னஞ்சல் வழியாக அணுகிய போது People Nearby பிரிவானது நோக்கத்துடனேயே பயனர்களின் இருப்பிடத்தைப் பகிர்கிறது. பின்பு இந்த அம்சம் டீபால்ட் ஆக முடகப்பட்டுள்ளது. பயனர்களின் சரியான இருப்பிடத்தை சில நிபந்தனைகளின் கீழ் தீர்மானிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக
இதை எங்கள் பக்ஸ் பவுண்டி திட்டத்தால் கவனிக்கப்படவில்லை என்று டெலிகிராம் பதில் அளித்துள்ளது.

Best Mobiles in India

English summary
What is the security flaw in the use of telegram: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X