சத்தமில்லாமல் Weibo, Baidu செயலிகள் இந்தியாவில் தடை.!

|

பாதுகாப்பு மற்றும் தனியுரிமை பிரச்சினைகள் காரணமாக 58சீன ஆப் பயண்பாடுகளை (TikTok, UC Browser, Beauty Plus, ShareIt, CamScanner மற்றும் பல செயலிகள்) இந்திய அரசு கடந்த ஜூன் 29 அன்று தடை செய்தது.

பிளே ஸ்டோர் மற்றும் ஐஒஎஸ்-லிருந்து

இந்நிலையில் ட்விட்டர் மற்றும் கூகுள் தேடல் தலங்களுக்கு மாற்றீடுகள் என அழைக்கப்படும் சீனாவின் செயலிகளில் 2 தான்Weibo மற்றும் Baidu தேடல், தற்சமயம் இவற்றுக்க இந்தியா தடை விதித்துள்ளது. பின்பு வெளிவந்த தகவலின்படி கூகுள்பிளே ஸ்டோர் மற்றும் ஐஒஎஸ்-லிருந்து அகற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா வெளியிட்டுள்ள

மேலும் டைம்ஸ் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில், இணைய சேவை வழங்குநர்களுக்கும் இந்த இரண்டு செயலிகளையும் தடுக்குமாறு கூறப்பட்டுள்து. மேலும் ஜூலை 27 ஆம் தேதி இந்திய அரசாங்கம் தடைசெய்த 47 புதிய செயலிகளில் வெய்போ மற்றும் பைடு தேடல் செயலிகளும் அடங்கும் என அதிகாரப்பூர்வ வட்டாரம் TOI செய்தி தளத்திற்கு கூறியதுடன், பலசெயலிகளை தடை செய்வதற்கான முடிவை அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி அவர்களுக்கு

குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் வெய்போவில் ஒரு கணக்கும் இருந்தது,ஆனால் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் அவர் அதை மூடிவிட்டார். பின்பு பிரபலமான tikTok Lite, Likee Lite, Bigo Live Lite, Shareit Lite, CamScanner HD, Hlo மற்றும் Mi கம்யூனிட்டி உள்ளிட்ட 59 செயலிகளை தடை செய்வதற்கான அரசாங்கத்தின் முதல் முடிவைப் பின்பற்றி இந்த 47 செயலிகளின் தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 இந்த 59 செயலிகள்

கடந்த ஜூன் 29-ம் தேதி இந்த 59 செயலிகள் தடைசெய்யப்பட்டன, பின்பு அரசாங்கம் மேலும் 47 செயலிகளை தடை பட்டியிலில் சேர்த்தது. இருப்பினும், இந்த நேரத்தில் இந்த பட்டியலில் உள்ள செயலிகள் என்னென்ன என்பது பகிரங்கப்படுத்தப்படவில்லை.

ண்ணிக்கைக் கொண்ட இந்த

குறிப்பாக 47 எண்ணிக்கைக் கொண்ட இந்த இரண்டாவது பட்டியலில் உள்ள பெரும்பாலான செயலிகளில் டிக்டாக் லைட், ஷேரிட் லைட், கேம்ஸ்கேனர் HD, பயோலைவ் லைட், லைக் லைட்போன்ற தடைசெய்யப்பட்ட 59 இன் ஒரு பகுதியாக இருந்த சில செயலிகளின் குளோன்கள் அல்லது லைட் பதிப்புகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு

மேலும் இந்த செயலிகள், இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு பாதகம் விளைவிக்கும் என்பதாலும், இந்தியாவின் பாதுகாப்பு, அரசின் பாதுகாப்பு, மற்றும் பொது ஒழங்கு ஆகியவற்றில் சீரின்மை காரணமாக தடை செய்யப்பட்டுள்ளன.

ன் அடிப்படையி

அன்மையில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் பப்ஜி மொபைல், பைட் டான்ஸின் Resso போன்றவற்றை உள்ளடக்கிய மேலும் 275 சீன செயலிகளையும் அரசாங்கம் கவனித்து வருவதாக தகவல் வௌளிவந்துள்ளன.

Best Mobiles in India

English summary
Weibo, Baidu Chinese App Blocked in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X