போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த உதவிய கூகுள் நிறுவனம்.!

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள செங்குத்தான சாலைகளில் ஒன்றான பாக்ஸ்டர் வீதியில் உள்ள இக்கோ பார்க் ஓட்டியுள்ள பகுதியில் கடும் சிக்கலைச்சந்திக்க வேண்டியுள்ளது.

|

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வேகமான மற்றும் சுருக்கமான வழிகளைத் தேடுபவர்களுக்கு, வேஸ் என்ற போக்குவரத்து வழிகாட்டி அப்ளிகேஷன் பொறுப்பற்ற முறையில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வழிகாட்டுவதால், அந்த அப்ளிகேஷன் மீது எழுந்துள்ள புகார்களைக் கருத்தில் கொண்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு நகர மன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த உதவிய கூகுள் நிறுவனம்.!

நகர வழக்கறிஞர்கள் அலுவலகத்திற்கு நகர மன்ற உறுப்பினரான டேவிட் ரைவ் அனுப்பியுள்ள ஒரு கடிதத்தில், வேஸ் பயனர்களால் ஏற்பட்டுள்ள இந்த அபாயகரமான சூழ்நிலையைக் குறித்து கோடிட்டு காட்டியுள்ளார்.

இது குறித்து டேவிட் ரைவ் கூறுகையில், "எங்கள் நகர சாலை நெரிசல் திட்டங்கள், அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு ஆகியவை குறித்து நீண்டகாலமாக வகுத்துள்ள திட்டங்களை வேஸ் சீர்க்குலைத்துள்ளது. இதற்கு அவர்கள் அளிக்கும் பதில்கள் போதாக்குறையாகவும் தீர்வுகள் இல்லாததாகவும் உள்ளன" என்றார்.

அவர் கூறுகையில், அவரது ஷிர்மேன் ஓக்ஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு குறுகிய வீதியில், கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி, சில நேரங்களில் மணிக்கு 675-க்கும் அதிகமான வாகனங்கள் கடந்து செல்வதைக் காண முடிகிறது என்றார்.

இந்தப் போக்குவரத்து மூலம் விபத்துக்கள் அதிகரிப்பதோடு, அதிக வாகன நெருக்கடியைச் சந்திக்க தயாராக இல்லாத சாலைகள் பாதிக்கப்படுகின்றன என்றார்.

வழக்கு தொடர வாய்ப்புள்ள இந்தக் கருத்தை வேஸ் செய்தித் தொடர்பாளர் சில்சியா ருஸ்ஸோ மறுத்துள்ளார். ஆனால் கடந்த வாரம் ஒரு பிளாக் இடுகையில் வெளியான "குடிமக்களுக்கான பொறுப்பு" மீதான இந்நிறுவனத்தின் அர்ப்பணிப்பு குறித்து சிஇஓ நோயம் பார்டின் சுட்டிக் காட்டியுள்ளார்.

இது குறித்து நோயம் பார்டின் குறிப்பிடுகையில், லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தின் "சிறப்பான திட்டமிடல் தீர்மானங்கள் மற்றும் அதன் தற்போதைய கட்டமைப்பு வசதிகளில் மேம்பாட்டை கொண்டு வரும் வகையில்" லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணம் மற்றும் நகர போக்குவரக்கு அதிகாரிகளுடன், தனது தகவல்களை வேஸ் நிறுவனம் பகிர்ந்துள்ளது. இதே போன்ற நெருக்கடியைத் தவிர்க்கும் ஒத்த நடவடிக்கைகள், போஸ்டனிலும் காணலாம், என்று தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "நாங்கள் சாலைப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதில்லை. தற்போது உள்ள கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்தி சிறப்பான முறையில் அதற்கான முயற்சிகளில் மட்டுமே ஈடுபடுகிறோம்" என்றார்.

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த உதவிய கூகுள் நிறுவனம்.!

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள செங்குத்தான சாலைகளில் ஒன்றான பாக்ஸ்டர் வீதியில் உள்ள இக்கோ பார்க் ஓட்டியுள்ள பகுதியில் கடும் சிக்கலைச்சந்திக்க வேண்டியுள்ளது. இந்தப் பகுதியில் அதிகரித்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை, ஸ்பின்அவுட்கள் மற்றும் இந்தச் சாலையில் பயணிக்கும் போது இரு சக்கர வாகன ஓட்டிகளை மிரள வைக்கும் வகையில் அமைந்த கண்ணுக்கு தெரியாத நீண்ட சரிவு கொண்ட பகுதிகளைக் கடக்கும் சம்பவங்கள் ஆகியவை குறித்து, இப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள், போக்குவரத்து அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து பாக்ஸ்டரில் வசிக்கும் ரோப்பி ஆடம்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிக்கையிடம் கூறுகையில், இந்த மாதத்தில் அடையாளம் தெரியாத பல வாகன ஓட்டிகள் தனது தோட்டத்தின் சுவர் மீது மோதி உள்ளதோடு, வீட்டிற்கு செல்லும் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது மனைவியின் கார் மீதும் மோதியதாக கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், "5 முதல் 6 கார்கள் மற்ற கார்களுடன் மோதுவதை நான் கண்டிருக்கிறேன். இது மேலும் மோசமடைந்து வருகிறது" என்றார்.

Best Mobiles in India

English summary
Waze Causing LA Traffic Headaches City Council Member Says ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X