Home
Apps

Jio நெட்வொர்க் வழியாக ஒவ்வொரு வாரமும் 6 மணி நேரத்திற்கு மேல் YouTube பார்ப்பீங்களா? அப்போ இது உங்களுக்கு தான்!

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான, முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது அதன் 2 ப்ரீபெய்ட் திட்டங்களின் கீழ் யூடியூப் பிரீமியம் சந்தாவை இலவசமாக வழங்குகிறது. அதென்ன திட்டங்கள்? யூட்யூப் பிரீமியம் என்றால் என்ன? இந்த இலவசம் உண்மையிலேயே வொர்த்-ஆ? இதோ பதில்கள்!

யூட்யூப் பிரீமியம் என்றால் என்ன? தற்போது உலகளவில் மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு சந்தாக்களில் ஒன்றாக உருமாறி வருகிறது.ஏனெனில் யூடியூப் பிரீமியம் மூலம், மக்கள் விளம்பரமில்லாத யூடியூப் அனுபவத்தை பெறுவதோடு மட்டுமல்லாமல், யூடியூப் மியூசிக்கிற்கான விளம்பரமில்லாத மற்றும் ஹை-ரெசல்யூஷன் அணுகலையும் பெறுகிறார்கள். மேலும், யூடியூப் பிரீமியம் மூலம், நீங்கள் யூடியூப் வீடியோக்களை உயர்-தெளிவுத்திறனில் பதிவிறக்கமும் செய்யலாம்.

Jio: ஒவ்வொரு வாரமும் 6 மணி நேரத்திற்கு மேல் YouTube பார்ப்பீங்களா?

அத்துடன் பாடல்கள் மற்றும் யூடியூப் வீடியோக்களுக்கு பேக்கிரவுண்ட் பிளே-பேக்கையும் இயக்கலாம். இலவசமாக கிடைக்கும் யூடியூப்பின் வழக்கமான அணுகலில் மேற்குறிப்பிட்ட நன்மைகள், வசதிகள் உங்களுக்குக் கிடைக்காது. யூடியூப் பிரீமியம் உடன் சேர்ந்து யூடியூப் லைட் சந்தாவும் உள்ளது, ஆனால் அது யூடியூப் பிரீமியம் அளவுக்கு சிறப்பாக இல்லை. யூடியூப் பிரீமியம் சந்தாவை இலவசமாக வழங்கும் திட்டங்களின் விவரங்கள் பின்வருமாறு:

ரிலையன்ஸ் ஜியோ ரூ.200 டேட்டா வவுச்சர் (ஓடிடி பாஸ் திட்டம்): ஜியோ நிறுவனம் அதன் ரூ.200 டேட்டா வவுச்சருடன் 30ஜிபி அதிவேக 4ஜி டேட்டாவை வழங்குகிறது. இந்த டேட்டா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள் ஆகும். இந்தத் திட்டத்துடன் வழங்கப்படும் ஓடிடி (ஓவர்-தி-டாப்) நன்மைகளில் யூடியூப் பிரீமியம் சந்தாவும் உள்ளது

கூடவே அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன், ஜியோஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5, லயன்ஸ்கேட் ப்ளே, டிஸ்கவரி பிளஸ், சன் நெக்ஸ்ட், கான்சா லன்கா, பிளானட் மராத்தி, சௌபால், ஹோய்ச்சோய், ஃபேன் கோட், டைம்ஸ் ப்ளே, தரங் பிளஸ் மற்றும் ஜியோடிவி ஆகிய தளங்களுக்கான அணுகல்களும் கிடைக்கும். யூடியூப் பிரீமியம் சந்தாவுடன் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் சந்தாவையும் பெறுவதற்கு, பயனர்கள் மைஜியோ (MyJio) ஆப்பிற்கு செல்ல வேண்டும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது

ரிலையன்ஸ் ஜியோ ரூ.500 ப்ரீபெய்ட் திட்டம்: ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.500 திட்டம், நிறுவனத்தின் மெகா கன்டென்ட் திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள் ஆகும். இந்த வவுச்சருடன் பயனர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா மற்றும் யூடியூப் பிரீமியம் உடன் சேர்த்து பின்வரும் ஓடிடி நன்மைகள் கிடைக்கின்றன.

அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன், ஜியோஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜியோ கேம்ஸ் மொபைல், ஜீ5, லயன்ஸ்கேட் ப்ளே, டிஸ்கவரி பிளஸ், சன் நெக்ஸ்ட், கான்சா லன்கா, பிளானட் மராத்தி, சௌபால், ஹோய்ச்சோய், ஃபேன் கோட், ஜியோடிவி மற்றும் ஜியோஏஐ கிளவுட் ஆகியவைகள் கிடைக்கும்
.
மேலும் ரூ.500 திட்டத்துடன் பயனர்களுக்கு வரம்பற்ற வாய்ஸ் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களும் கிடைக்கின்றன. இந்த திட்டத்துடன் 18 மாதங்களுக்கு கூகுள் ஏஐ ப்ரோ (Google AI Pro) சந்தாவும் இலவசமாக கிடைக்கும். இதை தொடர்ந்து பெற, பயனர்கள் ரூ. 349 அல்லது அதற்கு மேற்பட்ட திட்டத்தை தொடர்ந்து ரீசார்ஜ் செய்ய வேண்டியிருக்கும். மேலும் இலவச ஜியோஏஐ கிளவுட் சந்தாவின் கீழ் பயனர்கள் 50ஜிபி கிளவுட் ஸ்டோரேஜை இலவசமாக பெறுவார்கள். கடைசியாக இதன் கீழ் வரம்பற்ற 5ஜி டேட்டாவும் கிடைக்கும்.

ஜியோவுடன் இலவசமாக கிடைக்கும் யூடியூப் பிரீமியத்தின் அசல் விலை என்ன? நீங்கள் இந்த சேவையையோ தனியாக பெற விரும்பினால், ஒவ்வொரு மாதமும் அல்லது ஒரு முழு ஆண்டுக்கும் சந்தா கட்டணம் செலுத்த வேண்டும். யூடியூப் பிரீமியத்தின் மாதாந்திர கட்டணம் ரூ.149 ஆகும். ஒரு வருடத்திற்கு, பயனர்கள் இதை ரூ.1499-க்கு பெறலாம்.

கிஸ்பாட்டின் கருத்து: யூடியூப் பிரீமியம் சந்தா உண்மையிலேயே பயனுள்ளதா? நீங்கள் யூடியூப் தளத்தை அதிகமாக பயன்படுத்தினால், யூடியூப் பிரீமியம் நிச்சயம் பயனுள்ளது தான். ஏனென்றால், உங்கள் ஒவ்வொரு நாளும் விளம்பரங்களுடன் கூடிய வீடியோக்களை பார்க்க நீங்கள் கட்டாயப்படுத்தப்பட்டால், அது உங்கள் நேரத்தை அதிகம் விரயமாக்கும்.

ஒட்டுமொத்தமாக பார்த்தால் - ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு வருடமும், பல மணிநேரங்கள் மற்றும் நாட்கள் வெறும் விளம்பரங்கவே இருக்கும் - இது ஒரு பெரிய நேர விரயமாக இருக்கும். அதற்கு ஈடாக, நீங்கள் ஒரு சிறிய தொகையை மட்டும் செலுத்தினால் போதும். அது உங்கள் நேரமா, அல்லது உங்கள் பணமா என்பதுதான் கேள்வி. நீங்கள் இரண்டில் ஒன்றை விட்டுக்கொடுக்க வேண்டும். எனவே, நீங்கள் ஒவ்வொரு வாரமும் 5 முதல் 6 மணி நேரத்திற்கு மேல் யூடியூப்பை பயன்படுத்தினால், யூடியூப் பிரீமியம் சந்தாவை பெறுவது நல்லது. இல்லை என்றால் வேண்டாம்!

Best Mobiles in India

English summary
Watching YouTube More than 6 Hours Every Week Get Free YouTube Premium With Jio Rs 200 Rs 500
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X