நம்ம விஜய் சேதுபதி மற்றும் காவல்துறை வெளியிட்டுள்ள டிஜிகாப் சிறப்பம்சம் இதுதான்.!
இந்த செயலியில் உள்ள முக்கிய அம்சம் என்னவென்றால், சென்னையில் எந்தெந்தப் பகுதிகளில் வாகன நெரிசல் ஏறப்பட்டுள்ளது என்ற தகவல்களும் உடனக்குடன் தெரிந்துகொள்ள முடியும்.
இப்போது வளர்ந்துவரும் தொழில்நுட்பம் சில இடங்களில் மிகவும் பயனுள்ள வகையில் தான் இருக்கிறது, ஆனால் சில தொழில்நுட்பங்களில் தீமைகளும் உள்ளது. அதன்படி சென்னை மாநகர காவல் துறை சார்பில் டிஜிகாப் என்ற செல்போன் செயலி வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து டிஜிகாப் (DIGICOP) என்ற செயலியை வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காவல் துறையினர் அளிக்கும் சேவையை எளிமைப்படுத்தும் வண்ணம் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

செல்போன் தொலைந்தால்?
உங்களுடைய செல்போன் தொலைந்தால் இந்த டிஜிகாப் செயலி மூலம் உங்கள் செல்போனின் IMEI-ஐ பதிவு செய்து புகாரளிக்கலாம். பின்பு உங்களின் புகாரின் நிலை என்ன என்பதையும் அடிக்கடி செக் செய்து கொள்ளலாம்.

பழைய செல்போன்:
பொதுவாக நீங்கள் பழைய செல்போன் ஒன்றை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்றால், அது திருட்டு செல்போனா இல்லையாக என்பதை டிஜிகாப் செயலி மூலம் கண்டறியமுடியும். மேலும் செல்போனின் IEMI எண்ணை பதிவு
செய்தால் அது திருட்டு செல்போனா இல்லையா என்பதை சரிபார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது..

திருடர்களிடம் இருந்து போலீசார் கைப்பற்றிய செல்போன்:
திருடர்களிடம் இருந்து போலீசார் கைப்பற்றிய செல்போன்களில் தகவல்கள் டிஜிகாப் செயலியில் இருக்கும், எனவே உங்கள் செல்போன் திருடப்பட்டு அது பறிமுதல் செய்யப்பட்டிருந்தாலும் இந்த ஆப் மூலம் கண்டறிந்து போலீசாரிடம் சென்று பெற்றுக்கொள்ள முடியும்.

வாகனங்கள் குறித்த தகவல்
மேலும் போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் குறித்த தகவல்களும் இந்த ஆப்-ல் இடம்பெற்றுள்ளது, பின்பு தமிழகம் முழுவதும் இருக்கும் அனைத்து காவல் நிலையங்களின் முகவரி, தொடர்பு எண் ஆகியவையும் இந்த
செயலியில் இடம்பெற்றுள்ளது.

வாகன நெரிசல்
இந்த செயலியில் உள்ள முக்கிய அம்சம் என்னவென்றால், சென்னையில் எந்தெந்தப் பகுதிகளில் வாகன நெரிசல் ஏறப்பட்டுள்ளது என்ற தகவல்களும் உடனக்குடன் தெரிந்துகொள்ள முடியும்.

ஜி.பி.எஸ்
காவல்துறை சார்பில் வெளியிடப்படும் அறிவிப்புகள் மற்றும் செய்திகள் உடனுக்குடன் இந்த செயலியில் தெரிந்துகொள்ள
முடியும். பின்பு உங்களுக்கு அருகில் இருக்கு காவல் நிலையத்தை ஜி.பி.எஸ் மூலம் இந்த செயலி கண்டறிந்து கூறுகிறது. இந்த டிஜிகாப் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய முடியும்.


Click it and Unblock the Notifications